ரியாத் : அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இஸ்லாத்தை ஏற்று கொள்ள வேண்டும் என்று தான் பிராத்தித்ததாக ஹஜ் செய்வதற்காக சவூதி அரேபியா வந்திருக்கும் கென்யாவை சார்ந்த அவரின் பாட்டி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தன்னுடைய ஹஜ் கடமையை முடித்து விட்டு ஜெத்தாவில் அல்-வதான் பத்திரிகைக்கு பேட்டி அளித்த பராக் ஒபாமாவின் 80 வயதான பாட்டி ஹாஜா சாரா ஒமர் “ என் பேரன் பராக் ஒபாமா இஸ்லாத்தை ஏற்று கொள்ள வேண்டும் என்று பிராத்தனை செய்தேன்” என்று கூறினார்.
ஹாஜா சாரா ஒமர் தன் மகனும் ஒபாமாவின் மாமாவுமான சயீத் ஹுசைன் ஒபாமா மற்றும் தன் நான்கு பேரக்குழந்தைகளுடனும் சவூதி அரசரின் சிறப்பு விருந்தினர்களாக ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ள வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஒபாமாவின் அரசியல் குறித்து தான் புனித யாத்திரையின் போது எக்கருத்தையும் சொல்ல விரும்பவில்லை என்றும் கூறினார்.
மீண்டும் வெள்ளை மாளிகைக்கு ஒபாமா தேர்ந்தெடுக்கப்படுவாரா என கேட்டதற்கு எதிர்காலத்தை அறியும் ஆற்றல் தனக்கு இல்லை என்றும் அல்லாஹ் ஒருவனே அதை அறிவான் என்றும் கூறினார். மேலும் நோய் வாய்ப்பட்டுள்ள சவூதி அரசர் விரைவில் குணம் பெற வேண்டும் என்றும் பிராத்தித்ததாகவும் கூறினார். (Thanks to Inneram.com)
0 comments:
Post a Comment