உத்தரப்பிரதேச மாநிலத்தில் சிறுமியை கடத்தி ஒருநாள் முழுவதும் ஜெயில் ஊழியர்கள் வன்புணர்ந்த கொடூர சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
உ.பி மாநிலம் ஆக்ரா அருகே உள்ள தாஜ்சிட்டியில் நேபாளத் தம்பதிகள் தங்கள் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். இவர்கள் அங்கு கூலி வேலை செய்து வந்தனர். சம்பவத்தன்று அவரது மகள் ரூபா மளிகைக்கடைக்கு சென்று விட்டு வீடு திரும்பிக்கொண்டு இருந்தாள். அப்போது ஆக்ரா ஜெயிலில் வேலை பார்க்கும் ஊழியர்கள் சியாம்வீர், ராகுல், அனில், நசிர் ஆகிய நால்வரும் எதிரில் வந்துக்கொண்டு இருந்தனர்.
அவர்கள் சிறுமி ரூபாவை பார்த்ததும் அவளிடம் பேச்சுக்கொடுத்து மறைவான ஒர் இடத்திற்கு அழைத்து சென்று ஒருநாள் முழுவதும் வன்புணர்ந்து இருக்கின்றனர். இதில் மயக்கம் அடைந்த சிறுமியை தண்டவாளத்தின் அருகே போட்டு விட்டு தப்பிச் சென்றனர்.
இதற்கிடையே மகளை ரூபாவை காணாமல் நேபாள தம்பதி பல இடங்களில் தேடினார்கள். கடைசியில் பிச்புரி என்ற இடத்தில் ரெயில் தண்டவாளத்தின் அருகே சிறுமி மயங்கிய நிலையில் இருப்பதை கண்டனர். அவளை மீட்டு விசாரித்தபோது அப்போது ரூபாவை 4 பேர் கொண்ட கும்பல் சிறுமியை வன்புணர்ந்தது தெரிய வந்தது. உடனே அவர்கள் மகளை அழைத்துக்கொண்டு காவல்நிலையம் சென்று புகார் செய்தனர்.
புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் மயங்கிய நிலையில் இருந்த ரூபாவை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சையும் மருத்துவ பரிசோதனை நடந்தது. காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்திய பின்பு இந்த சம்பவத்தில் ஜெயில் ஊழியர்கள் நால்வர் ஈடுபட்டு இருப்பதை கண்டுபிடித்தனர்.
இவர்கள் நான்கு பேரையும் காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். இதில் சியாம் வீர் என்பவர் கைது செய்யப்பட்டார். மற்ற 3 பேரும் தலைமறைவாகி விட்டார்கள். அவர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
Thanks to
0 comments:
Post a Comment