பொய்யன் கூட்டத்தின் ஒன்பது ஃபதவா
பிறை பற்றிய பொய்யர்களின் ஆறு விதமான நிலைபாடுகள்:
தட்டுதறிகெட்ட பொய்யன் கூட்டம் பிறை விஷயத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முதலில் தத்தமது பகுதி பிறை என்றார்கள், பிறகு தமிழக அளவில் பிறை என்று மாறி மாறி பேசுகின்றார்கள் என்று ஊளையிட்டு வருகிறார்கள்.
தமிழ்நாட்டை நாம் எல்லையாக வகுக்கலாம்; யார் மீதும் இது திணிக்கப்படாது என்ற நிலைப்பாட்டை கடந்த 2008 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் TNTJ யின் ஆலிம்கள் ஒன்று கூடி முடிவு எடுத்த போது, இந்த பொய்யன் கூட்டம் அப்போது நம்மோடு தான் இருந்தது. அப்போது இது அற்புதமான முடிவு என்று வரவேற்று விட்டு இப்போது நாம் இவர்களை இவர்களது கேடுகெட்ட செயல்களுக்காக நீக்கிய பிறகு இது தவறு என்று ஊளைக் கூப்பாடு போட்டு வருகின்றனர். உண்மையிலேயே இந்தப் பொய்யன் கூட்டத்தின் கொள்கை தான் என்ன என்பதை நாம் ஆய்வு செய்தோம். இதன் விளைவாக பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியிருக்கின்றது. அவற்றை ஒவ்வொன்றாக இப்போது பார்ப்போம்.
பொய்யன் நிலைபாடு 1:
நாம் இந்த கேடுகெட்டவர்களை நமது இயக்கத்திலிருந்து நீக்குவதற்கு முன்பும், நீக்கிய பின்பும் இவர்களது நிலைபாடு பிறை விஷயத்தில் லோக்கல் பிறையைத் தான் ஏற்க வேண்டும். சர்வதேச பிறையை ஏற்கக் கூடாது. அவ்வாறு சர்வதேசப் பிறையை ஏற்க வேண்டும் என்று சொல்லக் கூடியவர்கள் பொது மக்களைச் சீரழிக்கக் கூடியவர்கள் என்று கடுமையாகச் சாடி எழுதினார்கள். அவர்கள் இணையதளத்தில் எழுதியதை ஸ்கிரீன் ஷாட்டில் பார்க்கவும்.
அதாவது பொய்யன் கூட்டத்தில் உறுப்பினராக இல்லாமல் மாநிலச் செயலாளரான அப்துல் ஹமீத் மக்களைச் சீரழிக்கக் கூடியவர் என்று நற்சான்று அளித்துள்ளனர். தங்களால் சமுதாயத்தை சீரழிப்பவர் என்று பட்டம் சூட்டப்பட்டவரை மாநிலச் செயலாளர் என்று நியமித்துள்ள அதிசயத்தை எந்தா இயக்கத்திலும் காண முடியாது.
பிறை விஷயத்தில் லோக்கல் பிறையைத் தான் ஏற்க வேண்டும். சர்வதேசப் பிறையை ஏற்கக் கூடாது என்பது எப்படி என்பதை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ரமலான் நோன்பு விஷயத்தில் செயல்முறை விளக்கம் காட்டியது இந்த பொய்யன் கூட்டம்.
அதாவது தமிழகத்தில் 12.08.10 அன்று ரமலான் நோன்பு ஆரம்பமானது. ஆனால் தமிழகத்திற்கு ஒரு நாளைக்கு முன்பே கேரள மாநிலத்தில் பிறை தென்பட்டது. அப்போது இந்தப் பொய்யன் கூட்டம் கேரள மாநிலத்தில் பார்க்கப்பட்ட பிறையை ஏற்கவில்லை. தமிழகத்தில் பிறை தென்பட்டால் தான் ஏற்றுக் கொள்வோம் என்று நமது நிலைப்பாட்டையே வழிமொழிந்தார்கள். அவர்கள் நெட்டில் எழுதிய லோக்கல் பிறை என்பது தமிழக அளவில் பார்க்கப்படும் பிறை தான் என்பதற்கு செயல்முறை வடிவம் தந்தது இந்தப் பொய்யன் கூட்டம்.
பொய்யன் நிலைபாடு 2:
அதே போன்று இந்தப் பொய்யன் கூட்டம் கடந்த துல்ஹஜ் பிறையைக் கூட தமிழகத்தில் பிறை பார்க்கப்பட்டதாகக் கூறித் தான் 17.11.10 புதன் அன்று பெருநாள் கொண்டாட திட்டமிட்டனர்.
அதனால் தான் ”ஜல் புயல்” காரணமாக தமிழகமே மேகமூட்டத்தால் சூழப்பட்டிருந்த நிலையிலும், தங்களது பாணியில், (அதாவது துணிந்து பொய்யை இட்டுக்கட்டும் பாணியில்) தமிழகம் முழுவதும் பரவலாக பிறை தென்பட்டதாக துணிந்து பொய்யை பரப்பினார்கள்.
அவர்கள் எழுதிய வசகங்கள் இதோ,
தமிழகத்தில் சென்னை தவிர ஏனைய பெரும்பாலான ஊர்களில் பிறை தெரிந்ததாக டவுன் காஜி ,ஜமாத்துல் உலமா உள்பட , அனைவரும் அறிவித்த நிலையில் , லட்சக்கணக்கான [?!] த.த.ஜ. தொண்டர்களுக்கும் .அவர்களின் பிறைக் குழுவினருக்கும் [?!] தெரியாமல் போனது ஆச்சர்யமே!
இதை அவர்களது இணையதளத்திலிருந்து எடுக்கப்பட்ட ஸ்கிரீன் ஷாட்டில் பார்க்கவும்.
இது போன்று ஒட்டுமொத்த சமுதாயத்தின் மீதும் ஒரு பொய்யைத் துணிந்து இட்டுக்கட்டுவதாக இருந்தால் அதற்கு அசாத்திய தைரியம் வேண்டும். அது இந்தப் பொய்யர்களுக்கு மட்டும் தான் முடியும். இந்த விஷயத்தில் இந்தப் பொய்யர்களுக்கு நிகர் இந்த பொய்யர்கள் தான் . இவர்களை இந்த விஷயத்தில் எவராலும் மிஞ்ச முடியாது
தமிழகத்தில் பரவலாக பிறை பார்க்கப்பட்டதாக தலைமை காஜி அறிவிக்கவில்லை. மாறாக தமிழகத்தில் பிறை தென்படாவிட்டாலும் மராட்டிய மாநிலம் மாலேகான் நகரில் பிறை பார்க்கப்பட்ட அடிப்படையில் தான் 17 ஆம் தேதி பெருநாள் என்று அறிக்கை விட்டார். ஆனால் தமிழகத்தில் பரவலாக பிறை பார்க்கப்பட்டதாக புளுகி மார்க்கச் சட்டத்தில், மக்களின் வணக்க வழிபாடுகளில் பொய்யன் கூட்டம் கைவரிசை காட்டியுள்ளது. இதில் ஆச்சர்யப்பட ஒன்றும் இல்லை. பொய்யன் என்ற பெயரை எப்படியாவது கடைசி வரை காப்பாற்றியாக வேண்டும் என்பது தான் பொய்யன் பாக்கரின் ஒரே கொள்கை.
பொய்யன் நிலைபாடு 3:
தமிழகத்தில் சென்னை தவிர ஏனைய பெரும்பாலான ஊர்களில் பிறை தெரிந்ததாக டவுன் காஜி ,ஜமாத்துல் உலமா உள்பட , அனைவரும் அறிவித்ததாக ஆகாசப் பொய்யை புழுகிப் பார்த்தார்கள். தமிழகத்தில் லட்சக்கணக்கான த.த.ஜ. தொண்டர்களுக்கும் .அவர்களின் பிறைக்குலுவினருக்கும் தமிழகத்தில் பரவலாக பார்க்கப்பட்ட பிறை தெரியாமல் போனது ஏன்? என்று படுபயங்கரமான கேள்வியெல்லாம் கேட்டுப் பார்த்து விட்டு அது பொதுமக்களிடம் எடுபடாமல் போனவுடன் இந்தப் பொய்யன் கூட்டம் அடித்த அடுத்த அந்தர்பல்டி தான் “ மாலேகான் பிறை”
அதை நியாயப்படுத்த எடுத்த அவசர முடிவு தான் “இந்தியப் பிறை”. இவர்கள் எத்தகைய சந்தர்ப்பவாதிகள் என்பதை அல்லாஹ் தன்னுடைய பேராற்றலால் உலகறியச்செய்து விட்டான்.
மாலேகான் பிறையை வைத்துத் தான் நாங்கள் பெருநாள் கொண்டாடுகின்றோம் என்றால், தமிழகத்தில் பிறை தெரிந்தது என்று நீங்கள் இணையதளத்தில் எழுதினீர்களே!, முதல் நாள் தமிழகத்தில் ஞாயிறன்று தெரிந்த பிறை மறுநாள் மாலேகானுக்குத் தாவிய மர்மம் என்ன? பொய்யன் கூட்டம் விளக்குமா?
இப்போது இதற்கு ஆதரமாக ஏதாவது ஒரு ஹதீஸைக் காட்ட வேண்டும் என்று ஐடியா செய்து கீழ்கண்ட வாசகத்தை நெட்டில் எழுதுகிறார்கள்.
”நீங்கள் நோன்பு என முடிவு செய்யும் நாள் தான் நோன்பு ஆகும். நோன்புப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் நோன்புப் பெருநாள் ஆகும். ஹஜ்ஜுப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: திர்மிதீ
இந்த ஹதீஸை வைத்து மாநிலப் பிறை முடிவெடுக்கும் இவர்கள், இந்தியப் பிறை என தீர்மானிக்க இந்த ஹதீஸில் என்ன தடை என விளக்கத் தயாரா? என்று கேட்டோம். பதில் எங்கே? என்று நம்மைப் பார்த்து கேள்வி எழுப்புகிறது இந்த பொய்யன் கூட்டம்.
இந்த மக்குமடையர்களிடம் நாம் கேட்க விரும்பும் கேள்வி, இந்த ஹதீஸ் அடிப்படையில் இந்தியா முழுவதும் என்று சொல்ல வருவீர்களானால் சென்ற ரமலானில் கேரள பிறையை நிராகரித்தது ஏன்? கேரள மாநிலம் இந்திய எல்லையைவிட்டு வெளியே உள்ளதா? அது இந்தியாவில் இல்லை என்று சொல்ல வருகிறீர்களா? சொன்னாலும் சொல்வீர்கள்.
பொய்யன் நிலைபாடு 4:
எப்படியோ நாங்களும் 17.11.10 புதன் அன்று பெருநாள் என்று அறிவித்து விட்டோம் என்று பெருமூச்சு விட்டு அமர்ந்திருந்த பொய்யர்கள் தலையில் மிகப்பெரிய பாறாங்கல்லைத் தூக்கிப் போட்டார் அவர்களது பொய்யன் மாநில (?) ஆபாசப் பேச்சாளர் மற்றும், மாநில (?) செயளாலர் அப்துல்ஹமீது. ஆம்! 17.11.10 புதன் அன்று பெருநாள் கொண்டாடுவது தவறு. 16.11.10 செவ்வாய் அன்றே பெருநாள் கொண்டாட வேண்டும் என்று இவர்களுக்கு எதிராக அதிரடி அறிவிப்பு செய்தார். அது குறித்த முழுவிபரம் அறிய பொய்யன் பெருநாள் எப்போது என்ற கட்டுரை உள்ளது ஆதை பார்க்கவும்
ஆனால், 17.11.10 புதன் அன்று கீழக்கரையில் இந்த பொய்யன் அப்துல் ஹமீத் பெருநாள் தொழுகை நடத்தி உரை நிகழ்த்தினார் என்பது தனி காமொடி.
பொய்யன் நிலைபாடு 5:
மாநில (?) பேச்சாளராகவும், மாநில (?) செயளாலராகவும் என்று ஒரு கூறுகெட்ட ஒரு கிருக்கை நியமித்தோம். அந்த கிருக்கோ, கிருக்குத்தனமாக உளறி பைத்தியக்கார வேலை செய்து விட்டது. இந்த மனநிலை குன்றிய கிருக்குக்காக ஒரு நிலைப்பாட்டை நாம் அறிவிக்க வேண்டும் என்ற முடிவெடுத்த பொய்யர் கூட்டம் ”16.11.10 செவ்வாய் அன்றே பெருநாள் கொண்டாட வேண்டும்” என்று பொய்யன் அப்துல் ஹமீது சொன்னது அவரது தனிப்பட்ட கருத்து என்றும், இந்திய அளவில் பிறை என்பது தான் எங்கள் நிலைப்பாடு என்றும் அடுத்த அந்தர்பல்டி அடித்தனர்.
அந்த அறிவிப்பை அவர்களது நெட்டிலிருந்து ஸ்கிரீன் ஷாட்டாக பார்வையிடவும்
”16.11.10 செவ்வாய் அன்றே பெருநாள் கொண்டாட வேண்டும்” என்று பொய்யன் அப்துல் ஹமீது சொன்னது அவரது தனிப்பட்ட கருத்து என்று இவர்கள் அறிவிப்பு வெளியிட்டு அந்த அந்தர் பல்டியிலாவது உறுதியாக இருந்தார்களா? என்றால் அதுவும் இல்லை. இந்த கிருக்குக்காக இன்னொரு கிருக்குத்தனமான நிலைப்பாட்டை அறிவிக்கலாம் என்று முடிவெடுத்திருப்பார்கள் போல!
ஆம்! அடுத்த அதிரடி அறிவிப்பு!
”நீங்கள் நோன்பு என முடிவு செய்யும் நாள் தான் நோன்பு ஆகும். நோன்புப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் நோன்புப் பெருநாள் ஆகும். ஹஜ்ஜுப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: திர்மிதீ
இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு சவூதியில் பிறை பார்த்தாலும் அதை ஏற்றுக் கொண்டு பெருநாள் கொண்டாடலாம் என்று அறிவித்துள்ளனர். இந்தியப் பிறை என்ற நிலை தற்போது மாறி உலகப் பிறை என்று அந்தர்பல்டியிலும் அந்தர்பல்டி அடித்துள்ளனர்.
இந்த ஹதீஸின் முழுமையான விளக்கம் கிடைத்த பிறகு, இதன் அடிப்படையில் இந்தியாவில் மட்டும் அல்ல சகோதரரே, ஸவுதியில் பார்த்த பிறையைக் கொண்டு கூட நாம் பெருநாள் கொண்டாட முடியும். உலகம் முழுவதும் ஒரே பிறை என்கின்ற நிலை வரும் வரை இந்த முறையை நாங்கள் கடைப்பிடிக்கத் தீர்மானித்துள்ளோம்.
அந்த அறிவிப்பை அவர்களது நெட்டிலிருந்து ஸ்கிரீன் ஷாட்டாக பார்வையிடவும்
பொய்யன் நிலைபாடு 6:
ஆக, இந்த பொய்யன் கூட்டத்தின் தற்போதைய நிலைபாடு என்ன என்று நமக்கே பெருங்குழப்பமாக உள்ளது.
1.உலகப்பிறை என்பது மக்களை சீரழிக்கும் ஃபத்வா
2.லோக்கல் பிறையைத் தான் ஏற்கவேண்டும்
3.லோக்கல் என்றால் தமிழகம் மட்டும் தான், கேரளா அதில் அடங்காது
4.இந்தியா முழுவதும் பிறையை ஏற்கலாம்
5.உலகப் பிறை என்பதில் எங்களுக்கு உடன்பாடில்லை, அது பொய்யன் அப்துல்ஹமீது என்பவரின் தனிப்பட்ட கருத்து
6.உலகப் பிறையை ஏற்கலாம் என்பது எங்கள் கருத்து
7.இப்போதைக்கு இந்திய பிறை
8.உலகம் முழுவதும் உலகப் பிறை என்று ஏற்றுக் கொண்டால் நாங்களும் ஏற்றுக் கொள்வோம்
9.ஆனால் இப்போதைக்கு இந்திய பிறை தான்
10.ஆனால், சென்ற ரமலானிலோ தமிழகப் பிறை
11.அடுத்த ரமலானுக்கு “அல்லாஹ்வுக்கே வெளிச்சம்”
பொய்யர்களின் நிலைப்பாடு தெளிவாகப் புரிந்திருக்கும் என்று நம்புகிறோம். புரிகிறதா? அது தான் பொய்யர்கள் என்பது.
மார்க்க அறிவு இல்லாத மூடர்கள் தலைவர்களாகி தவ்றான பத்வாக்கள் கொடுத்து தானும் வழிகெட்டு மற்றவர்களையும் வழி கெடுப்பார்கள் என்ற நபி மொழியை கண் முன்னே பொய்யன் கூட்டம் நாள் தோறும் உண்மைப்படுத்தி வருகிறது.
Source: http://onlineintj.com/
0 comments:
Post a Comment