ஆண்கள் / பெண்கள் தலைக்கு கருப்பு நிறத்தை தவிர்த்து சாயம் பூசலாமா???
பதில்:-
வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்,
யூதர்களும் கிறிஸ்தவர்களும் (தம் தாடிகளுக்கும் தலைமுடிக்கும்) சாயமிட்டுக் கொள்வதில்லை. எனவே, நீங்கள் (அவற்றிற்குக் கருப்பு அல்லாத சாயமிட்டு) அவர்களுக்கு மாறு செய்யுங்கள். என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) (நூல்கள் - புகாரி 3462, 5899. முஸ்லிம் 4271. திர்மிதீ)
நான் அனஸ்(ரலி) அவர்களிடம், 'நபி(ஸல்) அவர்கள் (தம் நரை முடிக்குச்) சாயம் பூசியதுண்டா?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'நபி(ஸல்) அவர்களுக்குச் சிறிதளவே நரை ஏற்பட்டிருந்தது' என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர் முஹம்மத் இப்னு சீரின் (ரஹ்) (நூல் - புகாரி 5894)அனஸ்(ரலி) அவர்களிடம், 'நபி(ஸல்) அவர்கள் (தம் நரை முடிக்குச்) சாயம் பூசியதுண்டா?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், 'நபி(ஸல்) அவர்களுக்குச் சாயம் பூசுகிற அளவிற்கு நரைக்கவில்லை. அவர்களின் தாடியிலிருந்த வெள்ளை முடிகளை நான் நினைத்திருந்தால் எண்ணிக் கணக்கெடுத்திருக்க முடியும்' என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர் ஸாபித் அல்புனானீ (ரஹ்) (நூல் - புகாரி 5895)
நபி (ஸல்) அவர்களுக்குக் கூடுதலாக நரைத்திருக்கவில்லை. என்பதை மேல்கண்ட அனஸ் (ரலி) அவர்களின் அறிவிப்பிலிருந்து விளங்க முடிகிறது. நபியவர்கள் தமது முடிக்குச் சாயம் பூசியதாக அறிவிப்பு ஏதுவும் இல்லை. மேலும், நபி (ஸல்) அவர்களும் நபியவர்களின் உற்றத் தோழருமான அபூபக்ர் (ரலி) அவர்களும் நாடு துறந்து மக்காவிலிருந்து மதீனா வந்தபோது, அபூபக்ர் (ரலி) அவர்கள் தமது முடிக்குச் சாயம் பூசியிருந்தார்கள் என்பதை வரும் அறிவிப்பிலிருந்து விளங்கலாம்.
நபி(ஸல்) அவர்கள் (மதீனாவுக்கு) வந்தார்கள். அப்போது அவர்கள் தம் தோழர்களில் அபூ பக்ர் (ரலி) மட்டுமே கருப்பு - வெள்ளை முடி உடையவர்களாக இருந்தார்கள். அன்னார் மருதாணியாலும், 'கதம்' எனும் (ஒரு வகை) இலைச் சாயத்தாலும் தம் (தாடி) முடியைத் தோய்த்து (நரையை) மறைத்துக் கொண்டார்கள். அறிவிப்பவர் அனஸ் இப்னு மாலிக் (ரலி) (நூல் - புகாரி 3919)
நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வருகை தந்தபோது, அவர்கள் தம் தோழர்களிலேயே அபூ பக்ர்(ரலி) தாம் அதிக வயதுடையவர்களாக இருந்தார்கள். பிறகு, தம் (தாடிமுடியை) அபூ பக்ர்(ரலி) மருதாணியாலும், 'கதம்' எனும் இலைச் சாயத்தாலும் தோய்த்து (நரையை) மறைத்துக் கொண்டார்கள். அதனால் அதன் நிறம் கருஞ் சிவப்பாகிவிட்டது. அறிவிப்பவர் அனஸ் இப்னு மாலிக் (ரலி) (நூல் - புகாரி 3920)
நரைத்து விட்டத் தலை முடி மற்றும் தாடிக்கு மருதாணி மற்றும் கதம் எனும் செடியின் இலையின் சாயத்தைப் பூசியும் நரைத்த முடியின் நிறத்தை மாற்றிக்கொள்ளலாம். இதற்கு மார்க்கத்தில் எவ்வித தடையும் இல்லை! நரைத்த முடிக்குக் கருப்புச் சாயம் பூசுவதில் இரு கருத்துகள் உள்ளன. அதற்கான அறிவிப்புகளையும் பார்ப்போம்!
கருப்புச் சாயம் பூசுவது
(அபூபக்ர் (ரலி) அவர்களின் தந்தை) அபூகுஹாஃபா அவர்கள் மக்கா வெற்றி ஆண்டில் அல்லது மக்கா வெற்றி நாளில் (நபி (ஸல்) அவர்களிடம்) வந்தார். அல்லது கொண்டுவரப்பட்டார். அவரது தலை முடியும் தாடியும் தும்மைப் பூவைப் போன்று (தூய வெள்ளை நிறத்தில் இருந்தன. அவருடைய துணைவியரிடம் ''இ(ந்த வெள்ளை நிறத்)தை ஏதேனும் (சாயம்) கொண்டு மாற்றுங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். அறிவிப்பவர் ஜாபிர் (ரலி) (நூல் - முஸ்லிம் 4269)
மக்கா வெற்றி நாளில் (அபூபக்ர் (ரலி) அவர்களின் தந்தை) அபூகுஹஃபா (நபி (ஸல்) அவர்களிடம்) கொண்டு வரப்பட்டார். அவரது தலை முடியும் தாடியும் தும்பைப் பூவைப் போன்று வெள்ளை நிறத்தில் இருந்தன. ''இ(ந்த வெள்ளை நிறத்)தை ஏதேனும் (சாயம்) கொண்டு மாற்றுங்கள். கருப்பு நிறத்தை தவிர்த்துக்கொள்ளுங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் ஜாபிர் (ரலி) (நூல் - முஸ்லிம் 4270)
முஸ்லிம் நூலில் பதிவுசெய்யப்பட்ட மேல்கண்ட நபித்தோழர் ஜாபிர் (ரலி) அவர்களின் அறிவிப்பில், ''இவருக்குக் கருப்புச் சாயத்தைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்'' என சற்றுக் கூடுதல் விபரங்களுடன் அஹ்மத் 12174 இப்னுமாஜா 3925 நூல்களிலும் இடம்பெற்றுள்ளன. மக்கா வெற்றி நாளில், அபூபக்ர் (ரலி) அவர்கள் தமது தந்தை அபூகுஹஃபாவைச் சுமந்துகொண்டு நபி (ஸல்) அவர்களிடம் வந்தார் என்று அஹ்மத் நூலின் அறிவிப்பில் இடம்பெற்றுள்ளது.
அபூபக்ர் (ரலி) அவர்கள் நபித்தோழர்களிலேயே வயதில் முதியவராவார். நபியைவிட வயதில் மூத்தவர். அவரின் தந்தை அபூகுஹஃபா இன்னும் முதுமை வயதுடையராகவே இருந்திருப்பார். அதிக வயதின் காரணமாக அவரால் நடக்க இயலாமல், சுமந்துகொண்டு வரும்படி நேருகிறது. வயதில் மிகவும் முதியவரான ஒருவருக்கு தலை முடியும் தாடியும் நரைத்து, அவற்றுக்குக் கருப்புச் சாயம் பூசினால் முதிர்ந்த வயதுக்கு அது பொருத்தமற்றதாகும். எனவே ''இவருக்குக் கருப்புச் சாயத்தைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருப்பது, பொதுவானத் தடையாகக் கொள்ளாமல், வயதுக்கும் முடியின் நிறத்துக்கும் சம்பந்தமில்லாமல் அதில் ஒரு போலித்தனம் ஏற்படுகிறது. எனவே, நரையைக் கருப்புச் சாயத்தால் மறைப்பதை முதியவர்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும். என்றே விளங்கமுடிகிறது.
இளம் வயதில் நரைத்தவர் தலை முடிக்கும் தாடிக்கும் கருப்புச் சாயம் பூசிக் கொள்வது வயதுக்கும் முடிக்கும் பொருத்தமாகவே இருக்கும். இதில் எந்த ஏமாற்று வேலையோ, போலித்தனமோ இல்லாததால் இளவயதுடையோர் கருப்புச் சாயம் பூசிக் கொள்ளலாம்.
முஸ்லிம் 4270, நூலில் இடம்பெற்றுள்ள அறிவிப்பில் ''கருப்பு நிறத்தைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்'' என்பது பொதுவான அறிவிப்பாகத் தோன்றினாலும் அஹ்மத், இப்னுமாஜா அறிவிப்புகளில் ''இவருக்குக் கருப்புச் சாயத்தைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்'' என்பது குறிப்பிட்ட ஒரு சாராருக்கு மட்டும் சொன்னதாகவே விளங்கமுடிகிறது! இளவயதுடையோர் நரை முடிக்குக் கருப்புச் சாயம் பூசுவதைத் தவிர்க்க வலுவான சான்றுகள் இல்லை!
''நரையை மாற்றுவதில் மிகவும் அழகானது மருதாணியும், கதம் எனும் பூண்டுமாகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அபூதர் (ரலி) (நூல்கள் - திர்மிதீ, அபூதாவூத், நஸயீ, அஹ்மத். இப்னுமாஜா)
இந்த அறிவிப்பிலும் நரைக்குக் கருப்புச் சாயம் பூசக்கூடாது என்ற தடையேதும் இல்லை!
பெண்கள் நரைக்கு சாயம் பூசலாமா?
பொது இடங்களில் பெண்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு இருப்பதால் பருவமடைந்த பெண்கள் வெளியில் செல்லும்போது தலை மறைத்துக்கொள்ள வேண்டும். வீட்டில் இருக்கும்போது கூந்தல் அலங்காரத்தை மறைக்க வேண்டியதில்லை. தலை முடி நரைத்திருந்து விரும்பினால் சாயம் பூசிக் கொள்ளலாம். அல்லது கணவனுக்காக, கணவனின் விருப்பத்திற்காகவும் நரை முடிக்குச் சாயம் பூசிக் கொள்ளலாம்.
மாற்றுக் கருத்துடையோர் தக்க ஆதாரங்களுடன் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும்!
(அல்லாஹ் மிக அறிந்தவன்)
பதில்:-
வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்,
யூதர்களும் கிறிஸ்தவர்களும் (தம் தாடிகளுக்கும் தலைமுடிக்கும்) சாயமிட்டுக் கொள்வதில்லை. எனவே, நீங்கள் (அவற்றிற்குக் கருப்பு அல்லாத சாயமிட்டு) அவர்களுக்கு மாறு செய்யுங்கள். என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) (நூல்கள் - புகாரி 3462, 5899. முஸ்லிம் 4271. திர்மிதீ)
நரைத்த தலை முடிக்கும் தாடிக்கும் சாயம் பூசி, யூத கிறிஸ்துவர்களுக்கு மாறுசெய்யுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளனர்.
நான் அனஸ்(ரலி) அவர்களிடம், 'நபி(ஸல்) அவர்கள் (தம் நரை முடிக்குச்) சாயம் பூசியதுண்டா?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'நபி(ஸல்) அவர்களுக்குச் சிறிதளவே நரை ஏற்பட்டிருந்தது' என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர் முஹம்மத் இப்னு சீரின் (ரஹ்) (நூல் - புகாரி 5894)
நபி (ஸல்) அவர்களுக்குக் கூடுதலாக நரைத்திருக்கவில்லை. என்பதை மேல்கண்ட அனஸ் (ரலி) அவர்களின் அறிவிப்பிலிருந்து விளங்க முடிகிறது. நபியவர்கள் தமது முடிக்குச் சாயம் பூசியதாக அறிவிப்பு ஏதுவும் இல்லை. மேலும், நபி (ஸல்) அவர்களும் நபியவர்களின் உற்றத் தோழருமான அபூபக்ர் (ரலி) அவர்களும் நாடு துறந்து மக்காவிலிருந்து மதீனா வந்தபோது, அபூபக்ர் (ரலி) அவர்கள் தமது முடிக்குச் சாயம் பூசியிருந்தார்கள் என்பதை வரும் அறிவிப்பிலிருந்து விளங்கலாம்.
நபி(ஸல்) அவர்கள் (மதீனாவுக்கு) வந்தார்கள். அப்போது அவர்கள் தம் தோழர்களில் அபூ பக்ர் (ரலி) மட்டுமே கருப்பு - வெள்ளை முடி உடையவர்களாக இருந்தார்கள். அன்னார் மருதாணியாலும், 'கதம்' எனும் (ஒரு வகை) இலைச் சாயத்தாலும் தம் (தாடி) முடியைத் தோய்த்து (நரையை) மறைத்துக் கொண்டார்கள். அறிவிப்பவர் அனஸ் இப்னு மாலிக் (ரலி) (நூல் - புகாரி 3919)
நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வருகை தந்தபோது, அவர்கள் தம் தோழர்களிலேயே அபூ பக்ர்(ரலி) தாம் அதிக வயதுடையவர்களாக இருந்தார்கள். பிறகு, தம் (தாடிமுடியை) அபூ பக்ர்(ரலி) மருதாணியாலும், 'கதம்' எனும் இலைச் சாயத்தாலும் தோய்த்து (நரையை) மறைத்துக் கொண்டார்கள். அதனால் அதன் நிறம் கருஞ் சிவப்பாகிவிட்டது. அறிவிப்பவர் அனஸ் இப்னு மாலிக் (ரலி) (நூல் - புகாரி 3920)
நரைத்து விட்டத் தலை முடி மற்றும் தாடிக்கு மருதாணி மற்றும் கதம் எனும் செடியின் இலையின் சாயத்தைப் பூசியும் நரைத்த முடியின் நிறத்தை மாற்றிக்கொள்ளலாம். இதற்கு மார்க்கத்தில் எவ்வித தடையும் இல்லை! நரைத்த முடிக்குக் கருப்புச் சாயம் பூசுவதில் இரு கருத்துகள் உள்ளன. அதற்கான அறிவிப்புகளையும் பார்ப்போம்!
கருப்புச் சாயம் பூசுவது
(அபூபக்ர் (ரலி) அவர்களின் தந்தை) அபூகுஹாஃபா அவர்கள் மக்கா வெற்றி ஆண்டில் அல்லது மக்கா வெற்றி நாளில் (நபி (ஸல்) அவர்களிடம்) வந்தார். அல்லது கொண்டுவரப்பட்டார். அவரது தலை முடியும் தாடியும் தும்மைப் பூவைப் போன்று (தூய வெள்ளை நிறத்தில் இருந்தன. அவருடைய துணைவியரிடம் ''இ(ந்த வெள்ளை நிறத்)தை ஏதேனும் (சாயம்) கொண்டு மாற்றுங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். அறிவிப்பவர் ஜாபிர் (ரலி) (நூல் - முஸ்லிம் 4269)
மக்கா வெற்றி நாளில் (அபூபக்ர் (ரலி) அவர்களின் தந்தை) அபூகுஹஃபா (நபி (ஸல்) அவர்களிடம்) கொண்டு வரப்பட்டார். அவரது தலை முடியும் தாடியும் தும்பைப் பூவைப் போன்று வெள்ளை நிறத்தில் இருந்தன. ''இ(ந்த வெள்ளை நிறத்)தை ஏதேனும் (சாயம்) கொண்டு மாற்றுங்கள். கருப்பு நிறத்தை தவிர்த்துக்கொள்ளுங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் ஜாபிர் (ரலி) (நூல் - முஸ்லிம் 4270)
முஸ்லிம் நூலில் பதிவுசெய்யப்பட்ட மேல்கண்ட நபித்தோழர் ஜாபிர் (ரலி) அவர்களின் அறிவிப்பில், ''இவருக்குக் கருப்புச் சாயத்தைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்'' என சற்றுக் கூடுதல் விபரங்களுடன் அஹ்மத் 12174 இப்னுமாஜா 3925 நூல்களிலும் இடம்பெற்றுள்ளன. மக்கா வெற்றி நாளில், அபூபக்ர் (ரலி) அவர்கள் தமது தந்தை அபூகுஹஃபாவைச் சுமந்துகொண்டு நபி (ஸல்) அவர்களிடம் வந்தார் என்று அஹ்மத் நூலின் அறிவிப்பில் இடம்பெற்றுள்ளது.
அபூபக்ர் (ரலி) அவர்கள் நபித்தோழர்களிலேயே வயதில் முதியவராவார். நபியைவிட வயதில் மூத்தவர். அவரின் தந்தை அபூகுஹஃபா இன்னும் முதுமை வயதுடையராகவே இருந்திருப்பார். அதிக வயதின் காரணமாக அவரால் நடக்க இயலாமல், சுமந்துகொண்டு வரும்படி நேருகிறது. வயதில் மிகவும் முதியவரான ஒருவருக்கு தலை முடியும் தாடியும் நரைத்து, அவற்றுக்குக் கருப்புச் சாயம் பூசினால் முதிர்ந்த வயதுக்கு அது பொருத்தமற்றதாகும். எனவே ''இவருக்குக் கருப்புச் சாயத்தைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருப்பது, பொதுவானத் தடையாகக் கொள்ளாமல், வயதுக்கும் முடியின் நிறத்துக்கும் சம்பந்தமில்லாமல் அதில் ஒரு போலித்தனம் ஏற்படுகிறது. எனவே, நரையைக் கருப்புச் சாயத்தால் மறைப்பதை முதியவர்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும். என்றே விளங்கமுடிகிறது.
இளம் வயதில் நரைத்தவர் தலை முடிக்கும் தாடிக்கும் கருப்புச் சாயம் பூசிக் கொள்வது வயதுக்கும் முடிக்கும் பொருத்தமாகவே இருக்கும். இதில் எந்த ஏமாற்று வேலையோ, போலித்தனமோ இல்லாததால் இளவயதுடையோர் கருப்புச் சாயம் பூசிக் கொள்ளலாம்.
முஸ்லிம் 4270, நூலில் இடம்பெற்றுள்ள அறிவிப்பில் ''கருப்பு நிறத்தைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்'' என்பது பொதுவான அறிவிப்பாகத் தோன்றினாலும் அஹ்மத், இப்னுமாஜா அறிவிப்புகளில் ''இவருக்குக் கருப்புச் சாயத்தைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்'' என்பது குறிப்பிட்ட ஒரு சாராருக்கு மட்டும் சொன்னதாகவே விளங்கமுடிகிறது! இளவயதுடையோர் நரை முடிக்குக் கருப்புச் சாயம் பூசுவதைத் தவிர்க்க வலுவான சான்றுகள் இல்லை!
''நரையை மாற்றுவதில் மிகவும் அழகானது மருதாணியும், கதம் எனும் பூண்டுமாகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அபூதர் (ரலி) (நூல்கள் - திர்மிதீ, அபூதாவூத், நஸயீ, அஹ்மத். இப்னுமாஜா)
இந்த அறிவிப்பிலும் நரைக்குக் கருப்புச் சாயம் பூசக்கூடாது என்ற தடையேதும் இல்லை!
பெண்கள் நரைக்கு சாயம் பூசலாமா?
பொது இடங்களில் பெண்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு இருப்பதால் பருவமடைந்த பெண்கள் வெளியில் செல்லும்போது தலை மறைத்துக்கொள்ள வேண்டும். வீட்டில் இருக்கும்போது கூந்தல் அலங்காரத்தை மறைக்க வேண்டியதில்லை. தலை முடி நரைத்திருந்து விரும்பினால் சாயம் பூசிக் கொள்ளலாம். அல்லது கணவனுக்காக, கணவனின் விருப்பத்திற்காகவும் நரை முடிக்குச் சாயம் பூசிக் கொள்ளலாம்.
மாற்றுக் கருத்துடையோர் தக்க ஆதாரங்களுடன் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும்!
(அல்லாஹ் மிக அறிந்தவன்)
0 comments:
Post a Comment