குவைத்: குவைத்தில் பொது இடங்களில் பெரிய அளவிலான டிஜிட்டல் கேமராக்களை பயன்படுத்த தடை விதிக்கப்படலாம் என்று உள்ளூர் பத்திரிகை செய்தி தெரிவிக்கின்றது. குவைத் டைம்ஸ் செய்தியின் படி ஏற்கனவே மூன்று அரசு துறைகளில் இத்தடை அமலில் வந்துள்ளதாகவும் தெரிகிறது.
தகவல் தொடர்பு அமைச்சகம், சமூக விவகாரங்களுக்கான அமைச்சகம் மற்றும் பொருளாதார அமைச்சகம் ஆகியவற்றில் இத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் இத்தடையிலிருந்து சிறிய கேமராக்கள் மற்றும் மொபைல் கேமராக்களுக்கு விலக்கு அளிக்கப்படலாம் என்றும் தெரிகின்றது.
பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ள மிகப் பெரும் ஊடகங்கள் இதற்கு தகவல் தொடர்பு அமைச்சகத்தில் சிறப்பு அனுமதி பெற வேண்டியதிருக்கும் என்று தெரிகின்றது. பெரிய அளவிலான டிஜிடல் கேமராக்களை அனுமதிக்காமல் இருப்பது சரியான செயல் அல்ல என்றும் அதனால் எப்பிரச்னையும் தீரப் போவதில்லை என்றும் பத்திரிகையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மொபைல் கேமராக்களை கொண்டும் தேவைப்படுவதை படம் பிடிக்க கூடிய காலகட்டத்தில் இத்தடை அர்த்தமற்றது என்று கருதுகின்றனர்.
குவைத்தில் வலைப்பதிவாளர்கள் சிலர் அரசுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி சிறையில் அடைக்கப்பட்டாலும் வளைகுடாவில் ஊடக சுதந்திரம் அதிகமுள்ள நாடாக குவைத்தை எல்லையில்லா பத்திரிகையாளர்கள் (Reporters without borders) அமைப்பு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment