We have been working in UAE for low salary and struggle. There are more brothers away from their family due to financial problems. To overcome this issues there a business in UAE by which we can get some additional income to manage to keep our family with us in very less investment, which is not cost of you mobile and will not affect our current job. To know about the business please spare half hour in your valuable time. No entrance fee for training and presentation. For further please call me or mail me 0559570963 and kindrahman@yahoo.com

நீங்கள் எங்கிருந்தபோதிலும்

مُّشَيَّدَةٍ 4.78 “நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே! 4.78 15:99 وَاعْبُدْ رَبَّكَ حَتَّىٰ يَأْتِيَكَ الْيَقِينُ 15:99. உமக்கு மரணம் வரும்வரை உமது இறைவனை வணங்குவீராக! 6 22.6 وَهُوَ الَّذِي أَحْيَاكُمْ ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ يُحْيِيكُمْ ۗ إِنَّ الْإِنسَانَ لَكَفُورٌ 22:66. இன்னும்: அவன்தான் உங்களை வாழச் செய்கிறான்; பிறகு அவனே மரணம் அடையச் செய்கிறான். அதன் பின்னர் அவனே உங்களை உயிர்ப்பிப்பவன் (எனினும்) நிச்சயமாக மனிதன் நன்றிகெட்டவனாக இருக்கிறான். 23:99 حَتَّىٰ إِذَا جَاءَ أَحَدَهُمُ الْمَوْتُ قَالَ رَبِّ ارْجِعُونِ 23:99. அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது, அவன்: “என் இறைவனே! என்னைத் திரும்ப (உலகுக்குத்) திருப்பி அனுப்புவாயாக!” என்று கூறுவான். 45:26 قُلِ اللَّهُ يُحْيِيكُمْ ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ يَجْمَعُكُمْ إِلَىٰ يَوْمِ الْقِيَامَةِ لَا رَيْبَ فِيهِ وَلَٰكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ 45:26. “அல்லாஹ் உங்களுக்கு உயிர் கொடுக்கிறான்; பின்னர் அவனே உங்களை மரணம் அடையச் செய்கிறான்; பின்னர் கியாம நாளன்று அவன் உங்களை ஒன்று சேர்ப்பான் - இதில் சந்தேகமேயில்லை” எனினும் மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள் என்று (நபியே!) நீர் கூறும். ! by Mujibur's family

அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகதுஹு... யா அல்லாஹ்! உன்னை அதிகம் ஞாபகம் செய்யக்கூடியவராகவும், உனக்கு மிகவும் நன்றி செலுத்தக்கூடியவராகவும், உனக்கு அதிகம் வழிபடுபவராகவும், கட்டுப்படுபவராகவும், அடிபணிபவராகவும் என்னை ஆக்கியருள்வாயக! என் தவ்பாவை ஏற்றுக் கொள்வாயாக! என் பாவத்தைப் போக்கி விடுவாயாக! என் பிரார்த்தனையை ஏற்றுக் கொள்வாயாக! எனக்குரிய ஆதாரத்தை உறுதிப்படுத்துவாயாக! என் உள்ளத்திற்கு நேர்வழி காட்டுவாயாக! என் நாவை பலப்படுத்துவாயாக! என் உள்ளத்தின் கசடுகளை அகற்றிவிடுவாயாக!. !

family

Sunday 13 March 2011

நவீன தொடர்பு சாதனங்கள்

நவீன தொடர்பு சாதனங்கள்
முற்காலத்தைவிட தற்போது செய்தி மற்றும் தகவல் தொடர்புச் சாதனங்கள் நவீனமாக மிக அதிக அளவில், வியக்கத்தக்க வகையில் உள்ளன. பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ளவர்கள் மிக எளிதாக தொடர்பு கொள்ள முடிகிறது. எனவே ஒப்பந்தம் செய்து கொள்பவர்கள் தொலைவில் இருந்து கொண்டே தொலைபேசி, ஃபேக்ஸ், இண்டர்நெட் போன்றவற்றின் மூலம் ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். இருசாராரும் ஒரே இடத்தில் இருந்தால்தான் ஒப்பந்தம் கூடும் என அடம்பிடிப்பதில் நியாயமில்லை.
திருமண ஒப்பந்தம்
ஒப்பந்தங்களில் திருமண ஒப்பந்தம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், பரிசுத்தமானதாகவும், அதே சமயம் சிக்கலானதாகவும் இருப்பதால் திருமணம் செய்து கொள்ள விரும்பும் மணமகனும், மணமகளும் படர்கையில் இருக்கும்போது தபால் அல்லது தூதர் மூலமாக திருமண ஒப்பந்தம் செய்து கொள்ளலாம்.
இண்டர்நெட் மூலமான திருமண ஒப்பந்தம்
இண்டர்நெட் தகவல் சாதனம், தகவல் சாதனங்களில் மிகப்பெரும் சாதனையாகும். இதில் மணமக்கள் இருவரும் நேருக்கு நேராக அல்லது மறைமுகமகவோ ஒருவர் பிறரின் உருவத்தைப் பார்த்துக் கொண்டோ அல்லது பார்காமலோ அல்லது மணமக்கள் இருவரும் பிற தளங்களிள் பதிவு செய்து முறையான திருமண ஒப்பந்தம் செய்து கொள்ள முடியும். எனினும் ஈஜாப் - கபூல் இரண்டும் எழுத்து வடிவில் மட்டும் இருந்தால் போதாது. உதாரணமாக மணமகன் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டி மணமகளுக்கு ஈமெயில்செய்கிறார். அந்த ஈமெயிலைப் பார்த்த மணமகள் தனது விருப்பத்தைத் தெரிவித்து மணமகனுக்கு சம்மதத்தை ஈமெயில் மூலம் தெரிவிக்கிறார். இரண்டு பக்கமும் இரண்டிரண்டு சாட்சிகள் இருந்து எழுத்து வடிவிலான ஈஜாப் - கபூலைப் பார்க்கிறார்கள். இந்த மாதிரியான திருமண ஒப்பந்தத்தில் இந்த திருமணத்திற்கு நான் சம்மதிக்கிறேன்என வாய் மூலம் கூறினாள் சரியை.
எச்சரிக்கை!
மேற்கண்ட அனைத்து வசதிகள் மூலமாகவும் திருமண ஒப்பந்தம் கூடும் என்றாலும் திருமண ஒப்பந்தம் மற்ற ஒப்பந்தங்களைப் போன்றதல்ல. அது மிகவும் புனிதமானது, சிக்கலானது, முக்கியமானதுமாகும் என்பதை மறந்துவிடக் கூடாது. குறிப்பாக இண்டர்நெட் மூலமான திருமண, இண்டர்நெடில் திருமண ஒப்பந்தம், தொலைபேசித் திருமணம், வகீல் நியமித்துச் செய்தல் போன்றவற்றை தவிர்க்க முடியாத நிலையிலை தவிர. மேலும் இவ்வொப்பந்தம் ஒரே கனெக்ஷனில் (Connection) நடைபெற்று முடிந்து விட வேண்டும். ஒப்பந்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது இண்டர்நெட் தொடர்பு (கனெக்ஷன்) துண்டிக்கப்பட்டால் மீண்டும் புதிதாக ஒப்பந்தத்தை இருசாராரும் துவங்க வேண்டும். பிற தளங்களிள் பதிவு செய்யும் போது குறப்பான சில நினைவுகளை மற்றும் சில   முக்கியமான விஷயங்களை  மறந்துவிடக் கூடாது
நபி (ஸல்) அவர்கள் எச்சரித்தார்கள்:
'மார்க்கத்திலும், குணத்திலும் (சிறந்த) நீங்கள் விரும்பும் மனிதர் உங்களிடம் (மணப்பெண் கேட்டு) வந்தால் அவருக்கு திருமணம் செய்து வையுங்கள்’, அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால், பூமியில் கடுமையான குழப்பமும், ஒழுக்கமின்மையும், அமைதியின்மையும் ஏற்படும்.' அறிவிப்பு : அபூஹூரைரா (ரலி), ஆதாரங்கள் : திர்மிதி, ஹாகிம், முஸ்னத் அஹ்மத்.
இந்த ஹதீஸை பெற்றோர்கள் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும். பெரும்பாலான திருமணங்களில் மணமகனின் ஒலுக்கத்தைப் பற்றி சிறிதேனும் கவலைப்படாமல் குடும்ப உறவு குடும்ப பாரம்பரியம் சொத்து போன்ற இரண்டாம்பட்ச தகுதிகள் முன்னிலைப்படுத்தப்பட்டு திருமணம் முடிக்கப்படுகிறது. ஒழுக்கமற்ற பையனால் பெண்ணின் வாழ்க்ககை சீரழிந்து விட்டால் என்ன செய்வது என்றக் கவலையெல்லாம் ஏற்படுவதேயில்லை. பையனின் ஒழுங்கீனங்களைப் பற்றி யாராவது சுட்டிக் காட்டினால் கூட எல்லாம் கல்யாணத்திற்கு பிறகு சரியாகிவிடும்என்ற பதிலே பெண்ணைப் பெற்றோர்களால் (குறிப்பாக பெண்களால்) முன்வைக்கப்படுகிறது. திருமணத்திற்கு பிறகு அவன் திருந்தா விட்டால் பெண்ணின் நிலை என்னாவது? என்ற கேள்வியெல்லாம் இங்கு எழுவதேயில்லை.
அதே சமயம், மார்க்க அறிவும், சிறந்த குணமும் கொண்ட ஒருவன் அவனாக முன் வந்து உங்கள் பெண்ணைக் கட்டிக் கொள்கிறேன் என்று கேட்டால் ஏதோ தவறு நடந்து விட்டது போன்று அங்கு பிரச்சனைகள் வெடிக்கும். இதை இன்றைய நடைமுறையில் கண்டு வருகிறோம். ஆனால் மேற்கண்ட நபிமொழி நல்லொழுக்கம் உள்ளவர் பெண் கேட்டால் கொடுங்கள்என்ற அறிவுரையை முன் மொழிகிறது.
அல்லாஹ் வரையறுக்கின்றான்: (அல்லாஹ்வுக்கு) இணை வைக்கும் பெண்களை அவர்கள் இறைநம்பிக்கை (ஈமான்) கொள்ளும் வரை நீங்கள் திருமணம் செய்யாதீர்கள். இணை வைக்கும் ஒரு பெண் உங்களைக் கவரக் கூடியவளாக இருந்த போதிலும், அவளைவிட இறை நம்பிக்கையுடைய (முஃமினான) ஓர் அடிமைப்பெண் நிச்சயமாக மேலானவள் ஆவாள். அவ்வாறே இணைவைக்கும் ஆண்களுக்கு அவர்கள் இறை நம்பிக்கை (ஈமான்) கொள்ளும் வரை (முஃமினான பெண்களை) நீங்கள் திருமணம் செய்து வைக்காதீர்கள். இணைவைப்பவன் உங்களுக்கு கவர்ச்சியூட்டுபவனாக இருந்தபோதிலும், ஒரு முஃமினான அடிமை அவனை விட மேலானவன். (அல்குர்ஆன் 2:221)
'விபச்சாரன் விபச்சாரியையோ அல்லது இணை வைத்து வணங்குபவளையோ அன்றி வேறு எந்த பெண்ணையும் திருமணம் செய்யமாட்டான், விபச்சாரி விபச்சாரணையோ அல்லத இணைவைத்து வணங்குபவனையோ அன்றி (வேறு எவரையும்) திருமணம் செய்ய மாட்டாள். இது இறை நம்பிக்கையாளர்களுக்கு விலக்கப்பட்டிருக்கிறது.' (அல்குர்ஆன் 24:3)
'பெண்களை அவர்களின் அழகுக்காக மணம் முடிக்காதீர்கள்' அவர்களின் அழகு அவர்களை அழித்து விடலாம், அவர்களின் செல்வத்திற்காக மணம் முடிக்காதீர்கள்’, அவர்களின் செல்வம் அவர்களை தடுமாறி தவற செய்துவிடலாம், அவர்களின் நல்லொழுக்கத்திற்காக மணம் முடியுங்கள். நல்லொழுக்கமுள்ள அழகற்ற அடிமைப்பெண் (தீய ஒழுக்கமுள்ள) அழகிய பெண்ணை விட மேலானவள்' அறிவிப்பு: அப்துல்லாஹ் பின் அமர் (ரலி), ஆதாரங்கள்: இப்னு ஹிப்பான், முஸ்னத் அஹ்மத்.
அன்பு செலுத்தும்;, அதிகக் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் (பாரம்பரிய) பெண்களை மணம் முடித்துக் கொள்ளுங்கள். உலக மக்களுக்கு மத்தியில் (நீங்கள் அதிகமாக இருப்பது கண்டு) நான் பெருமிதம் அடைவேன் என ரசூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பு: மஃகலு பின் யஸார் (ரலி), அனஸ் பின் மாலிக் (ரலி), ஆதாரங்கள்: அபூதாவூத், நஸயீ, முஸ்னத் அஹ்மத்.
மணமக்கள் திருமணத்திற்கு முன் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளுங்கள்.
நபித்தோழர் முகீரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:  'நான் ஒரு பெண்ணை மணமுடித்துக்கொள்ள பேசியிருந்தேன். இதனை அறிந்த ரசூல் (ஸல்), நீர் அப்பெண்ணைப் பார்த்துக் கொள்ளும், ஏனெனில் அது உங்களிருவருக்கிடையில் உவப்பையும்,  நட்பையும், இணக்கத்தையும் ஏற்படுத்தக்கூடும் என் அறிவுரைப்பகன்றார்கள்.' ஆதாரங்கள்: நஸயீ, திர்மிதி, முஸ்னத் அஹ்மத்.
ஒரு நபித்தோழர் ரசூல் (ஸல்) அவர்களிடம் வந்துதான் ஒரு மதீனத்து (அன்சார்) பெண்ணை மணமுடிக்க நிச்சயித்திருப்பதாகக் கூறினார். நபி (ஸல்) அவர்கள் நீர் அப்பெண்ணை நேரில் கண்டீரா? எனக் கேட்டார்கள். அதற்கு நபித் தோழர் இல்லை என்றார். நபி (ஸல்) அவர்கள் நீர் சென்று பார்த்துக் கொள்வீராக! (பின் விவகாரமாகக் கூடாது) எனக் கூறினார்கள். அறிவிப்பு: அபூஹூரைரா (ரலி) ஆதாரம்: முஸ்லிம், முஸ்னத் அஹ்மத்.
'ஒருவர் ஒரு பெண்ணை மணம் முடிக்க பேசிக் கொண்டிருக்கையில் மற்றொருவர் அப்பெண்ணை மண முடிக்க (நிச்சயம்) பேசக்கூடாது' என நபி (ஸல்) அவர்களை வலியுறுத்தினார்கள்’, அறிவிப்பு: அபூஹீரைரா, இப்னு அமர், உக்பா இப்னு அம்மார். ஸம்ரா பின் ஜூன்தும் (ரலி அன்ஹூம்) ஆதாரங்கள்: ஸஹீஃபா ஹம்மாம், முஅத்தா மாலிக், புகாரி, முஸ்லிம், அபூதாவூத், நஸயீ, தாரமி, திர்மிதி, இப்னுமாஜா..
ரசூல் (ஸல்) அவர்கள் மணமுடித்த ஒரே கன்னிப் பெண்ணான ஆயிஷா (ரலி) அவர்களை அல்லாஹ் கனவில் இருமுறைக் காட்டி உங்களது மனைவியென பிரகடணப்படுத்தினான். அறிவிப்பு: ஆயிஷா (ரலி) ஆதாரம்: புகாரி.
குறிப்பு: நபி (ஸல்) அவர்கள் தங்கள் வாழ்வில் மணமுடித்த அனைத்து மனைவிகளையும் நேரில் பார்த்து அவர்களது முழு சம்மதத்துடனே மணமுடித்தார்கள் என்பது ஆதாரப்பூர்வமான செய்தியாகும்.
நபி (ஸல்) அவர்களின் அருமை மகள் பாத்திமா (ரலி) அவர்களை நேரில் கண்டு பின் நபி (ஸல்) அவர்களிடம் தனக்கு ஃபாத்திமா (ரலி) அவர்களை மணம் முடித்து தரும்படி அலீ (ரலி)  அவர்கள் கோரிக்கை வைத்தார்கள். அதனை ஏற்று நபி (ஸல்) அவர்களும் மணம் முடித்து வைத்தார்கள். ஆதாரம்: இப்னு ஸஃது
நபி (ஸல்) கூறினார்கள்: எந்த ஒரு பெண் தன் பொறுப்பாளர் (வலீ) அனுமதியின்றி திருமண சம்மதம் தெறிவிக்கிறாளோ அத்திருமணம் செல்லாது, அத்திருமணம் செல்லாது, அத்திருமணம் செல்லாது. அப்பெண்ணுடன் உடலுறவு கொள்வதை மஹர் தொகை அனுமதிக்கிறது. எவளொருவளுக்கு வலீயில்லையோ அவளுக்கு அரசர் வலீயாவார். அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), ஆதாரங்கள்: அபூதாவூத், திர்மிதி.
நபி (ஸல்) கூறினார்கள்: ஒரு (மணப்) பெண்ணை மற்றொரு பெண் (வலீயாக இருந்து) மணம் செய்விக்கக் கூடாது. மணப்பெண் தன்னையே (வலீயின்றி) மணம் செய்தல் கூடாது. அறிவிப்பு: அபூஹூரைரா (ரலி) ஆதாரங்கள்: இப்னுமாஜா, தாரகுத்னி, பைஹகி
எந்தப் பெண் கிடைத்தாலும் கட்டிக் கொள்ளலாம் என்ற இலக்கற்ற நிலையில் திருமணத்திற்கு தயாராகி விடாதீர்கள். உங்களுக்கு வாழ்கைத்துணையாக வருபவள் உங்களில் பாதியாக வாழப்போகிறவள் என்பதை கவனத்தில் வையுங்கள். திருமணத்திற்கு முன் மனைவியாக வருபவள் யார்? என்பதை கவனியுங்கள்.
அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்;. (அல் குர்ஆன் 2:188)
கணவன் மனைவியின் உறவை இதைவிட ரத்தினசுருக்கமாகவும், அழகாகவும், அழுத்தமாகவும் வேறு யாரும் சொல்லவே முடியாது என்ற அளவிற்கு இறைவன் நீங்கள் அவர்களுக்கும் அவர்கள் உங்களுக்குமாக நீங்கள் ஒருவருக்கொருவர் ஆடையாவீர்கள்என்று விளக்குகிறான். நம் உடம்புடன் ஒட்டி உறவாடும் உடையை தேர்ந்தெடுப்பதற்கு நாம் எவ்வளவு கவனம் செலுத்துகின்றோமோ அதை விட கூடுதல் கவனம், வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் போது இருக்க வேண்டும்.
அந்த வகையில் வாழ்க்கைத் துணையாக வருபவள் யாராக இருக்க வேண்டும் என்பதை இஸ்லாம் விளக்குகிறது.
ஒரு பெண் அவளது அழகு, செல்வச்செழிப்பு, குடும்ப கௌரவம், மார்க்கப்பற்று என்ற நான்கு விஷயங்களுக்காக மணமுடிக்கப்படுகிறாள். மார்க்கப் பற்றுள்ள பெண்ணையே மணமுடித்து வெற்றி பெறுவீராக! என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள். அபூஹூரைரா, அபூஸயீத் அல்-குத்ரி, ஜாபிர் போன்ற நபித்தோழர்கள், புகாரி, முஸலிம், அபூதாவுத், தாரமி, நஸயீ, இப்னுமாஜா
மனதிற்கு பிடித்த உடை உடலுக்கு சுகமளிப்பது போன்று மார்க்கப் பற்றுள்ளப் பெண் வாழ்க்கைக்கு சுமகளிப்பாள்.மார்க்கப் பற்று என்றவுடன் எல்லா வகையிலும் நூறு சதவிகிதம் மார்க்கப்பற்று உள்ளவளாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்துவிடக் கூடாது. முதலாவதாக ஷிர்க் எனும் கொடிய இணைவைத்தல் என்ற மாபாவத்திலிருந்து அவள் விடுபட்டிருக்க வேண்டும்.
இணை வைக்கும் பெண்களை அவர்கள் இறைநம்பிக்கை கொள்ளும் வரை நீங்கள் திருமணம் செய்யாதீர்கள். இணை வைக்கும் ஒரு பெண் உங்களைக் கவரக் கூடியவளாக இருந்த போதிலும், அவளைவிட இறை நம்பிக்கையுடைய ஓர் அடிமைப்பெண் நிச்சயமாக மேலானவள் ஆவாள். (அல் குர்ஆன் 2:221)
அழகு அந்தஸ்து என்று அனைத்தும் இருந்தும் ஓரிறைக் கொள்கையே வாழ்க்கை என்ற உறுதிப்பாடு மட்டும் இல்லாமல் போய் விட்டால் முஸ்லிமான ஒரு ஆண்மகனுக்கு துணையாக வர அவள் தகுதியற்றவள் என்று இறைவன் பகிரங்கமாகவே கூறியுள்ளதால் முஸ்லிமல்லாத பெண்களிலிருந்து முஸ்லிம் என்ற பெயர் வைத்துக் கொண்டு இறை நம்பிக்கையில் கலப்படம் செய்து தர்கா போன்ற வழிபாடுகளை நடத்தும் பெண்கள் உட்பட இந்த வகையில் அடங்கி விடுவார்கள். அத்தகையப் பெண்களை புறந்தள்ளி வைக்கத்தான் வேண்டும்.
அன்பு செலுத்தும்; அதிகக் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் பெண்களை மணம் முடித்துக் கொள்ளுங்கள். உலக மக்களுக்கு மத்தியில் (நீங்கள் அதிகமாக இருப்பது கண்டு) நான் மகிழ்வேன் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (மஃகலு பின் யஸார் (ரலி), அனஸ் பின் மாலிக் (ரலி), அபூதாவூத், நஸயீ, முஸ்னத் அஹ்மத்.
இவ்வுலகம் இன்பகரமானது, உலக இன்பங்களில் மிகவும் சிறப்பானது நல்ல மனைவியை அடைவதாகும் என்பது நபிமொழி. முஸ்லிம்
நான் ஒரு பெண்ணை மணமுடித்துக்கொள்ள பேசியிருந்தேன். இதனை அறிந்த இறைத்தூதர் (ஸல்), நீர் அப்பெண்ணைப் பார்த்துக் கொள்ளும், ஏனெனில் அது உங்களிருவருக்கிடையில் உவப்பையும், நட்பையும், இணக்கத்தையும் ஏற்படுத்தக்கூடும் என் அறிவுரைப்பகன்றார்கள். நஸயீ, திர்மிதி, முஸ்னத் அஹ்மத்
இந்த சமுதாயத்தில் மூடத்தனமாக நீடித்து வரும் ஒரு கேவலத்தை இந்த ஹதீஸ் மறுக்கிறது. திருமண பேச்சு ஒரு குடும்பத்தில் துவங்கி தன் மகனுக்கு பெண் பார்க்க பெற்றோர்கள் துவங்கி விட்டால் பெற்றோர்கள் குடும்பத்தார் உடன் பிறந்தவர்கள் (சில இடங்களில் மாமன் மச்சான்கள் உட்பட) அந்தப் பெண்ணைப் பார்த்து விடுவார்கள். மாப்பிள்ளை மட்டும் திருமணம் முடிந்தப் பிறகே அந்தப் பெண்ணைப் பார்ப்பான். அவளும் கூட அப்படித்தான். இந்த எதிர்மறையான கலாச்சாரம் எங்கிருந்துதான் இந்த சமுதாயத்தில் புகுந்தது என்றுத் தெரியவில்லை. பிற அனைத்து சமூகங்களிலும் திருமணத்திற்கு முன் மாப்பிள்ளையும் பெண்ணும் ஒருவரையொருவர் பார்க்கிறார்கள். பிடித்திருக்கா இல்லையா என்பதை முடிவு செய்கிறார்கள். ஆனால் இங்கு நேர்மாற்றமாக நடக்கிறது. இதற்கு இஸ்லாமிய முத்திரை வேறு குத்தப்படுகிறது. தனக்கு வரப்போகும் துணைப் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு இருக்கும். அதை நேரில் பார்ப்பதன் மூலமே உறுதிப்படுத்த முடியும். இதற்கு தடைப்போடுவது எந்த வகையிலும் நியாயமில்லை.
நபி(ஸல்) அவர்களின் செய்தியில் நபி(ஸல்) அவர்களாகவே முந்திக் பெண்ணைப் பார்த்துக் கொள்ளும்என்கிறார்கள். பிரிதொரு நபித்தோழர் விஷயத்திலும் இதையே வலியுறுத்தியுள்ளார்கள்.ஒரு நபித்தோழர் நபி; (ஸல்) அவர்களிடம் வந்து, ஒரு மதீனத்து பெண்ணை மணமுடிக்க நிச்சயித்திருப்பதாகக் கூறினார். நபி (ஸல்) அவர்கள் நீர் அப்பெண்ணை நேரில் கண்டீரா? எனக் கேட்டார்கள். அதற்கு நபித் தோழர் இல்லை என்றார். நபி (ஸல்) அவர்கள் நீர் சென்று பார்த்துக் கொள்வீராக! எனக் கூறினார்கள். அபூஹூரைரா (ரலி) முஸ்லிம், முஸ்னத் அஹ்மத்
திருமண வாழ்க்கை என்பது சந்தை வாழ்க்கையல்ல கூடி களைவதற்கு. அது தலைமுறைகளை உருவாக்கக் கூடிய ஒரு ஒப்பந்தமாகும். அந்த ஒப்பந்தத்தில் மனதிற்கு பிடிக்காத பெண்ணோ ஆணோ கையொப்பமிட்டு இணையும் போது வாழ்க்கை கசந்துப் போகும். சந்தோஷமாக இருப்பதற்காகத்தான் திருமண வாழ்க்கை. அங்கு மனம் பொருந்தியவர்கள் இணைவதுதான் முறை. அதற்கு வழி வகுக்கத்தான் பெண்ணைப் பார்த்துக் கொள்என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள். எனவே திருமணத்திற்கு முன் மணமுடிக்கப போகிறவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இறை நம்பிக்கை கொண்டவர்களே! பெண்களை (அவர்கள் மனப்பொருத்தம் இல்லாத நிலையில்) நீங்கள் பலவந்தப்படுத்தி அனந்தரமாகக் கொள்வது உங்களுக்குக் கூடாது.(அல்குர்ஆன் 4:19)
விதவை, விவாக முறிவுப் பெற்ற பெண்களை அவர்களது முழு சம்மதமின்றி திருமணம் செய்து வைக்காதீர்கள், பருவ கன்னிப் பெண்களிடம் திருமணம் விஷயமாக அனுமதி பெற வேண்டும் என்று நபி(ஸல்) கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! ஒரு கன்னிப்பெண் (நாணத்தால் தன் எண்ணத்தைக்) தெளிவாகக் கூற வெட்கப்படுவாளே! என கேட்கப்பட்டது அதற்கு நபி அவளது மௌனமே சம்மதமாகும்என்றார்கள்.(ஆயிஷா, இப்னு அப்பாஸ், அபூஹூரைரா (ரலி அன்ஹூம்), புகாரி, முஸ்லிம்திருமணத்திற்கு பெண்களின் முழு மன சம்மதம் பெறுவது அவசியமாகும்.
பெண்ணுக்கு பாதுகாவலர் உரிமையுடையவர்.வலியின்றி (எந்தப் பெண்ணுக்கும்) திருமணமில்லை என்று இறைத்தூதர் கூறியுள்ளார்கள். இந்தச் செய்தி அபூ மூஸா, அபூ ஹூரைரா, இப்னுஅப்பாஸ், அனஸ், ஆய்ஷா போன்ற நபித்தோழர்கள் மூலம்அறிவிக்கப்பட்டுள்ளது. (திர்மிதி)
பெண்ணைத் திருமணம் முடித்துக் கொடுக்கும் பொறுப்பில் உள்ளவர்கள் அந்தப் பெண்ணிற்கு வலியாவார்கள். அவர்களின்றி ஒரு பெண் திருமணம் செய்ய முடியாது.
சாட்சிகளின்றி தானாக திருமணம் செய்யும் பெண்கள் விபச்சாரிகளாவர் என்று இறைத் தூதர் எச்சரித்துள்ளார்கள். அபூ ஹூரைரா, இப்னு அப்பாஸ், இம்ரான் இப்னு ஹூஸைன், இப்னு அப்பாஸ் போன்ற நபித்தோழர்கள் இதை அறிவிக்கிறார்கள்.(திர்மிதி)
சாட்சியம் என்பது பின்னர் ஏற்படும் பிரச்சனைகளை எதிர் கொண்டு அதற்கு தீர்வு சொல்லும் முக்கியத்துவம் வாய்ந்தது.
பெண்பார்ப்பதற்கு குறித்த பெண்ணின் அனுமதி கேட்கத்தேவையில்லை என்பது பெரும்பான்மையான உலமாக்களின் கருத்தாகும் இமாம் மாலிக் அவர்கள் பெண்ணுக்கு அறியப்படுத்திய பின்னால் பார்த்தால் அவள் தன்னை அழகுபடுத்திக் கொள்வதற்கு முடியுமாக இருக்கும் என கூறிய போதிலும் பெரும்பான்மையான உலமாக்களின் கருத்து மிகவும் ஏற்றதாகத் தெரிகின்றது. காரணம் ஒரு ஆண் சில வேளை பெண்ணை விரும்பலாம். சில வேளை விரும்பாமலும் இருக்கலாம். விரும்பவில்லை என்றாலும் கூட குறித்த பெண்ணுக்கு விடயம் தெரியாததால் அவளுக்கு உலவியல் ரீதியான தாக்கங்கள் ஏற்படப்போவதில்லை. எனவே பெண்ணின் அனுமதியில்லாமலும் குறித்த பெண்ணை பார்ப்பதற்கு ஆணுக்கு அனுமதிக்க முடியும். அதே வேளை இந்த விடயத்தில் பெண்ணை இச்சையோடு பார்ப்பது மார்க்கத்தில் கண்டிக்கப்பட்ட அம்சங்களாகும்.
பொதுவாக நபியவர்கள் பெண்ணை பார்ப்பதற்கு அனுமதித்த செய்திகளில் இருந்து மேற்குறிப்பிட்ட நவீன ஊடகங்களின் ஊடாக அவளைப்பார்ப்பதற்கு அனுமதி அளிக்க முடிகின்றது. இது விடயத்தில் மிகவும் தெளிவாகவும் சந்தேகத்திற்கு இடமில்லாமல் உறுதியாகவும் இருக்கும் பட்சத்தில் அனுமதிக்க முடிகின்றது. என்றாலும் இன்றைய சூழலில் அதிகமான தில்லுமுல்லுகள் தங்கையைக் காட்டி அக்காவைக் கொடுக்கும் கில்லாடி வேளைகள் இடம் பெருவதாலும் தரகர்களின் திருவிளையாடல்கள் மலிந்து போய் உள்ளதாலும் இதனை பலர் அனுமதிப்பது கிடையாது. இஸ்லாத்தில் எந்த விடயத்திலும் ஏமாற்றுதலுக்கு இடமில்லை என்பதனை குறித்த தரப்பினர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். அதே வேளை அனுமதிக்க முடியாது என்பவர்களின் வாதத்திற்கு வழு சேர்க்க பின்வரும் விடயங்களை முன்வைக்கின்றனர்.
-       நிழற்பிரதியைப் பொறுத்தவரையில் ஒரு பெண்ணின் யதார்த்தமான உருவத்தை நவீன கருவிகளைக் கொண்டு பல்வேறு மாற்றங்கள் செய்து அழகு படுத்தலாம்.
-       இதற்கு எதிர் மரையாக நேரடியான தோற்றத்திற்கு மாற்றமான அசிங்கமான தோற்றத்தைக்கூட புகைப்படங்கள் ஏற்படுத்தலாம்.
-       இவ்வாரான புகைப்படங்கள் அல்லது messenger ஊடாக பெண்ணைப்பார்த்து விட்டு சில நயவஞ்சகர்கள் குறித்த பெண்ணை இணையத்தின் internet ஊடாக கேவலப்படுத்த முனையலாம்.
எனவே இது போன்ற காரணங்களினால் இவ்வாரான நவீன வசதிகளினூடாக பெண் பார்ப்பதை தவிர்த்துக் கொள்வது மிகவும் ஏற்றமானது. வேறு வழியில்லாமல் இவ்வழிகளில்தான் பார்த்து ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்படும் சந்தர்ப்பத்தில் இரு தரப்பும் சரியான முறையில் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
தொடர்ந்து ஒரு ஆண் பெண் பார்ப்பதன் ஒழுங்கு முறைகளையும் சில சட்டங்களையும் அவதானித்தோம். தற்போது ஒரு பெண்ணுக்கு ஆணைப்பார்க்க முடியுமா என்று பார்ப்போம். ஒவ்வொரு பெண்ணுக்கும் ஆணைப் போன்றே தனக்கு வரவிருக்கும் கணவர் எவ்வாரெல்லாம் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புகள் இருக்கலாம். எனவே இஸ்லாம் பெண்ணின் விருப்பு வெறுப்பிற்கும் செவி சாய்த்து பெண்ணுக்கு ஆணைப்பார்ப்பதற்கு அனுமதி வழங்குகின்றது. இன்றைய எமது சமூக சூழலில் பெண்ணுக்குறிய இந்த உரிமை கொடுக்கப்படும் வீதம் மிகவும் குறைந்துள்ளது. சில வேளை பெற்றோர் மாப்பிள்ளையை காட்டாமலே நான் கீறிய கோட்டை எனது பிள்ளை தாண்டாதுஎன இருமாப்பாக சொல்லிக் கொண்டு நேரடியாக திருமண ஒப்பந்தங்கள் நடை பெருகின்றமை பெண்ணுக்கு இழைக்கும் பெரும் கொடுமை என்று சொல்லலாம். அற்ப பணத்திற்காக தனது பிள்ளையை UK மற்றும் America மாப்பிள்ளைக்கு விற்றுவிடக் கூடிய பெற்றோர் பெண்ணுக்கு மாப்பிள்ளை பிடிச்சிருக்கா? இல்லையா? என்பதைக் கேட்கத் தவறிவிடுகின்றனர். இதனால் எமது சமூக அமைப்பில் பல்வேறு சிக்கல்கள் குறிப்பாக தலாக் மற்றும் கணவன் இருக்க இன்னொருவனோடு ஓடிப்போகும் சமபவங்கள் இடம் பெரு
Download As PDF

Facebook Comments

0 comments:

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out