We have been working in UAE for low salary and struggle. There are more brothers away from their family due to financial problems. To overcome this issues there a business in UAE by which we can get some additional income to manage to keep our family with us in very less investment, which is not cost of you mobile and will not affect our current job. To know about the business please spare half hour in your valuable time. No entrance fee for training and presentation. For further please call me or mail me 0559570963 and kindrahman@yahoo.com

நீங்கள் எங்கிருந்தபோதிலும்

مُّشَيَّدَةٍ 4.78 “நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே! 4.78 15:99 وَاعْبُدْ رَبَّكَ حَتَّىٰ يَأْتِيَكَ الْيَقِينُ 15:99. உமக்கு மரணம் வரும்வரை உமது இறைவனை வணங்குவீராக! 6 22.6 وَهُوَ الَّذِي أَحْيَاكُمْ ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ يُحْيِيكُمْ ۗ إِنَّ الْإِنسَانَ لَكَفُورٌ 22:66. இன்னும்: அவன்தான் உங்களை வாழச் செய்கிறான்; பிறகு அவனே மரணம் அடையச் செய்கிறான். அதன் பின்னர் அவனே உங்களை உயிர்ப்பிப்பவன் (எனினும்) நிச்சயமாக மனிதன் நன்றிகெட்டவனாக இருக்கிறான். 23:99 حَتَّىٰ إِذَا جَاءَ أَحَدَهُمُ الْمَوْتُ قَالَ رَبِّ ارْجِعُونِ 23:99. அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது, அவன்: “என் இறைவனே! என்னைத் திரும்ப (உலகுக்குத்) திருப்பி அனுப்புவாயாக!” என்று கூறுவான். 45:26 قُلِ اللَّهُ يُحْيِيكُمْ ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ يَجْمَعُكُمْ إِلَىٰ يَوْمِ الْقِيَامَةِ لَا رَيْبَ فِيهِ وَلَٰكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ 45:26. “அல்லாஹ் உங்களுக்கு உயிர் கொடுக்கிறான்; பின்னர் அவனே உங்களை மரணம் அடையச் செய்கிறான்; பின்னர் கியாம நாளன்று அவன் உங்களை ஒன்று சேர்ப்பான் - இதில் சந்தேகமேயில்லை” எனினும் மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள் என்று (நபியே!) நீர் கூறும். ! by Mujibur's family

அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகதுஹு... யா அல்லாஹ்! உன்னை அதிகம் ஞாபகம் செய்யக்கூடியவராகவும், உனக்கு மிகவும் நன்றி செலுத்தக்கூடியவராகவும், உனக்கு அதிகம் வழிபடுபவராகவும், கட்டுப்படுபவராகவும், அடிபணிபவராகவும் என்னை ஆக்கியருள்வாயக! என் தவ்பாவை ஏற்றுக் கொள்வாயாக! என் பாவத்தைப் போக்கி விடுவாயாக! என் பிரார்த்தனையை ஏற்றுக் கொள்வாயாக! எனக்குரிய ஆதாரத்தை உறுதிப்படுத்துவாயாக! என் உள்ளத்திற்கு நேர்வழி காட்டுவாயாக! என் நாவை பலப்படுத்துவாயாக! என் உள்ளத்தின் கசடுகளை அகற்றிவிடுவாயாக!. !

family

Monday, 20 December 2010

தூக்கம்ம்ம்ம்ம்ம்ம்ம்....

 










தூக்கம் மனிதர்களுக்கு இன்றியமையாத ஒரு வேலை ஆனால் நம்மால் பெரிதாக கவனம் செலுத்தப்படாத ஒன்று. நல்ல தூக்கம் நம்மை உடலளவிலும்,மனதளவிலும் ஆரோக்கியமாகவும் புத்துணர்வோடும் இருக்க உதவுகின்றது.
நம்மில் பலர் நமது வேலைகளை காரணம் காட்டி தூக்கத்தை புறக்கணிப்பது உண்டு. தியாகமில்லாமல் எதுவுமில்லை என்று அதற்கு காரணம் சொல்வதும் உண்டு.ஆனால் தூக்கமின்மையால் நமக்கு ஏற்படும் பிரச்சனைகள் பல.
சரியான தூக்கம் இல்லையெனில்,

* நீங்கள் அதிகம் வாக்குவாதம் செய்பவர்களாக மாறுகின்றீர்கள்.
* நம் வேளைகளில் கவனம் செலுத்துவது சிரமாமாக அமையும்.
* களைப்பாக உணர்வீர்கள்
* தலைவலி உண்டாகும்
* மேலும் பொதுவாகவே நீங்கள் நோய்வாய் பட்டதை போல் உணர்வீர்கள்.

இது உங்களை நீங்கள் எந்த வேலைக்காக உங்கள் தூக்கத்தை தொலைத்தீர்களோ, அந்த வேலையில் சரியாக செயல்பட முடியாதவராக மாற்றிவிடும்.

இரவில் சரியான தூக்கம் உங்களுக்கு புத்துணர்ச்சி அளிப்பதோடு மட்டுமல்லாமல் உங்களை ஆரோக்கியமாகவும்,அழகாகவும் மாற்றுகின்றது என்று ஒரு ஆய்வு கூறுகின்றது.
இந்த ஆய்வினை சுவீடனைச் சேர்ந்த ஆய்வாளர்கள் 18 முதல் 31 வயது நிரம்பிய 23 ஆண் மற்றும் பெண்களிடம் சோதித்தனர்.
இவர்களை முதலில் 8 மணி நேரம் தூங்க செய்து அவர்களை புகைப்படம் எடுத்தார்கள். பின்னர், அவர்களை இரவில் 5 மணி நேரம் தூங்க செய்து 31 மணி நேரம் விழித்திருக்கச் செய்தனர்.
ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் பங்கேற்பாளர்கள் படமெடுக்கப்பட்டனர்.

இந்த புகைப்படங்களை கலவை செய்து 65 நபர்களிடம் பங்கேற்பாளர்களுடைய தோற்றம், ஆரோக்கியம் மற்றும் களைப்பு ஆகியவை பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.
இதில் நன்றாக தூங்காத புகைபடங்களுக்கு 19% அதிக களைப்பாகவும், 6% ஆரோக்கியமின்மையாகவும் 4% அழகிய தோற்றம் இல்லாமலும் இருப்பதாக கருத்து தெரிவிக்கப்பட்டது.

தூக்கம் என்பது விலை மலிவான சிறந்த அழகு சாதனம் என்று Karolinska Institute ஐ சேர்ந்த பேராசிரியர் John Axelsson தெரிவிக்கிறார்.மேற்கூறப்பட்ட ஆய்வினை நடத்தியது இவரே.

தூக்கமின்மை நாம் கண்களை நன்றாக திறக்காமல் செய்கின்றது. மேலும் முகத்தின் தசைகளை சோர்வடைய செய்கின்றது. படுக்கையின் போது நமது முகத்திர்க்கு இரத்த ஓட்டம் அதிகரிக்கின்றது.
மேலும் தூக்கத்தின் போது நமது உடல் அதிக (மனித வளர்ச்சி) ஹார்மோன்களை சுறக்கின்றது.
இந்த ஹார்மோன்கள் நமது உடலின் குறைபாடுகளை சரிச்செய்ய பெரிதும் உதவுகின்றது.

நல்ல உணவோடு சிறிது உடற்பயிர்ச்சியும் சரியான அளவு தூக்கமும் நம்மை மனதளவிலும்,உடலளவிலும் நமது வேலைகளுக்காக தயார் படுத்தும்.  
Source - thapal petti

தூ‌க்கமு‌ம் க‌ண்களை‌த் தழுவ‌‌ட்டுமே  
தூ‌க்க‌மஎ‌ன்பதஇரவானது‌மநமதஉட‌லஇளை‌ப்பாற‌க் ‌கிடை‌‌த்த ‌விஷய‌மஎ‌ன்றுதா‌னபலரு‌மஎ‌‌ண்‌ணி‌‌ககொ‌ண்டி‌ரு‌க்‌கிறா‌ர்க‌ள். ஆனா‌ல், தூ‌க்க‌த்‌தி‌ற்கஎ‌த்தனையோ ‌விஷய‌ங்க‌ளஉ‌ள்ளன.

தூ‌க்க‌மஎ‌ன்பதஒ‌வ்வொருவரு‌க்கு‌மஒ‌வ்வொரவகை‌யி‌லஅமையு‌ம். ஒரு ‌சில‌ரபடு‌த்தது‌மதூ‌ங்‌கி ‌விடுவ‌ர். ‌சில‌ரம‌ணி 12ஐ தா‌ண்டினா‌லதா‌னதூ‌ங்கவசெ‌ல்வ‌ர். ‌சில‌ரபுர‌ண்டபுர‌ண்டபடு‌த்ததூ‌க்க‌த்துட‌னபோராடி கடை‌சியாதூ‌ங்குவ‌ர். தூ‌ங்குவ‌திலு‌மவகைக‌ளஉ‌ண்டு. ஆ‌ழ்‌ந்உற‌க்க‌ம், லேசாஉ‌ற‌க்க‌மபோஉ‌ண்டு.

webdunia photo
WD
பொதுவாகனவுக‌ளஇ‌ல்லாதூ‌க்க‌மே ‌சிற‌ந்தூ‌க்கமாகு‌ம். கனவுக‌ளஇ‌ல்லாம‌லதூ‌ங்‌கி எழு‌ந்தா‌ல்தா‌னஉ‌ண்மை‌யி‌லஆ‌ழ்‌ந்தூ‌க்க‌த்ததூ‌ங்‌கி‌னீ‌ர்க‌ளஎ‌ன்றஅ‌ர்‌த்த‌ப்படு‌ம். கனவுக‌ளஇ‌ல்லாதூ‌க்க‌த்தை‌ககாசுவாச‌ம் ‌சீராஇரு‌க்வே‌ண்டு‌ம். ‌சீராசுவாச‌மஇரு‌ப்‌பி‌னந‌ல்தூ‌க்க‌மஏ‌ற்படு‌ம். சுவாச‌த்‌தி‌ல் ‌சிதைவஏ‌ற்ப‌ட்டா‌லதூ‌க்க‌‌த்‌திலேயமன‌மஅ‌திக‌மவேலசெ‌ய்ஆர‌ம்‌பி‌த்து ‌விடு‌ம். மன‌மவேலசெ‌ய்வதுதா‌னகனவுக‌ளி‌னஅடி‌ப்படையே.

ச‌ரி தூ‌க்க‌த்‌தி‌லசுவாச‌ததடஏ‌ற்பட‌ எ‌ன்‌ன‌ககாரண‌மஇரு‌க்கு‌ம். நமதஉணவமுறைதா‌ன். தூக்க‌த்தை‌ககெடு‌க்கு‌மஉணவுக‌ளஉ‌ள்ளன. தூ‌க்க‌த்தை‌ககொடு‌க்கு‌மஉணவுகளு‌மஉ‌ள்ளன. அவ‌ற்றை‌ததே‌ர்வசெ‌ய்தஅளவோடஉ‌ண்பதுதா‌னதூ‌க்க‌த்‌தி‌ற்கு‌ததேவையான ‌சீராசுவாச‌த்தஅ‌ளி‌க்கு‌ம்.

இர‌வி‌லசா‌ப்‌பிடு‌‌மஉணவானதஅளவகுறைவாஉணவாகவு‌ம், கார‌மி‌ல்லாத, வாயசே‌ர்‌க்காஉணவாகவு‌மஇரு‌ப்பது ‌மிகவு‌மமு‌க்‌கிய‌ம்.

உட‌லசு‌த்தமு‌ம், ந‌ல்கா‌ற்றோ‌ட்டமு‌மகூதூ‌க்க‌த்‌தி‌ற்கஅடி‌ப்படையாகு‌ம். உற‌‌ங்க‌பபோகு‌மமு‌னமுக‌ம், கா‌ல்களசு‌த்த‌ப்படு‌த்‌தி‌ககொ‌ள்வது‌ம், நா‌மபடு‌க்கு‌மஇட‌மசு‌த்தமாகவு‌ம், கா‌ற்றோ‌ட்டமாகவு‌மஇரு‌க்கு‌ம்படியு‌ம் பா‌ர்‌த்து‌ககொ‌ள்ளவு‌ம்.

சா‌ப்‌பி‌ட்டவுட‌னகளை‌ப்போடசெ‌ன்றபடு‌க்கை‌யி‌ல் ‌விழுவது, சோ‌ம்பலையு‌ம், கெ‌ட்கனவுகளையு‌மஅ‌ளி‌க்கு‌ம். பக‌லதூ‌க்க‌ம் ‌நி‌ச்சயமாஇரவு‌ததூ‌க்க‌த்தை‌ககெடு‌க்கு‌ம். சா‌ப்‌பி‌ட்டஇர‌ண்டம‌ணி நேர‌த்‌தி‌ற்கு‌ப் ‌பிறகபடு‌க்க‌சசெ‌ன்றா‌ல் ‌நி‌ச்சயமாந‌ல்தூ‌க்க‌மவரு‌ம்.

webdunia photo
WD
தூ‌க்க‌மஉடலு‌க்கமட‌்டும‌ல்ல, மன‌த்‌தி‌ற்கு‌மஓ‌ய்வ‌ளி‌க்‌கிறது. அதபோதூ‌ங்காம‌னித‌ர்க‌ளி‌னமனமு‌மசோ‌ர்வடைவதகாணலா‌ம். ச‌ரியாதூ‌க்க‌மஇ‌ல்லையஎ‌ன்எ‌ண்ணமே, மன‌தி‌ற்கு‌ளகோபமாகவு‌ம், துக்கமாகவு‌மமாற‌ககூடு‌ம். இதனா‌லதேவைய‌ற்ற ‌பிர‌ச்‌சினைக‌ளஏ‌ற்படலா‌ம்.

ந‌ல்ல ‌சீரான தூ‌க்க‌மமனதஆன‌ந்தமான ‌நில‌ை‌யி‌லவை‌த்‌திரு‌க்உதவு‌ம். மனமநமதஅ‌ன்றாகா‌ரிய‌ங்களு‌க்கஉறுதுணையாஇரு‌க்கு‌ம். மன‌மஆன‌ந்தமாஇரு‌ந்தா‌லநமதவேலையு‌ம் ‌திரு‌ப்‌தியாஇரு‌க்கு‌ம்.

webdunia photo
WD
தூ‌க்க‌மவராத ‌நிலை‌யி‌ல் ‌புர‌ண்டபுர‌ண்டபடு‌ப்பதை ‌விட, உ‌ங்களு‌க்கு‌ப் ‌பிடி‌த்ஏதேனு‌மஒ‌ன்றசெ‌ய்தபாரு‌ங்க‌ள். ‌‌மன‌மஉ‌ற்சாக‌மஅடைவதா‌லவராதூ‌க்கமு‌ம் ‌விரை‌வி‌லவ‌ந்தசேரு‌ம். ‌பிடி‌த்வேலஎ‌ன்றா‌லபா‌ட்டகே‌ட்பது, பு‌த்தக‌மபடி‌ப்பதபோ‌ன்றவை. தொலை‌க்கா‌ட்‌சி பா‌ர்‌ப்பதா‌லபலரததூ‌க்க‌மபா‌தி‌க்க‌ப்படு‌கிறது.

தூ‌க்க‌மகெ‌ட்டஎ‌ந்த‌பப‌ணியசெ‌ய்தாலு‌மஅதவெ‌ற்‌றிகரமாமுடியாது. எனவே, தூ‌க்க‌த்‌தி‌ற்கு‌ததேவையான ‌விஷய‌ங்களநா‌மச‌ரியாமுறை‌யி‌ல் ‌பி‌ன்ப‌ற்வே‌ண்டு‌ம். 

இரவு நேரங்களில் ஏற்படும் கடுமையான தூக்கமின்மை பிரச்னையால், அவர்களின் மூளை சுருங்க வாய்ப்பு உள்ளதாக ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக, பிரிட்டனில் அமைந்துள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் மேற்கொண்ட ஆய்வில், கடும் தூக்கமின்மை பிரச்னை உடையவர்களுக்கு, அவர்களின் சிந்திக்கும் திறன் குறைவதாகவும் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து இந்த ஆய்வு நடத்திய டாக்டர் எலிமார்ஜி ஆல்டீனா கூறியதாவது: கடும் தூக்கமின்மை பிரச்னையால் அவதிப் படுபவர்களுக்கு சிந்திக்கும் திறன் குறைகிறது. இதற்கு, மூளை சுருங்குவதும் ஒரு காரணமாக இருக்கலாம். இதனால், அவர்கள் ஒரு விஷயத் தில் முடிவெடுக்க மிகுந்த சிரமப்படுகின்றனர். எனது இந்த ஆராய்ச்சியின் கண்டுபிடிப்புகள், தூக்கமின்மை பிரச்னையால் அவதிப்படுபவர் களுக்கு புதிய வகை சிகிச்சையளிக்க வழிவகுக் கும். தற்போது வயதானவர்களிடமே ஆய்வு செய்தோம். வருங்காலங்களில், அனைத்து வயதினரிடமும் ஆய்வு நடத்த உள்ளோம். இதன் மூலம், இது தொடர்பான கூடுதல் தகவல்கள் கிடைக்கலாம். இவ்வாறு எலிமார்ஜி ஆல்டீனா கூறினார். விஞ்ஞானிகள், சாதாரணமான ஒருவரின் மூளைத் திறனுடன், கடுமையான தூக்கமின்மை பிரச்னையால் அவதிப்படும் ஒருவரின் மூளைத் திறனை ஒப்பிட்டுப் பார்த்து ஆய்வு செய்யப் பட்டது.
தூக்கமின்மையால் மனோநிலை பாதிக்கும்?


பொதுவாக பிறந்த குழந்தைகள் அதிக நேரம் தூங்கும். பசி எடுக்கும் போது கண் விழித்து பால் அல்லது திரவ உணவு வகைகளை சாப்பிட்ட பின் மீண்டும் தூங்கும் இயல்பு கொண்டவை.

அதுவே ஒரு வயதானால், குழந்தைகளின் தூக்கம் குறையும். திரவ உணவு மாறி, இட்லி, பருப்பு சாதம், பிஸ்கட் போன்ற திட உணவுப் பொருட்களை குழந்தைகள் சாப்பிடத் தொடங்குகின்றன.

ஒரு வயது முதல் 3 வயது வரை அன்றாடம் பகல் நேரங்களில் சுமார் 2 முதல் 3 மணி நேரம் வரை குழந்தைகள் தூங்க நேரிடும்.

பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளானால், மதியம் பள்ளிக்கூடம் இல்லாத நேரங்களில் தூங்கும் பழக்கம் கொண்டிருப்பர். மேலும் 12 முதல் 13 மணி நேரம் வரை தூங்கக்கூடும்.

5 வயதைத் தாண்டிய குழந்தைகளுக்கு குறைந்தது 9 மணி நேரமாவது தூங்க வேண்டியது அவசியமாகிறது.

வளர்ந்து பெரியவர்களாகி விட்டாலோ, 7 முதல் 8 மணி நேர தூக்கம் கண்டிப்பாகத் தேவைப்படுகிறது.

35 வயதைக் கடந்தவர்கள் 6 மணி நேரமாவது ஆழ்ந்த நித்திரை கொள்ள வேண்டும். அப்போது தான் உடல் நலமும், மன நிலையும் சரிவர செயல்பட்டு. உரிய பணிகளை செவ்வனே செய்ய முடியும்.

மன நலத்துடன் தொடர்புடையது தூக்கம் என்றால் அது மிகவும் சரி.

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் அளிக்கப்படும் மருந்து, தூக்கத்திற்கானதே.

போதிய அளவு தூக்கம் இல்லாததே பல நேரங்களில் மனோரீதியாகப் பாதிப்புக்குள்ளாக காரணமாகி விடும்.

மனோநிலை பாதிக்கப்பட்டவர்கள் சில நேரங்களில் புலம்ப நேரிடும். அப்படிப் புலம்புவர்களுக்கு தூக்கமே மிகச் சிறந்த மாற்று மருந்தாகும். எனவே தூக்கத்திற்கான மருந்துகளை, மனோதத்துவ நிபுணர்கள் அளிப்பர்.

அதன் பின்னரே அவர்களுக்கு கவுன்சலிங் எனப்படும் கலந்தாய்வை மேற்கொள்வர்.

எனவே 2, 3 மணி நேர தூக்கம் போதும் என்று எண்ணாதீர்கள். தவிர, சிலருக்கு இரவு வெகுநேரம் டி.வி. பார்க்கும் வழக்கம் இருக்கும். அதுபோன்றவர்கள் காலையில் அதிக நேரம் தூங்குவார்கள்.

பின்னர் அவசரமாக எழுந்து, அலுவலகத்திற்குத் தாமதமாகச் செல்வதையும் பார்க்கிறோம்.

முதலில் இரவில் வெகுநேரம் கண் விழிப்பதால், அவர்களின் உடல் சூடு அதிகரித்து பல்வேறு தொந்தரவுகள் ஏற்படக்கூடும்.

காலையில் தாமதமாக எழுந்திருப்பதால், சரிவர உணவருந்த முடியாமல் போகலாம். அதுவே அசிடிட்டி போன்ற உடல் பாதிப்புகளை ஏற்படுத்த காரணமாக அமைந்து விடுகிறது.

வேலைக்கு அவசரமாகவும், ஒரு டென்ஷனோடும் புறப்பட்டுச் செல்வதால், அன்றைய தினம் மேற்கொள்ள வேண்டிய சில பணிகளை மறந்து விட நேரிடுகிறது. அலுவலகத்திற்குச் சென்றாலும் டென்ஷனே நீடிக்கும். இதனால் உடல் பாதிப்படைகிறது.

எனவே தூக்கமின்மையானது பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதோடு மனோநிலை பாதிப்படைய முக்கியக் காரணமாகிறது.


இரவில் போதிய அளவு தூங்குங்கள்! உடல் ஆரோக்கியமாக இருங்கள் !

அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க நிம்மதியான தூக்கம் போதும்

 அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க விரும்புகிறீர்களா? பெரிதாக ஒன்றும் செய்ய வேண்டாம், தினமும் இரவில் ஒழுங்காக நித்திரை கொண்டாலே போதும். இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஸ்வீடனில் உள்ள கரோலின்ஸ்கா இன்ஸ்டியூட் பேராசிரியர் ஜான் ஆக்ஸல்சன் தூக்கத்திற்கும் அழகு மற்றும் ஆரோக்கியத்திற்கும் உள்ள தொடர்பு குறித்து ஆய்வு நடத்தினார்.

தற்போதைய இயந்திர வாழ்வில் மக்கள் தூக்கமின்றி தவிப்பதும், நிம்மதியான தூக்கம் இல்லாமல் இருப்பதும் அதிகரித்து வரும் வேளையில் இந்த ஆய்வு முக்கியத்துவம் பெறுகிறது.

இதில் 18 முதல் 31 வயது வரையுள்ள 23 பேர் கலந்து கொண்டனர். அவர்களை பிற்பகல் 2 மணி மற்றும் 3 மணி அளவில், நல்ல தூக்கம், தூக்கமின்மை ஆகிய 2 தருணங்களில் புகைப்படம் எடுத்தனர். இந்த ஆய்வில் புகைபிடிப்பவர்களை அழைக்கவில்லை. இதில் கலந்து கொண்டவர்களை ஆய்வுக்கு 2 நாட்களுக்கு முன்பே மது அருந்த அனுமதிக்கவில்லை.

புகைப்படம் எடுக்கையில் அவர்கள் யாரும் அழகு சாதனப் பொருட்கள் பயன்படுத்தவில்லை. இந்த ஆய்வின் பின்னணி பற்றி தெரியாதவர்களிடம் அவர்களின் புகைப்படங்களைக் காண்பித்து கருத்து கேட்கப்பட்டது. இதில் 65 பேர் நன்றாக தூங்கியவர்களின் புகைப்படங்கள் தான் அழகாக இருப்பதாகத் தெரிவித்தனர்.

இதன் மூலம் இரவில் நன்றாகத் தூங்கினால் ஆரோக்கியமாகவும், அழகாகவும் இருக்கலாம் என்பது உறுதியாகியுள்ளது. பிறகு என்ன கவலையை மூட்டை கட்டிவிட்டு நிம்மதியாகத் தூங்குங்கள்.

http://www.cmr.fm/th...il.aspx?ID=5696
ஆரோக்கிய வாழ்வு

நல்ல வாழ்க்கையின் அடிப்படை இரகசியம் ஆரோக்கியமான வாழ்வே. இந்த ஆரோக்கியத்திற்கான அடிப்படை ரகசியம் நல்ல தரமான தூக்கமே! நவீன இயந்திர யுகத்தில், கடந்த பல ஆண்டுகளில் வாழ்க்கை முறை மாற்றத்தால் தரமான தூக்கத்தை மனித குலம் இழந்து வருகிறது என்பது துயரமான செய்தி தான்! உலகெங்கும் இப்போது தூக்க மாத்திரைகள் சாப்பிடுவோரின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் அதிகரித்து வருகிறது.

தூக்கமின்மையால் ஏற்படும் வியாதிகள்

ஏழு மணி நேரம் கூடத் தூங்காமல் மிகக் குறைந்த நேரம் தூங்கும் பழக்கம் அடிப்படை ஆதாரமான உடல் நலத்தைக் கெடுக்கிறது என்பதை பலரும் அறியாதிருப்பது வேதனை தரும் விஷயம்! ரீடர்ஸ் டைஜஸ்ட் இதழில் பிரபல மருத்துவர் பிலிஸ் ஜீ தூக்கத்தை இழப்பவர்களிடம் உயர் அளவில் ஸ்ட்ரெஸ் ஹார்மோன்ஸ் இருப்பதையும் அது வீக்கத்தை அதிகரிப்பதால் நோயைத் தடுக்கும் ஆற்றலைக் குறைப்பதையும் சுட்டிக் காட்டி எழுதியுள்ளார். தூக்கம் குறையக் குறைய ரத்த அழுத்த அளவு அதிகமாகிறது. ஏனெனில் தூக்கத்தின் போது தான் ரத்த அழுத்த அளவும் இதயத் துடிப்பு அளவும் மிகக் குறைந்த அளவில் இருக்கிறது. ஏராளமான ஆய்வுகள் நோய் தடுக்கும் ஆற்றலை தூக்கமின்மை குறைத்து விடுவதால் தூங்காமல் இருப்பவர் அதிக நோய்களால் பாதிக்கப்பட்டு நோயாளியாக மாறும் வாய்ப்பு ஏற்படுகிறது என்று தெரிவிக்கின்றன.

பிரபல பத்திரிக்கையான நியூயார்க் டைம்ஸ் இதழில் ஜேன்.பி.. ப்ராடி,"யாருமே நல்ல தூக்கத்தின் மேன்மையை இதுவரை குறை சொன்னதில்லை! உடல் ரீதியாக 6 மணி நேரமோ அல்லது 8 மணி நேரமோ எவ்வளவு நேரம் தூங்கினால் நீங்கள் திறம்பட வேலை செய்ய முடியுமோ அவ்வளவு அடிப்படை தேவையான தூக்கத்தைக் கொள்ளுவது நலம். இந்த அளவு தூக்கத்தை நீங்கள் இழக்கும் போது ஞாபக மறதி, கற்பதில் குறைபாடு, பிரச்சினைகளைத் தீர்ப்பதில் குறைபாடு, உடல் ஆரோக்கியக் குறைபாடு, உணர்ச்சி பூர்வமான விஷயங்களில் கோளாறு, இதய சம்பந்தமான கோளாறுகள், உடல் எடை கூடுதல் உள்ளிட்ட ஏராளமான கோளாறுகள் வந்து விடும்! சரியான தூக்கமின்மை நாளடைவில் எரிச்சலையும் கோபத்தையும் தூண்டிவிடும். அடிக்கடி மூட் எனப்படும் நிலை மாற்றம் ஏற்படும். பசியைத் தூண்டும் ஹார்மோன்கள் சீரழிந்து அதிக அளவு சாப்பிடத் தூண்டி அதிக எடையில் கொண்டு விடும். பகலில் உறக்கத்தை ஏற்படுத்தி விபத்துக்களில் கொண்டு போய் விடும்" என்று எச்சரிக்கிறார்!

தலைவலி, வயிற்றுக் கோளாறுகள், அதிக ரத்த அழுத்தம்,ஹார்மோன் குறைபாடுகள், சீரற்ற உடல்வளர்ச்சி, அதிக வீக்கம் ஆகியவை தூக்கமின்மையால் ஏற்படும் வியாதிகளில் சில.

டாக்டர் ஜி.ஹெச்.

வளர்ச்சியைத் தரும் க்ரோத் ஹார்மோன்கள் (growth hormones) வயது ஆக ஆக தசைகளையும் தோலையும் புதுப்பித்துக் கொண்டே இருக்கும்.இதுவே இளமையான தோற்றத்தை நீட்டிக்கும். இந்த ஹார்மோன்களை நல்ல விதத்தில் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமானால் முதல் தேவை சரியான தூக்கம் தான்!

சரியான தூக்கம் இல்லை என்றால் நீங்கள் பொலிவுடன் இருக்க மாட்டீர்கள். பொலிவுடன் இல்லையென்றால் கவர்ச்சி இருக்காது. செக்ஸ் உறவுகள் உள்ளிட்ட அனைத்திலும் தகராறு ஏற்பட்டால் உறவுகள் கெடும்!

இந்த க்ரோத் ஹார்மோனை டாக்டர் மைக்கேல் ப்ரெஸ் தனது ப்யூடி ஸ்லீப் என்ற புத்தகத்தில் டாக்டர் ஜி.ஹெச். எனக் குறிப்பிடுகிறார்! ஏனெனில் இது ஒரு காஸ்மடிக் சர்ஜன் செய்ய வேண்டிய வேலையைச் சிறிதும் செலவின்றி அன்றாடம் உங்களுக்குச் செய்து வருகிறது! ஏராளமான அழகு சாதனங்கள், பணத்தைக் கொட்டி வாங்கும் விட்டமின் நிறைந்த உணவு வகைகள், மஸாஜ் , லோஷன்கள் அனைத்தையும் பின்னுக்குத் தள்ளி செலவில்லாத பெரும் நன்மையைத் தரும் இந்த டாக்டர் ஜி.ஹெச் என்னும் க்ரோத் ஹார்மோனைப் பெற நல்ல தூக்கம் தூங்கினால் போதும்!

நல்ல உறக்கம் மூளை செயல் திறனைக் கூட்டுகிறது.
எடையைக் குறைக்கிறது.
நோய் வந்தால் அதை சீக்கிரம் குணப்படுத்துகிறது.
நோய் வராமல் தடுக்கும் இயற்கை ஆற்றலை உடலில் ஏற்படுத்துகிறது.
அதிக எனர்ஜியை_ ஆற்றலை தருகிறது.
பொறுமையைக் கூட்டுகிறது.
வேலை இடங்களில் விபத்துக்களைத் தவிர்க்கிறது.

ஆக நல்ல தூக்கம் ஆரோக்கிய வாழ்வின் அடிப்படையான ரகசியம் என்பதைப் புரிந்து கொண்டு தரமான தூக்கத்தை அடையப் பழகவேண்டும்
.
நல்ல தூக்கத்திற்கான டிப்ஸ்

தூக்கம் வரவில்லையே என்ன செய்வது என்பவர்க்கு சில டிப்ஸ்:

•  ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் தூங்கச் செல்லுங்கள்;ஒரே நேரத்தில் எழுந்திருக்கப் பழகுங்கள்
•  மது அருந்துவதை நிறுத்துங்கள். உறங்கச் செல்லுமுன் காப்பி, டீ அருந்தாதீர்கள்
•  தூக்க நேரத்திற்கு மூன்று மணி நேரம் முன்பாக உணவை இரவு உணவை முடித்து விடுங்கள்.
•  தேகப்பயிற்சி மிகவும் அவசியம். தூங்குவதற்கு சில மணி நேரம் முன்னதாகவே இப்படிப் பட்ட பயிற்சிகளைச் செய்து முடித்து விட வேண்டும்,
•  பகலில் அதிக நேரம் தூங்காதீர்கள். பவர் நேப் என்றால் அது இருபது நிமிடத் தூக்கம் மட்டுமே என்பதை நினைவிலிறுத்தி இருபது நிமிடங்களுக்குக் குறைவாகவே தூங்குங்கள்.
•  கம்ப்யூட்டர், டி.வி, போன்றவற்றை படுக்கை அறையில் வைத்திருக்காதீர்கள்
•  படுக்கை அறையை சுத்தமாகவும் குளுமையாகவும் கூடிய வரையில் வைத்திருங்கள்.
•  நல்ல படுக்கை, மென்மையான தலையணை ஆகியவற்றை உபயோகப்படுத்துங்கள்.
•  படுக்கையை தூக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்துங்கள்.
•  படுப்பதற்கு முன் நல்ல மனதுக்கு இதமான மெல்லிய இசையைக் கேட்கலாம். அல்லது நல்ல புத்தகங்களைப் படிக்கலாம்.
•  கடிகாரத்தைப் பார்க்கவே பார்க்காதீர்கள். அது கவலையையும் டென்ஷனையுமே தரும்.
•  'நாளை செய்யவேண்டியவற்றை' எண்ணிக் குழம்பாதீர்கள்.அவற்றை ஒரு பேப்பரில் எழுதி வைத்து விடுங்கள்.நிம்மதியாக உறக்கம் வரும்
•  ஆற்றலை அதிகரிக்கும் பவர் நேப் (Powere nap) என்பது மதியம் ஓய்வு நேரத்தில் 15 நிமிடம் முதல் இருபது நிமிடம் வரை அயர்ந்து தூங்குவது தான். இது நல்ல ஆற்றலைத் தரும் என்பதில் சந்தேகமில்லை.
•  அத்தோடு நன்கு வயிறு குலுங்க பத்து நிமிடம் சிரித்து விட்டுத் தூங்கினால் அது இரண்டு மணி நேர வலியற்ற நிம்மதியான தூக்கத்தை நோயாளிகளுக்குக் கூடத் தரும் என்ற உண்மையை உணர்ந்து நல்ல ஜோக்குகளைப் படித்து மகிழுங்கள்; காமடி படங்களைப் பார்த்துச் சிரியுங்கள்.

சீரான தூக்கம் சீரான வாழ்க்கைக்கு இன்றியமையாத அஸ்திவாரம்!

(நன்றி : குவைத் தமிழ் அமுதம்) 
Download As PDF

Facebook Comments

0 comments:

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out