Posted: 23 Jan 2011 12:06 AM PST
அஸ்ஸலாம் அலைக்கும் வரஹ்…உங்களுக்கு கிடைத்திருக்கும்
– இந்நூல் பற்றிய சுருக்கமான ஓர் அறிமுகம்.
ஹிஜ்ரி 1396 ஆம் ஆண்டு ரபீவுல் அவ்வல் மாதம் (1976 மார்ச்) பாகிஸ்தானில் நபி முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு குறித்து உலகளாவிய மாநாடு நடைபெற்றது.
அந்த மாநாட்டில், “ராபிததுல் ஆலமில் இஸ்லாமி” (Muslim World League) என்ற பெயரில் மக்காவை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் இஸ்லாமிய நிறுவனம் கீழ்கண்ட ஓர் அழகிய அறிவிப்பை வெளியிட்டது. அதாவது, “நபி (ஸல்) அவர்களின் தூய வாழ்க்கை வரலாற்றை இஸ்லாமிய அறிஞர்கள் ஆய்வு செய்து, கட்டுரைகள் எழுதி ராபிதாவிடம் சமர்பிக்க வேண்டும். அவற்றுள் முதல் தரமாக தேர்வு செய்யப்படும் முதல் ஐந்து ஆய்வுகளுக்கு மொத்தம் 1,50,000 ஸவூதி ரியால்கள் அன்பளிப்பாக வழங்கப்படும்.” என்பதே அந்த அறிவிப்பு.
இந்த அறிவிப்பை தொடர்ந்து பல அறிஞர் பெருமக்கள் பெரும் முயற்சி எடுத்து தனது ஆய்வுகளை கோர்வை செய்து ராபிதாவுக்கு அனுப்பினர். பல மொழிகளில் மொத்தம் 1182 ஆய்வுகள் அனுப்பப்பட்டன. அவற்றுள் 183 ஆய்வுகள் மட்டுமே அவர்கள் கூறிய நிபந்தனைக்குட்பட்டு இருந்ததால் அவை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அப்படி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டவற்றில் ஐந்து ஆய்வுகள் முதல் தரம் வாய்ந்தவை என முடிவு செய்யப்பட்டது. அதில் ஒன்று தான் உங்கள் கையில் தவழும் இந்நூல் “அர்ரஹீக்குல் மக்தூம்” இதன் ஆசிரியர் உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த சகோ. மௌலவி ஸஃபியுர்ரஹ்மான் அவர்கள். தமிழில் இதை மொழிப்பெயர்த்தவர் சகோ. மௌலவி முஃப்தி உமர் ஷரீஃப் காஷிமி(தாருல் ஹூதா) அவர்கள்.
0 comments:
Post a Comment