அடமானம், ஒத்தி சம்பந்தமாக முன்னர் வோறோர் இழையில் பதிவுசெய்த கருத்துகள் மீண்டும் மீள் பதிவாக பார்வைக்கு:
ஒத்திக்கு வீடு, கடை, நிலம் என ஒப்பந்தம் முடித்து, பணம் கொடுத்தவர் வீடு, கடை, நிலத்தை ஒத்திக்கு முடித்திருக்கிறேன் என்ற உரிமையில், வாடகை எதுவுமின்றி அவற்றைப் பயன்படுத்துவாரேயானால் கொடுத்த பணத்திற்கு அதில் வட்டி ஏற்படும் என்பதைக் கவனத்தில் கொள்க!
*************************
கேள்வி:-
ஒத்திக்கு விடுவதற்க்கும், அடமானம் வைப்பதற்க்கும் என்ன வித்தியாசம் என்று குரான், ஹதீஸ் வழி நின்று விளக்கம் தரவும்.
குறிப்பு:
1. ஒத்திக்கு விடுதல் என்பது, ஒரு வீட்டையோ, கடையையோ ஒரு வருடம், அல்லது இரண்டு வருடத்திற்க்கு கொடுத்து, அதற்க்காக பணம் வாங்கிக் கொண்டு, அவர்கள் காலி செய்யும்போது அந்த பணத்தை அப்படியே திருப்பிக் கொடுக்க வேண்டும்.
2. அடமானம் என்பது ஒரு பொருளை வைத்தோ, அல்லது ஒரு இடத்தை வைத்தோ அல்லது ஒரு வீட்டை வைத்தோ பணம் பெற்றுக் கொண்டு, மீண்டும் பணம் கிடைத்தவுடன் அந்த வீட்டை மீட்பது அடமானம். இங்கு நான் வட்டிக்கு அடமானம் வைப்பது பற்றி பேசவில்லை. வட்டியில்லா கடன் கொடுக்கிறவர்களும், அடமானத்திற்க்கு பொருளை வாங்கிக் கொண்டு தான் கடன் கொடுக்கிறார்கள். பைத்துல்மால் நடத்தும் ஊர்களில் கூட அப்படித்தான் செய்கிறார்கள்.
மேலே சொன்ன இரண்டிற்க்கும் உள்ள வித்தியாசத்தை குர்ஆன், ஹதீஸ் வழி நின்று விளக்கம் தரவும்.
அன்புடன்
ஹாஜா மைதீன் அஷ்ரப் அலி
துபாய், ஐக்கிய அரபு அமீரகம்

பதில்:-
அடமானம்
இன்னும், நீங்கள் பிரயாணத்திலிருந்து, (அச்சமயம்) எழுதுபவனை நீங்கள் பெற்றுக் கொள்ளாவிட்டால், (கடன் பத்திரத்திற்கு பதிலாக ஏதேனும் ஒரு பொருளை கடன் கொடுத்தவன்) அடமானமாகப் பெற்றுக் கொள்ளலாம். உங்களில் ஒருவர் மற்றவரை நம்பி (இவ்வாறு ஒரு பொருளைக் காப்பாக வைத்தால்,) யாரிடத்தில் அமானிதம் வைக்கப்பட்டதோ அவன் அதனை ஒழுங்காகத் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். அவன் தன் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும். அன்றியும், நீங்கள் சாட்சியத்தை மறைக்க வேண்டாம் - எவன் ஒருவன் அதை மறைக்கின்றானோ நிச்சயமாக அவனுடைய இருதயம் பாவத்திற்குள்ளாகிறது - இன்னும் நீங்கள் செய்வதையெல்லாம் அல்லாஹ் நன்கறிவான். (அல்குர்ஆன் 2:283)
நபி(ஸல்) அவர்கள் ஒரு யூதனிடம் குறிப்பிட்ட தவணை(யில் பணம் தருவதாகக்) கூறி உணவு தானியத்தை வாங்கினார்கள். அவனிடம் (அதற்காக) இரும்புக் கவசம் ஒன்றை அடமானம் வைத்தார்கள். அறிவிப்பவர் ஆயிஷா (ரலி) (நூல் - புகாரி 2386)
ஈட்டுப் பொருளை அடமானமாகக் கொடுத்து கடன் வாங்குவதை மார்க்கம் அனுமதிக்கிறது. கடன் கொடுப்பதில் நம்பிக்கையின்மை ஏற்பட்டு, மோசடி நடப்பதைத் தவிர்க்க கடன் தொகைக்கு ஈடாக எதையேனும் அடமானப் பொருளைப் பெற்றுக்'கொள்ளலாம். இது கடன் கொடுப்பவரின் விருப்பத்திலுள்ளது.
அடமானம் வைக்கும் பொருள் சிறியதாக இருந்தால் அதைக் கடன் தருபவரிடம் ஒப்படைத்துவிட வேண்டும். அதுவே நிலமாக, கட்டடமாக இருந்தால் அதற்கான ஆவணப் பத்திரங்களைக் கடன் தருபவரிடம் ஒப்படைக்க வேண்டும். கடன் பெறுபவர் மீண்டும் கடனை எப்போது திரும்பச் செலுத்துகிறரோ அப்போது கடன் தொகையைப் பெற்றுக்கொண்டு, அடமானம் பெற்ற பொருளை அல்லது ஆவணப் பத்திரங்களைத் திரும்பத் தந்துவிட வேண்டும். இதுவே அடமானம் அடிப்படையில் கடன் வழங்கும் முறையாகும்.
ஒத்திக்கு விடுதல்
''ஒத்திக்கு'' விடுதல் என்பது வீடு அல்லது கடை என கட்டிடமாக ஒத்திக்கு விடப்படுகிறது. அதாவது, கட்டிடத்துக்குச் சொந்தக்காரர் ஒரு குறிப்பிட்ட தொகையைப் பெற்றுக்கொண்டு கட்டிடத்தை பணம் தந்தவரின் அக்கிரமிப்புக்கு விட்டுவிடுகிறார். ஒத்திக்கு விடுவதிலும் கட்டிடத்தின் உரிமையாளர் பணத்தைத் திரும்பத் தந்துவிட்டால் ஒத்திக்கு எடுத்தவர் கட்டிடத்தைக் காலி செய்துவிட வேண்டும். இவை மேலோட்டமாக பார்க்கும்போது அடமானம் கடனுக்கு நெருக்கமாக உள்ளது போல் தோன்றினாலும் அவ்வாறு இல்லை.
ஒத்திக்கு எடுத்தவர் கட்டிடத்திற்கான வாடகை ஏதும் உரிமையாளருக்குச் செலுத்துவதில்லை. வாடகை எதுவும் செலுத்தாமல் கட்டிடத்தில் அவர் குடியேறுவது, கடையாக இருந்தால் அதில் வியாபாரம் செய்வதும் இவை ஒத்திக்காக உரிமையாளருக்குக் கொடுத்த பணத்திற்கான வட்டியாகப் பெற்றுக்கொள்கிறார். எவ்வித செலவுமின்றி கட்டிடத்தை சும்மா அனுபவிப்பதில் வெளிப்படையான வட்டி ஏற்படுகின்றது.
கடன், அடமானம், ஒத்தி, குத்தகை என எப்படிப் பெயரை மாற்றிச் சொன்னாலும் அவற்றின் செயல்களில் வட்டியேற்படாமல் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
(அல்லாஹ் மிக அறிந்தவன்)
0 comments:
Post a Comment