We have been working in UAE for low salary and struggle. There are more brothers away from their family due to financial problems. To overcome this issues there a business in UAE by which we can get some additional income to manage to keep our family with us in very less investment, which is not cost of you mobile and will not affect our current job. To know about the business please spare half hour in your valuable time. No entrance fee for training and presentation. For further please call me or mail me 0559570963 and kindrahman@yahoo.com

நீங்கள் எங்கிருந்தபோதிலும்

مُّشَيَّدَةٍ 4.78 “நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே! 4.78 15:99 وَاعْبُدْ رَبَّكَ حَتَّىٰ يَأْتِيَكَ الْيَقِينُ 15:99. உமக்கு மரணம் வரும்வரை உமது இறைவனை வணங்குவீராக! 6 22.6 وَهُوَ الَّذِي أَحْيَاكُمْ ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ يُحْيِيكُمْ ۗ إِنَّ الْإِنسَانَ لَكَفُورٌ 22:66. இன்னும்: அவன்தான் உங்களை வாழச் செய்கிறான்; பிறகு அவனே மரணம் அடையச் செய்கிறான். அதன் பின்னர் அவனே உங்களை உயிர்ப்பிப்பவன் (எனினும்) நிச்சயமாக மனிதன் நன்றிகெட்டவனாக இருக்கிறான். 23:99 حَتَّىٰ إِذَا جَاءَ أَحَدَهُمُ الْمَوْتُ قَالَ رَبِّ ارْجِعُونِ 23:99. அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது, அவன்: “என் இறைவனே! என்னைத் திரும்ப (உலகுக்குத்) திருப்பி அனுப்புவாயாக!” என்று கூறுவான். 45:26 قُلِ اللَّهُ يُحْيِيكُمْ ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ يَجْمَعُكُمْ إِلَىٰ يَوْمِ الْقِيَامَةِ لَا رَيْبَ فِيهِ وَلَٰكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ 45:26. “அல்லாஹ் உங்களுக்கு உயிர் கொடுக்கிறான்; பின்னர் அவனே உங்களை மரணம் அடையச் செய்கிறான்; பின்னர் கியாம நாளன்று அவன் உங்களை ஒன்று சேர்ப்பான் - இதில் சந்தேகமேயில்லை” எனினும் மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள் என்று (நபியே!) நீர் கூறும். ! by Mujibur's family

அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகதுஹு... யா அல்லாஹ்! உன்னை அதிகம் ஞாபகம் செய்யக்கூடியவராகவும், உனக்கு மிகவும் நன்றி செலுத்தக்கூடியவராகவும், உனக்கு அதிகம் வழிபடுபவராகவும், கட்டுப்படுபவராகவும், அடிபணிபவராகவும் என்னை ஆக்கியருள்வாயக! என் தவ்பாவை ஏற்றுக் கொள்வாயாக! என் பாவத்தைப் போக்கி விடுவாயாக! என் பிரார்த்தனையை ஏற்றுக் கொள்வாயாக! எனக்குரிய ஆதாரத்தை உறுதிப்படுத்துவாயாக! என் உள்ளத்திற்கு நேர்வழி காட்டுவாயாக! என் நாவை பலப்படுத்துவாயாக! என் உள்ளத்தின் கசடுகளை அகற்றிவிடுவாயாக!. !

family

Sunday, 12 December 2010

பெண் பாதுகாக்கப்பட வேண்டியவள் "இஸ்லாம் காட்டும்நெறிமுறை"

                                                                                                                                  5ROKXCADM2VH1CAHP2KGNCAASHN14CACOJ87ACACHGQFTCA9YMWU8CAUSL5BFCA6QUJK0CA03GE0SCAS59FRUCARD03CNCAISHHF6CAXH3JVWCAZP9HR9CAAZMA30CA5HE3E9CAP3TMPOCAIMRTQOCAMXQG9O.jpg
 
பர்தா பற்றி இஸ்லாம் கூறுவது என்ன?

அறியாமைக் கால மக்கள் நெறிமுறையோ ஒழுக்கமோ இன்றி மனம் போன போக்கில் வாழ்ந்து வந்தனர். பெண்கள் ஆடவரை ஈர்த்து நிற்க்கும் கவர்ச்சிகரமான ஆடை ஆபரணங்களை அணிந்து நறுமணம் பூசி தெருக்களிலும். கடை வீதிகளிலும் பவனி வந்தனர். இதனால் பல்வேறு விபரீதங்கள் ஏற்பட்டு அவர்களின் கற்பு சு~றையாடப்பட்டன. அவர்கள் அவமானப்படுத்தப்பட்டு சமுதாயத்தின் அடிமட்டத்திற்கு தள்ளப்பட்டனர். இவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளித்து சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்த்தை அளித்து கௌரவமாக நடத்தப்பட வேண்டுமென்பதற்காக இஸ்லாம் பல நடவடிக்கைகளை எடுத்தது. அவற்றுள்
 
முதன்மையாக:- அவசியத் தேவையின்றி வீட்டை விட்டு வெளியேறாதீர்கள்’:-

என பின் வருமாறு ஆணைப்பிறப்பித்தது. ﭧ ﭨ ﭽوَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى
 
நீங்கள் உங்கள் இல்லங்களிலேயே (அடக்கத்துடன்) இருங்கள். முன் வாழ்ந்த அறியாமை கால மக்கள் (தங்களின் அலங்காரங்களை வெளியில்) காட்டி வந்ததைப் போல் உங்களின் வனப்பை வெளிக்காட்டிக் கொண்டு) திரியாதீர்கள்
(
அல்குர்ஆன் 33:33)
 
இந்த உத்திரவின் மூலம், ‘அவசியத் தேவையின்றி வீட்டை விட்டு வெளியேறாதீர்கள்என்று கூறியது. இன்றைய கல்லூரி மாணவிகள், வயதுக்கு வந்த இள நங்கைகள், ஏன் குடும்பப் பெண்கள்கூட நாகரீக மோகத்தால் எவ்விதக் கட்டுப்பாடுமின்றி இரவு பலலெனப் பாராது கடை வீதிகளுக்கும். சினிமாத் தியேட்டர்களுக்கும் சுற்றிக் கொண்டிருக்கும் பரிதாப நிலைகளையும், அதனால் விளையும் விபரீதங்களையும் அன்றாடம் கண்டும் கேட்டும் வருகிறோம்.
 
எனவே தான்.ஒரு பெண் பாதுகாகப்பட வேண்டியவள் அவள் வீட்டை விட்டு வெளியேறி விட்டால் சைத்தான் அவளைப் பின் தொடருகிறான்எனக்கூறி சமுதாயத்தின் கண்களான பெண்களை எச்சசரித்தார்கள் அண்ணல் நபி(ஸல்) அவர்கள்.
 
இரண்டாவதாக:- பார்வையை தாழ்த்திக் கொள்ளுங்கள்:-
 
ﭧ ﭨ ﭽ وَقُل لِّلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ அவர்கள் தங்கள் பார்வையை கீழ்நோக்கியே வைத்து, கற்பையும் பாதுகாத்துக் கொள்ளவும்.’ (அல்குர்ஆன் 24:31)என்ற இறைவசனத்தின் மூலம் உத்தரவிட்டது.
 
பாவங்களில் பெரும்பாலனவை பார்வையாலேயே நிகழ்கின்றன. தீய பார்வையால் தீய உணர்வுகள் ஏற்பட்டு பாவமான காரியங்களில் ஈடுபடுகிறார்கள். அந்த தீய உணர்வே ஏற்படாமல் தற்காத்துக் கொள்ளவேபார்வையை தாழ்த்தி கற்பைக் காத்துக் கொள்ளவும்என அருள்மறை சுறுகிறது. கண்களினால் விபரீதங்கள் ஏற்படும் என்பதை முன்னெச்சரிக்கை செய்வதற்காகவே, ‘கண்களும் விபச்சாரம் செய்கின்றன. கண்களின் விபச்சாரம் பார்வைஎன்றார்கள் கருணை நபி(ஸல்) அவர்கள்.
 
 ஜரீர் இப்னு அப்துல்லாஹ்(ரலி) அவர்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம், திடீரெனப்படும் பார்வையைப் பற்றிக் கேட்டபோது, ‘உம் பார்வையை (உடனேயே) திருப்பிக் கொள்ளும்என சட்டெனப் பதில் சொன்னார்கள் திடீர் பார்வை தீய எண்ணம் எதுவுமின்றி ஏற்படுவதால் குற்றமில்லை. அதைத் தொடர்ந்து மீண்டும் பார்க்கும் பார்வைதான் பாவமானது என்றார்கள்.
மனிதன் தான் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் பொறுப்பேற்கிறான். நிச்சயமாக காது,
 கண், இருதயம் ஆகிய ஒவ்வொன்றுமே (அதனதன் செயலைப்பற்றி மறுமையில்) கேள்வி கேட்கப்படும் (அல்குர்ஆன் 17:36) என்ற இறைவசனம் இங்கு சிந்திக்க தக்கதாகும்.
 
பர்தா (ஹிஜாப்)வுடைய ஆயத் அருளப்பட்ட வேளை, ஒரு நாள் நபி நாயகம்(ஸல்) அவர்கள் தங்களின் மனைவியரான உம்முஸல்மா(ரலி), மைமூனா(ரலி) ஆகியோருடன் உரையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது அங்கே கண் தெரியாத அப்துல்லாஹ் இப்னு உம்முமக்தும் வந்தார்கள். உடனே அவ்விருவரையும் வீட்டினுள் செல்லுமாறு உத்தரவிட்டார்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள். அவருக்குத்தான் கண் தெரியாதே! எங்களைப் பார்க்கவும் தெரிந்து கொள்ளவும் முடியாதே! யாரஸுலல்லாஹ்!எனக் கேட்டார்கள் மனைவியர் இருவரும்.சரிதான்,நீங்களிருவரும் குருடர்கள் இல்லையல்லவா? நீங்கள் அவரைப் பார்க்க மாட்டீர்களா? எனத் திருப்பிக் கேட்டதும் உள்ளே சென்று மறைந்து கொண்டார்கள். (திர்மிதீ, நஸயீ,அபூதாவூது)
இந்த உத்தரவின் மூலம் பெண்கள் அந்நிய ஆண்களைப் பார்ப்பது கூடாததைப் போலவே, ஆண்களும் அந்நியப் பெண்களைப் பார்ப்பது கூடாது என இஸ்லாம் தடைவிதிக்கிறது. இருவரது பார்வையையும் சைத்தான் தன் வலையில் வீழ்த்தப் போதுமானவன். எனவே, தீய உணர்வுகளை ஏற்படுத்தும் பார்வையிலிருந்து தற்காத்துக் கொள்வது ஒவ்வொருவரது கடமையாகும்.
 
மூன்றாவதாக:- அலங்காரங்களை வெளியே காட்டாதீர்! என இஸ்லாம் உத்தரவிடுகிறது:
 
ﭧ ﭨﮞ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا அவர்கள் (உடலில் பெரும்பாலும்) வெளியில் தெரியக் கூடியவைகளைத் தவிர்த்து தங்கள் அழகையும், (ஆடை ஆபரணம் போன்ற) அலங்காரத்தையும் வெளியே காட்டாது மறைத்துக் கொள்ளவும்.’(அல்குர் ஆன் 24:33)
இந்த தொடரில் வரும் அழகைக் காட்ட வேண்டாம்என்ற வசனத்திற்கு தப்ஸீர் கலை விற்பன்னர்கள் பின்வருமாறு பொருள் விரிக்கிறார்கள்: 1. முக அழகையும், உடல் அழகையும் காட்டுவது 2. ஆபரணங்களின் அழகைக் காட்டுவது 3. நடை உடை பாவனைகளால் பிறரை ஈர்த்து நிற்பது. இவற்றுள் எதையும் மார்க்கத்தில் அனுமதிக்கப்படவில்லை. இவையாவும் ஹராமாக்கப்பட்டவை (தடுக்கப்பட்டவை) ஆகும். ஒரு பெண்ணின் உடல் முழுவதும் மறைக்கப்பட வேண்டியதாகும். அவள் தன் மேனி எழிலையோ, தலை முடியையோ, கால்கள், கழுத்து, நெஞ்சுப்பகுதியையோ தோள் பகுதியையோ வெளியே காட்டுவது மார்க்கப்படி குற்றமாகும். மேற்கூறப்பட்ட வசனத்தில் வரும் ஸீனத்என்ற சொல்லுக்கு குர்ஆன் விரிவுரையாளர்கள் தரும் விளக்கங்கள் சிந்தனைக்குரியதாகும்.
 
இமாம் குர்துபீ(ரஹ்) கூறுகிறார்கள். அழகு என்பது இருவகைப்படும். ஒன்று இயற்கையானது, மற்றொன்று செயற்கையானது. இயற்கையான அழகு என்பது ஒரு பெண்ணின் எழிலைக் காட்டும் முகமாகும். செயற்கையான அழகு என்பது ஆடை ஆபரணங்களால் மேனியை அலங்கரித்துக் கொள்வதாகும்.
 
வேறு சில விரிவுரையாளர்கள்: ஸீனத்என்ற சொல்லை உள் அலங்காரம், வெளி அலங்காரம் என இருவகைப்படுத்துகின்றனர். உள் அலங்காரம் என்பது, காதணிகள், கழுத்தணிகள், கொலுசுகள், தண்டைகள், பாதத்தில் பூசப்படும் மருதாணி போன்ற வர்ணனைகளை குறிக்கின்றன என ஹஜ்ரத் இப்னு மஸ்வூது(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.
 
வெளி அலங்காரம் என்பது, மோதிரம், கண்ணிலே போடு;ம் சுர்மா போன்ற மைகள் என ஹஜ்ரத் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களும், முகம் இரு முன் கைகள்என ஹஜ்ரத் ஹஸன்(ரலி) அவர்களும் பொருள் தருகின்றார்கள். இவற்றை ஆதாரமாகக் கொண்டு வெளியே தெரியும் பகுதியைத் தவிரஎன்ற குர்ஆன் வசனத்திற்கு மேற் கூறப்பட்ட வெளி அலங்காரங்களைத்தவிர உள்ளவைகளை நீங்கள் மறைத்துக் கொள்ளுங்கள் என விளக்கம் தருகிறார்கள்.

நான்கவதாக:- தலையையும் உடலையும் மறைத்துக் கொள்ளுங்கள்
 
அவர்கள் தங்களின் தலைத்துணிகளால் மார்புகளையும் மறைத்துக் கொள்ளவும்.’ (குர்ஆன் 24:31) என்பது திருமறை மூலம் இஸ்லாம் கூறும் நான்காவது கட்டளையாகும். இந்த மறை வசனம் அருளப்பட்டதும், முஹாஜிர்களான பெண்கள் தங்களின் ஆடைகளை கிழித்து அவற்றை தலையிலே கட்டிக் கொண்டார்கள்என அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். உம்மு ஸல்மா(ரலி) அவர்கள், பின்வருமாறு தெரிவிக்கின்றார்கள்:
இந்த வசனம் இறங்கியதும், அன்சாரிப் பெண்கள் தங்களின் தலைகளில் காகங்கள் குடியிருப்பது போன்று கறுப்புத் துணிகளை கட்டியிருந்தார்கள். நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் பெண்களை பெருநாள் தொழுகையில் பங்கேற்பதற்காக வெளியே செல்லலாம் என அனுமதித்த போது சில பெண்கள் நபிகள் நாயகத்திடம் வந்து, ‘எங்களில் ஒருத்திக்கு தலைத்துணி இல்லையே! என்ன செய்வது எனக் கேட்டார்கள், அதற்கு நபிகளார்,
அவளுடைய சகோதரியின் தலைத் துணியால் மறைத்துக் கொள்ளட்டும்என கட்டளையிட்டார்கள். இந்த ஹதீஸ் மூலம், ஸஹாபாப் பெண்களிடம் தலைத் துணியில்லாமல் செல்வது வழக்கமில்லையென்றும், அவ்வாறு செல்வதை நபிகள் நாயகம் அனுமதிக்கவே இல்லை என்பதும் தெளிவாக தெரிகிறது. அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
 
பெருமானார்(ஸல்) அவர்கள் ஃபஜ்ர் (அதிகாலைத்) தொழுகையை நடத்தும்போது முஃமினான பெண்களில் சிலர் தங்களை போர்வையால் மூடிக்கொண்டு தொழுகையில் வந்து கலந்து கொண்டு யாருடைய கண்களிலும் படாமல் அந்த இருளில் திரும்பிக் கொண்டிருந்தார்கள். நாங்கள் (தற்செயலாக சில பகுதிகள் திறந்திருந்ததை) பார்த்;;;;;;;ததை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் பார்த்திருந்தால், பனீஇஸ்ராயீல்கள் தங்களின் பெண்களைத் தடுத்ததைப் போல பள்ளி வாசலுக்கு வரும் பெண்களை நிச்சயம் தடுத்திருப்பார்கள்.(புகாரி, முஸ்லிம்)
 
குர்ஆனையும் ஹதீஸையும் பக்தியோடு நெறி வழுவாமல் பின்பற்றிய அந்தக் காலத்திலேயே அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் அப்படிக் கூறியிருந்ததால், இன்றயை காலத்தில் வெட்கமும் நாணமுமின்றித் தலையை திறந்து கொண்டு அரைகுறை ஆடைகளில் நடமாடும் இஸ்லாமிய நாகரீக நங்கைகளைப் பற்றி எப்படிக் கூறியிருப்பார்கள்?

ஷரீஅத் விழையும் பர்தா உடை எப்படி அமைய வேண்டும்.
 
1. பர்தா (ஹிஜாப்) உடை பெண்களின் முகம், முன் கைகள் தவிர உடலின் ஏனைய பகுதி முழுவதையும் மறைத்திருக்க வேண்டும்.
2. அணியும் ஆடை அடர்த்தியானதாக அமைய வேண்டும், உடலின் வனப்பை வெளிக்காட்டும் மெல்லிய ஆடையாக அமைதல் கூடாது.
3. ஆடை உடலின் வடிவையும் அங்கங்களையும் அளந்து காட்டும்படி இறுக்கமான ஆடையாக இல்லாமல் தொள தொளப்பாக இருக்க வேண்டும்.
4. பிறரை ஈர்த்து நிற்கும் வசீகரமான ஆடையாக அமைதல் கூடாது.
5. பெண் அணியும் ஆடை ஆண்கள் அணியும் ஆடையைப் போல் இருத்தல் கூடாது. அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
ஆண்கள் பெண்களைப் போலவும், பெண்கள் ஆண்களைப் போலவும் ஆடை அணிவதை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள்.
இஸ்லாமியப் பெண்கள் பர்தா அணியும்போது ஷரீஅத் கூறும் இந்த விதிகளை கவனத்திற் கொள்ள வேண்டும்.

ஐந்தாவதாக கிழவிகளுக்கும் அனுமதியில்லை

குர்ஆன் கூறுகிறது: விவாக விருப்பமற்ற முதிர்ந்த வயதுடைய நடமாட முடியாது) உட்கார்ந்தே இருக்கக்கூடிய கிழவிகள் அழகை காட்டும் நோக்கமின்றி தங்களின் மேல் ஆடைகளை களைந்து விட்டிருப்பதில் அவர்கள் மீது குற்றமில்லை. அதனையும் அவர்கள் தவிர்த்துக் கொள்வதே அவர்களுக்கு மேலானதாகும் .(அல்குர்ஆன் 24:60)
 
இந்த வசனத்தில் ஆடைகளை களைந்திருப்பபது எனக் கூறப்படுவது நிர்வாணமாகவோ, உடலைத்திறந்திருப்பதோ என்பது பொருளல்ல. பெரும்பாலும் வீட்டிலிருக்கும் போது வெளியே தெரியும் பகுதிகளான கை, கால், முகம், கழுத்து போன்ற பகுதிகளை திறந்து இருப்பது குற்றமில்லை. சில போது முதுமையின் காரணமாகவோ, நோயின் காரணமாகவோ, மருத்துவத்தின் காரணமாகவோ அவர்களின் வசதிக்காக உடலின் சில பகுதிகளை திறந்து வைத்திருக்கக்கூடும். அழகைக் காட்டும் நோக்கமில்லையென்றால்தான் இவ்வாறு திறந்திருப்பதை அனுமதிக்கப்படுகிறது.
 
பிறர் தனது அழகைக் கண்டால் ரசிக்கக்கூடும் எனத் தெரிந்தால் கிழவிகளுக்கும் இந்த அனுமதியில்லை. அவர்கள் இதையும் தவிர்த்துக் கொள்வதே சிறந்ததாகும். ஆசையற்ற வயது முதிர்ந்த கிழவிகளுக்கே உடலை மூடி மறைப்பது நன்று எனக் கூறும் போது இன்று, உடல் வனப்பை காட்டித் திரியும் இள மங்கைகளுக்கும், குடும்பப் பெண்களுக்கும் எவ்வாறு தங்களின் அழகைக் காட்டிச் செல்ல அனுமதியிருக்கமுடியும்?
 
ஆறாவதாக:-பெண்களைப் பார்க்க அனுமதிக்கப்பட்டவர்கள்
 
இஸ்லாம் ஒரு பெண்ணைப் பார்க்க யார் யாருக்கு அனுமதி உண்டு என்பதையும் குர்ஆன் மூலம் பின்வருமாறு வரையறுத்துக் கூறுகிறது. ‘‘பெண்கள் தங்களின் கணவன்மார்கள், தங்களின் தந்தையர்கள், தங்களுடைய கணவனுடைய தந்தைகள்,தங்களின் குமாரர்கள், தங்களின் கணவன்மார்களின் குமாரர்கள், தங்களின் சகோதரர்கள், தங்களின் சகோதரிகளின் குமாரர்கள் அல்லது (முஸ்லிமாகிய) தங்களு(டன் தொடர்பு)டைய பெண்கள், தங்களின் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் (அடிமைகள்) அல்லது பெண்களின் மீது ஆசையற்ற தங்களை அண்டி வாழும் ஆண்கள், பெண்களின் அவயவங்களை அறிந்து கொள்ள முடியாத சிறு வயதுடைய (ஆண்) குழந்தைகள் ஆகிய இவர்களைத் தவிர (மற்றெவருக்கும் தாங்கள் அணிந்திருக்கும் ஆடை ஆபரங்களைப் போன்ற) தங்களின் அலங்காரத்தைக் காட்ட வேண்டாம்.’ (அல்குர் ஆன் 24:32).
 
இதிலிருந்து அவர்கள் யார் யார் முன்னிலையில் தோன்றலாம், அவர்களின் அழகைப் பார்க்க யாருக்கு அனுமதி உண்டு என்பது மிகவும் தெளிவாகிறது. இவர்களைத் தவிர பெண்களின் அலங்காரங்களை பார்க்க எவருக்கும் அனுமதி கிடையாது. இவ்வாறு வரைதயறுத்து மிகத் தெளிவாக இறை மறை கூறிய பிறகு ஒரு பெண் பர்தா இன்றி எவ்வாறு அந்நிய ஆடவர் முன் தோன்ற முடியும்.?

ஏழாவதாக:- ஓசையுடன் நடக்காதீர்!
 
அவர்கள் தங்களின் அலங்காரத்தில் மறைந்திருப்பதை பிறருக்குக் காட்ட (பூமியில்) கால்களை தட்டி தட்டி நடக்க வேண்டாம்எனக் கூறுகிறது. அல்குர்ஆன்.
 
அவள் அணிந்திருக்கும் கொலுசு, தண்டை போன்ற ஆபரணங்களையும் வெளியே காட்டக் கூடாது, அவள் அணியும் காலணிகள் விலையுயர்ந்த ஷீக்கள் போன்ற வற்றால் நடந்து ஒலியெழுப்பி ஆண்களின் கவனத்தை ஈர்த்து நிற்பது கூடாது என்று உத்தரவிடுகிறது திருமறை.
 
தனது காலணிகளால் ஓசையுடன் நடக்கும் போது அவள் யார்? எப்படிப்பட்டவள் அவள் இளமங்கையா?கவர்ச்சிக்கன்னியா? நடுத்தர வயதினரா என அந்நிய ஆடவர்கள் தம்மை ஏறிட்டுப் பார்க்குமுhறு தூண்டிவிடுவது மட்டுமல்லாமல் தம்நடை அழகையும், இடை அழகையும் உடை அழகையும் ரசிக்குமாறு கிளறிவிடுகிறாள்.
 
சிலர் அந்நிய ஆடவர்களின் மூக்கை துளைப்பதற்காகவே நவீன ரக நறுமணங்களையும் பூசித் திரிகின்றார்கள். பிறர் தம்மை ரசிக்க வேண்டு மென்பதற்காகவே டம்ப்பபைகளையும், வித விதமான மூக்குக் கண்ணாடிகளையும்,உடலின் வனப்பையும் அமைப்பையும் துல்லியமாக காட்டும் இறுக்கமான மினிஸ்கட் பாவாடைகளையும் எடைகளையும் பேண்டுகளையும் அணிந்து உலா வருகிறார்கள்.
 
இதனுள் எவ்வளவு பெரிய ஆபத்துக்;;;;;கள் விளைந்து சமுதாயத்தையே சீரழித்துவிடுகிறது என்பதை உத்தேசித்தே. நீங்கள் யார் என்று காட்டிக் கொள்ளாமல் உங்களை ஆடையால் போர்த்திக் கொண்டு ஓசைபடாமல் நடந்து செல்லுங்கள்என்று பெண்கள் சமுதாயத்தை இறைமறை உபதேசிக்கிறது.
 
அன்னை பாத்திமா(ரலி) அவர்கள் தங்கள் கணவர் கூட கண்டு கொள்ள முடியாத அளவுக்கு கிழவியைப் போல் போர்த்திக் கொண்டு வெளியே செல்வார்கள் என்பது இங்கு சிந்திக்கத்தக்கதாகும்.
 
எட்டாவதாக, அந்நிய ஆடவருடன் நளினமாகப் பேசாதீர்!
 
إِنِ اتَّقَيْتُنَّ فَلَا تَخْضَعْنَ بِالْقَوْلِ فَيَطْمَعَ الَّذِي فِي قَلْبِهِ مَرَضٌ وَقُلْن َقَوْلًا مَّعْرُوفًا  الأحزاب: ٣٢  நீங்கள் அல்லாஹ்வை அஞ்சி வாழ்பவராக இருப்பின் அந்நிய ஆடவர்களுடன் பேசநேர்ந்தால் நளினமாகப் பேசாதீர்கள். எவருடைய உள்ளத்தில் (தீய) நோய் இருக்கிறதோ, அவாக்ள தவறான விருப்பங்களை கொள்ளக்;கூடும். எனவே நீங்கள் (எதைப் பேசிய போதினும்) நேர்மையாக (உடனே) பேசி (முடித்து அனுப்பி) விடுங்கள். (அல்குர் ஆன் 33:34)
என எச்சரிக்கிறது இஸ்லாம்.
 
இன்று எங்கே சென்றாலும், பெண்களின் கூட்டத்தையே காணமுடிகிறது. வீதிகளிலும், ஊர்திகளிலும்,கடைகளிலும், பொது இடங்களிலும் பெண்களின் குரலோசைகளையும் சிரிப்பொலிகளையும் ஆர்பாட்டங்களையுமே பார்க்க முடிகிறது. பக்;தியோடும், நாணத்தோடும், மரியாதையோடும் அமைதியாக செல்ல வேண்டிய மாதர்கள், ஆர்ப்பாட்டங்களோடு பவனிவருவதைக் காண வேதனையாக உள்ளது.
 
பார்க்கும் இடங்களிலெல்லாம் சிரித்துப் பேசும் சிங்காரிகளை கண்டித்து நீங்கள் சிரித்துப் பேசாதீர்கள்,ஆடவர்களை ஈர்க்கும் வகையில் நளிமாகப் பேசி அவர்களின் உள்ளங்களை கொள்ளை கொள்ளாதீர்கள். அது உங்கள் பெண்மைக்கு அழகல்லஎன்று கூறுகிறது குர்ஆன்.
 
ஒன்பதாவதாக:- தனியாக வெளியே செல்லாதீர்!
பெண்களின் கற்பை பாதுகாப்பதற்காக நீங்கள் தனியாக வெளியே செல்லவோ, பயணம் செய்யவோசெய்யாதீர்கள்எனக் கூறுகிறது இஸ்லாம்.
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள், ‘ஒரு பெண் தன்னுடன் அனுமதிக்கப்;பட்ட (மஹ்ரமான) ஆண்துணையின்றி (தனித்து) பயணம் செய்ய வேண்டாம்எனக் கூறினார்கள். எந்தப் பெண்ணும் வெளியே செல்ல நேர்ந்தால் தன் கணவனையோ, தந்தையரையோ, சகோதரர்களையோ,அனுமதிக்கப்பட்ட (மஹரமான) ஆடவர்களையோ தவிர்த்து தனியாகவோ, மற்றவர்களுடனோ பயணம் செய்வதையும் வெளியே செல்வதையும் இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது. அவ்விதம் செல்வதால் ஒரு பெண்ணுக்கு அவப் பெயரும் வீண்புரளிகளும் ஏற்பட்டுவிடும் என்பதைக் கருதியே இந்த உத்தரவாகும்.
இன்று தனியாக வெளியூர்களுக்கும் வேலைக்கும் பயணம் செய்வதால் ஒரு பெண் எந்த எந்த நிலைக்கு ஆளாக்கப்படுகிறாள் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.தொடரும்
பத்தாவதாக:-அந்நிய ஆடவருடன் கலந்துறவாடாதீர்! தனித்திருக்காதீர்!!
பெண்களும் ஆண்களும் சகஜமாகப் பழகுவதையும் தனித்திருப்பதையும் இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது.அவ்வாறு பழகும் போதும் தனித்திருக்கும் போதும் சைத்தான் அவர்களை தன் மாய வலையில் வீழ்த்தி விடுகிறான். எனவே நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள்,

எந்த ஆடவரும் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம், ஏனெனில் சைத்ததான் அவர்களில் மூன்றாமவனாக ஆகிவிடுகிறான்என்றார்கள். (திர்மிதீ) இதனால் தான் ஒரு பொருளைக் கேட்க நேர்ந்தால் கூட திரைக்குப் பின்னிருந்தே கேளுங்கள் எனக் கட்டளையிடுகிறது அல்குர்ஆன்.
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ஆண்களை இவ்வாறு எச்சரிக்கிறார்கள்.
பெண்களிருக்கும் அவையில் செல்வதை விட்டும் உங்களை எச்சரிக்கிறேன்
.
பதினொன்றாவதாக:-நறுமணம் பூசித்திரியாதீர்!

பெண்கள் நறுமணம் பூசிக் கொண்டு வெளியே செல்வதையும் இஸ்லாம் தடை செய்கிறது. ஒரு பெண் நறுமணம் பூசி வெளியே வரும் போது, அந்த நறுமணத்தின் மூலம் ஆடவர்களை காந்தம் போல் இழுக்கிறாள்.
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள், ’ஒரு பெண் நறுமணம் பூசிக் கொண்டு ஆண்களிருக்கும் அவையருகே சென்றால் அவள் ஒரு மாதிரியானவள்! ஒரு மாதிரியானவள்!! என்றார்கள்.
இந்த ஹதீஸை அறிவிக்கும், திர்மிதீ அவர்கள், அதற்கு விபச்சாரிஎன்பது பொருளாகும் என தெரிவிக்கிறார்கள்.
மற்றொரு ஹதீஸ், ஒரு பெண் நறுமணம் பூசி ஆண்களருகே சென்று அவர்கள் அதனை நுகர்ந்தால் அவள் விபச்சாரியாவாள்எனக்கூறுகிறது.
எனவே பெண்கள் நறுமணம் பூசி வெளியில் நடமாடுவதை இஸ்லாம் அனமதிக்கவேயில்லை.
பன்னிரண்டாவதாக:-அந்நிய ஆடவர்களுடன் கை குலுக்காதீர்!
இன்றைய நாகரீக உலகில் பெண்கள் ஆண்களுடனும், ஆண்கள் பெண்களுடனும் மேலை நாட்டுப் பாணியில் ஒருவருக்கொருவர் கைகுலுக்கி மகிழ்வதைக் காணுகிறோம். இதையும் இஸ்லாம் வன்மையாக கண்;டிக்கிறது.
புகாரி ஷரீபில் வரும் ஹதீஸ் இதற்கு ஆதாரமாகும். அன்னை ஆயிஷh(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பெருமானாரின் கை, தனக்குச் சொந்தமான மனைவியரின் கையைத்தவிர்த்து எந்த பெண்ணின் கையையும்தொட்டதில்லைஎனவே இஸ்லாம் பெண்கள் தங்களின் செயல்களாலும், அசைவுகளாலும், ஆண்களை எந்த வகையிலும் ஈர்த்து நிற்கக் கூடாது என்;பதை கவனித்திற் கொண்டே படிப்படியாக பக்குவமாக உபதேசித்து பர்தாஎன்னும் திரையின் மூலம் வரம்பை காத்துக் கொள்ள வேண்டும் என கண்டிப்பாக கட்டளையிடுகிறது.

பர்தா முறையிலிருக்கும் பெண்கள் நோயினால் பீடிக்கப்படுகின்றனர்என்ற புதுப் புரளியை சிலர்கிளப்புகின்றனர். பர்தா முறையில் இருக்கும் பெண்களுக்கென்று தனிப்பட்ட நோய் இருப்பதாகவும், அந்த நோய மற்ற பெண்களுக்கு உண்டாவதில்லை என்றும் இதுகாறும் மருத்துவ உலகம் நிருபித்ததில்லை.
இறுதியாக பர்தா என்பது கற்பைக் காக்கும் நெறியாகும். கற்பெனப்படுவது பிறர் மனம் புகாமைஆகும்.
தான் குடியிருக்கும் பகுதியில் ஆடவர் நடமாடும் அரவம் கேட்பினும் அந்த ஆடவர் அவளின் பெயரைக் கேட்பினும் உயிரை விடக்கூடிய கற்புணர்ச்சியால் சினமுறுபவள் என்று ஒரு பெண்ணைப் பாராட்டி ஆடவர் தனதிடத்து அருகி போதினும், நாடி மற்றவர் பெயர் நயந்து கேட்பினும், வீடுவல் உயிரென வெருளும் என்று சீவக சிந்தாமணயில் கூறப்பட்டிருப்பதையும்.

சீஸருடைய மனைவி அழகானவள்என்று பிறர் கூறுவதே சீஸருடைய மனைவிக்கு இழுக்காகும் என்று ரோமர்கள் கருதி வந்ததையும் சிந்தித்துப் பார்க்கும் பொழுது,பெண்களுக்கு மாண்பு பிற ஆடவர்களின் கண்களில் படாமல் இருப்பது மட்டுமல்ல: அவர்களின் உள்ளத்தில் புகா வண்ணமும் வாழ்வதுமாகும்.
பர்தாவை உதாசீனம் செய்வதின் விளைவு
இன்று பர்தாவை தூக்கி வீசிவிட்டு மாற்று மதத்தினரைப் போல் வெளியே வருகின்றனர் இன்றைய நம் குடும்பப் பெண்கள். முஸ்லிம் பெண்களை இனம் கண்டு கொள்வதே கடினமாக உள்ளது. ஒரு தடவை என் எதிரே வந்த இரு முஸ்லிம் சகோதரிகளை தலையில் துணியிடாமல் நடமாடுகிறீர்களே!எனக் கேட்டதற்கு,

மற்றவர்கள் முஸ்லிம் பெண்கள் என அடையாளம் கண்டு கொள்வார்கள், தலையை திறந்து சென்றால் மாற்று மதப் பெண்கள் போகிறார்கள் என இருந்து விடுவார்கள்என வெளிப்படையாகவே பதில் சொன்னது எனக்குப் பேரிடியாக இருந்தது. இன்று முஸ்லிம்கள்எனக் கூறிக் கொள்வதற்கே வெட்கப்படுகிற நிலைக்கு வந்துவிட்டார்கள்.
பாக்தாத் பல்கலைக் கழகப் பேராசிரியர் டாக்டர் முஹ்ஸின் அப்துல் ஹமீது கூறுகிறார்.
ஒரு முஸ்லிம் பெண் ஷரீஅத்துடைய பர்தா முறையை பேணாதிருந்தால் இரு தீய விளைவுகள் ஏற்படுகின்றன.
ஒன்றாவது, மார்க்கம் விழையும் ஒழுக்கமுள்ள ஆடைகளை தம் வாழ்நாள் முழுவதும் கடைபிடிக்காமலே அலட்சியமாக இருந்து விடுவாள். அந்த மனநிலை ஷரீஅத்துடைய ஏனைய, இறைவனின் கட்டளைகளையும் உதாசீனம் செய்யுமளவுக்கு அவளை கொண்டு விட்டு விடுகிறது.ஒன்றிலே காட்டும் அலட்சியம், பிறவற்றிலும் அவ்வாறே நடந்து கொள்ளச் செய்துவிடுகிறது.
அல்லாஹ்வின் ஆணைகளை அலட்சியமாகக் கருதுபவள் வேளாவேளைகளில் தொழுவதிலும், நோன்பு, ஸகாத்,ஹஜ்ஜு போன்ற கடமைகளிலும், மார்க்கத்தின் அனுஷ்டானங்களை பேணி நடப்பதிலும் அலட்சியம் காட்டுவாள் அல்லவா?அவளது இந்த நடவடிக்கை மார்க்கத்தைப் பேணி நடக்கும் அவளது குடும்பத்தினருக்கும் பெற்றோருக்கும் வெறுப்பை ஏற்படுத்தி விடுகிறது.
அவளைப் பார்க்கும் அவளது பெண் குழந்தைகளும் தாயைப் போல் பிள்ளை என்பது போலஅவளைப் பின்பற்றி மார்க்கத்தின் அனுஷ்டானங்கள் எதிலுமே ஆர்வம் காட்டாதிருந்து விடுவார்கள். அவளைப் பார்க்கும் ஏனைய பெண்களுக்கும் அவ்வாறே நடக்க வேண்டுமென்ற மன நிலையையும் தூண்டி விடுகிறது.
இவ்வாறு ஒழுக்கம் பேண வேண்டிய முஸ்லிம் பெண்கள் ஈமானின் எல்லையைத் தாண்டிச் செல்கிறார்கள்.

இரண்டாவது: தன் மானத்தைப் பேணி நடக்காது திறந்தபடியே நடமாடும் மங்கையர்களைப் பார்க்கும்போது இளைஞர்களுக்கும், தீய நோக்குடைய ஆடவர்களுக்கும் இவள் ஒரு கவர்ச்சிக் கண்ணியாகவும், கேலிப் பொருளாகவும் ஆகிவிடுகிறாள்.
சந்தர்ப்பம் கிடைக்கும்போது கேலியும் கிண்டலும் செய்து, சந்தி சிரிக்க வைப்பார்கள். அவளை கடை வீதிகளிலும் பஸ் ஸ்டாப்புகளிலும் தொடர்ந்து, அவளை சந்திக்கும் சந்தர்ப்பம் தேடி பல்வேறு வித பரிமாற்றங்களும் செய்து. முடிவே இல்லாத தீய விளைவுகளின்பால் கொண்டு விட்டுவிடுகிறார்கள்.என பேராசிரியர் விவரிக்கிறார்கள். இந்த விசயத்தில் சமுதாயத்தின் தலைவர்களும்,பெற்றோர்களும் எந்த நடவடிக்கைகளும் எடுக்காது அலட்சியமாக இருந்து வருகிறார்கள்.
கட்டுப்பாட்டை மீறி சுதந்திரமாக திரிய அனுமதித்ததால் மாற்று மத்ததினரை காதலித்து ரெஜிஸ்தர்கல்யாணம் செய்து கொண்டு ஓடிவிடுகிற அளவுக்கு நிலைமை மோசமாகி விட்டது.
தமிழகத்தின் தென்பகுதியிலும்  தலையிலே துணிபோட்டு உடலை சேலையால் போர்த்தி வந்த கௌரவமான மரபு மறைந்து வருகிறது.
நூற்றுக்குத் தொண்ணூற்றி ஒன்பது சமவிகிதமும் குமரி முதல் முதியோர் வரை தலையில் துளிகூட துணியில்லாமலே வெளியே வருகிறார்கள். திருமணம் போன்ற பலபேர் சந்திக்கும் முக்கிய விழாக்களில் கூட சிறிதும் கூச்சமின்றி, மார்க்கத்தையே அடமானம் வைத்து பிற மத்ததினரைப் போல் கலந்து கொண்டு ஆண்களுடன் சரிசமமாக கலகலப்பாகப் பேசி நடந்து கொள்ளும் அவல நிலையைப் பார்க்கும் போது வேதனையால் இதயமே வெடித்துவிடும் போலிருக்கிறது.
திருமணத்தின் போது இஸ்லாமிய நெறிக்கு மாறாக மணப் பெண்ணை கிறித்தவப் பெண்களைப் போல நைலான் துணிகளை முகம் தெரிய, தலை தெரிய அழகுக்காகப் போட்டு மண மேடைக்கே அழைத்து வரும் அவல நிலையையும் இன்று கண்கூடாகக் காணுகிறோம். நம்மை மற்றவர்கள் பின்பற்றுவதற்கு பதிலாக (துரதிஷ்டவசமாக நம் இந்திய நாட்டில்) நாம் மாற்று மத்ததினரின் கலாச்சாரங்களையும், சம்பிரதாயங் களையும்பின்பற்றுகிறோம்.
ஒரு காலத்தில் பிறர் கண்களில் படாமல் அடக்கமாக வாழ்ந்த முஸ்லிம் பெண்கள், தமது பர்தாக்களையும் முக்காடுகளையும் தூக்கி வீசிவிட்டு, எல்லோருடைய காட்சிப் பொருளாக நடமாட ஆரம்பித்து விட்டார்கள். எங்கு சென்றாலும் முஸ்லிம் பெண்களை திறந்த தலையுடன் சர்வ சாதாரணமாகக் காண முடிகிறது.
சமுதாயத்தின் தூண்களாகவும் கண்களாகவும் ஒளிர வேண்டிய இஸ்லாமிய சகோதரிகளே! நாம் எங்கே போய் கொண்டிருக்கிறோம் என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள்! இந்த அற்பமான வாழ்வை சதமான வாழ்வாக நினைத்துக் கொள்ளாதீர்கள். ஆயிரத்து நானூறு ஆண்டுகளாக அரும் பாடுபட்டு பேணிக்காத்து வளர்த்த இஸ்லாமியக் கொள்கைகளையும், கோட்பாடுகளையும், கலாச்சாரத்தையும் குழிதோண்டி புதைத்து விடாதீர்கள்.
முன்மாதிரியாக வாழுங்கள்!
உங்களுக்குப் பின்னரும் இஸ்லாம் செழித்தோங்க வேண்டும் உங்கள் வாழ்வு உங்கள் சந்ததியினருக்கும் சிறந்த முன் மாதரியாக அமைய வேண்டும்.
அல்லாஹ்வின் ஆணையை மதித்து, மார்க்கத்தின் வரை முறையைப் பேணி உங்கள் கலாச்சாரத்தையும் கற்பையும் காத்து உண்மை முஸ்லிம்களாக வாழுங்கள்.
உங்களின் புனித வாழ்வைப் பார்த்து உங்கள் பெண்மக்களும், மற்றவர்களும் பின்பற்றி நடக்கட்டும். அவர்களும் உங்களை முன் மாதிரியாகக் கொண்டு சீரிய வாழ்வு வாழ துணை புரியுங்கள்.
எல்லாம் வல்ல அல்லாஹ் ஈருலகப் பேறுகளை உங்களுக்கு நிறைவாய் வழங்கி இஸ்லாமியப் பெண்கள் என்றென்றும் உயர்ந்து நிற்க அருள் பொழிவானாக! ஆமீன்

அந்நிய ஆடவருடன் நளினமாகப் பேசாதீர்!’ நீங்கள் அல்லாஹ்வை அஞ்சி வாழ்பவராக இருப்பின் அந்நிய ஆடவர்களுடன் பேசநேர்ந்தால் நளினமாகப் பேசாதீர்கள். எவருடைய உள்ளத்தில் (தீய) நோய் இருக்கிறதோ, அவாக்ள தவறான விருப்பங்களை கொள்ளக்;கூடும். எனவே நீங்கள் (எதைப் பேசிய போதினும்) நேர்மையாக (உடனே) பேசி (முடித்து அனுப்பி) விடுங்கள்.(அல்குர் ஆன் 33:34)என எச்சரிக்கிறது இஸ்லாம். இன்று எங்கே சென்றாலும், பெண்களின் கூட்டத்தையே காணமுடிகிறது. வீதிகளிலும், ஊர்திகளிலும்,கடைகளிலும், பொது இடங்களிலும் பெண்களின் குரலோசைகளையும் சிரிப்பொலிகளையும் ஆர்பாட்டங்களையுமே பார்க்க முடிகிறது. பக்;தியோடும், நாணத்தோடும், மரியாதையோடும் அமைதியாக செல்ல வேண்டிய மாதர்கள், ஆர்ப்பாட்டங்களோடு பவனிவருவதைக் காண வேதனையாக உள்ளது. பார்க்கும் இடங்களிலெல்லாம் சிரித்துப் பேசும் சிங்காரிகளை கண்டித்துநீங்கள் சிரித்துப் பேசாதீர்கள்,ஆடவர்களை ஈர்க்கும் வகையில் நளிமாகப் பேசி அவர்களின் உள்ளங்களை கொள்ளை கொள்ளாதீர்கள். அது உங்கள் பெண்மைக்கு அழகல்லஎன்று கூறுகிறது குர்ஆன்.
என் அன்புக்குரிய சகோதரிகளே...!!!
ஈமான் கொண்டவர்களே! ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்; இன்னும் எவன் ஷைத்தானுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறானோ அவனை, ஷைத்தான் மானக் கேடானவற்றையும், வெறுக்கத்தக்கவற்றையும், (செய்ய) நிச்சயமாக ஏவுவான்; அன்றியும், உங்கள் மீது அல்லாஹ்வின் அருளும், அவனுடைய ரஹ்மத்தும் இல்லாதிருந்தால், உங்களில் எவரும் எக்காலத்திலும் (தவ்பா செய்து) தூய்மையயடைந்திருக்க முடியாது - எனினும் தான் நாடியவர்களை அல்லாஹ் துய்மைப் படுத்துகிறான் - மேலும் அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், நன்கறிவோனாகவும் இருக்கின்றான்.  (24:21)

என் அன்புக்குரிய சகோதரிகளே...!!!

''நபியின் மனைவிகளே! நீங்கள் பெண்களில் மற்றப் பெண்களைப் போலல்ல நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விரும்பினால், (அந்நியருடன் நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனெனில் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ, (த்தகைய)வன் ஆசை கொள்வான்; இன்னும் நீங்கள் நல்ல பேச்சே பேசுங்கள். (33;32)'
எங்கு ஆணும் பெண்ணும் தனித்திருக்கிறார்களோ அங்கு மூன்றாவதாக ஷெய்த்தான் வந்துவிடுகிறான்.((நபி மொழி))
Author - Ahmad Baqavi

Download As PDF

Facebook Comments

0 comments:

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out