எனக்கு ஒரு கனவு உண்டு...... |
சனிக்கிழமை, 12 பிப்ரவரி 2011 13:50 |
I have a dream.... இது மார்ட்டின் லூதர் கிங் என்ற கருப்பினப் போராளி, 1963ம் ஆண்டு பேசிய புகழ் பெற்ற பேச்சு. எப்போது இந்தப் பேச்சைக் கேட்டாலும், சவுக்குக்கு உடல் சிலிர்க்கும். “ஒரு நாள், தங்களுடைய தோலின் நிறத்தை வைத்து மதிக்கப் படாமல், அவர்களின் குணத்தை வைத்து மதிக்கப் படும் ஒரு நாட்டில் என்னுடைய நான்கு குழந்தைகளும் வாழ்வார்கள் என்ற கனவு எனக்கு உண்டு” என்று பேசினார் மார்ட்டின். அதே போலத் தான், ஆண்டிமுத்துவின் மகனுக்கும் ஒரு கனவு உண்டு. தாழ்த்தப்பட்ட ஒடுக்கப் பட்ட சமூகத்தில் பிறந்த அவர், செல்வந்தர்களும், மேட்டுக் குடி மக்களும், சொகுசு பங்களாக்களில் வாழ்வது போல, தன் மக்கள் அல்ல, தானும் தன் குடும்பத்தாரும் வாழ வேண்டும் என்ற கனவு அவருக்கு உண்டு. அப்படித்தான் கனவு கண்டார் ராசா. அந்தக் கனவை நனவாக்குவதற்காக ராசா எடுத்த நடவடிக்கை என்ன என்பதைத் தான் நாடே அறியுமே. ராசா என்ன செய்கிறார்...... நாட்டில் அத்தனை பேருமே, நம்மையும், நண்பர் காமராஜையும், போலிப் பாதிரியையும், தலைவர் கருணாநிதியையும் போல பேராசைபிடித்தவர்கள். அதனால், எத்தனை கோடி ரூபாய் அடித்தாலும், யாரும் கேட்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையிலேயே இருந்தார். இந்த நம்பிக்கையில் ஊட்டியில் ஒரு பிரம்மாண்ட சொகுசு பங்களா கட்ட திட்டமிடுகிறார். அதற்கான முதற்கட்ட வேலைகளில் இறங்கி, கட்டிட வடிவமைப்பாளர்களிடம் இந்த பொறுப்பை ஒப்படைக்கிறார். அவர்களும், உலகத் தரம் வாய்ந்த ஒரு சொகுசு பங்களாவை வடிவமைக்கிறார்கள். அந்த பங்களாவை கட்டலாம் என்று ராசா உத்தேசித்துக் கொண்டிருக்கும் போதே, ராசாவை சிபிஐ கட்டம் கட்டியதுதான் சோதனை. இது தொடர்பாக சம்பந்தப் பட்ட வடிவமைப்பாளர்களிடம் சவுக்கு பேசிய போது, முதலில் மறுத்தவர்கள், பிறகு ‘இந்த மெயில் உங்களுக்கு எப்படிக் கிடைத்த்து ? இது நாங்கள் எங்களுக்குள் பரிமாறிக் கொண்ட மெயிலாயிற்றே. உங்களுக்கு எப்படிக் கிடைத்த்து“ என்று கேட்டனர். இது உண்மையா இல்லையா என்று சொல்லுங்கள் என்று கேட்டதற்கு, “இது உண்மை இல்லை என்று தான் சொல்லச் சொல்லி எங்களுக்கு உத்தரவு“ என்றார். நீங்கள் இதை மறுக்கிறீர்களா என்று கேட்டதற்கு, “நாங்கள் மறுக்கவும் இல்லை, ஆமோதிக்கவும் இல்லை“ என்றனர். மேலும் கேட்டதற்கு, “இதை நாங்கள் மட்டும் வடிவமைக்கவில்லை. பலர் வடிவமைத்திருக்கிறார்கள். இதற்கு நாங்கள் மட்டும் பொறுப்பாக முடியாது. “ என்றனர். மேலும் வற்புறுத்திக் கேட்டதற்கு, “நாங்கள் வடிவமைக்கவில்லை என்று சொல்ல முடியாது.. ஆனால் இது எங்களுடைய மெயில் தான்“ என்றார்கள். இந்த புகைப்படம், இவர்கள் மெயிலில் இருந்து எடுக்கப் படவில்லை. இந்தப் புகைப்படம், ஆண்டிமுத்து ராசாவின் வீட்டிலிருந்து கைப்பற்றப் பட்ட கம்ப்யூட்டரில் இருந்து சிபிஐ கைப்பற்றியது. இந்த மெயில் தொடர்ந்து பலரால் பரிமாறப்பட்டுக் கொள்ளப் பட்டு வந்தாலும், அந்த மெயிலில் இந்த வீடு, மும்பை நரிமன் பாயிண்டில் உள்ள ராசாவின் வீடு என்ற தகவல் உள்ளது. ஆனால் இது தவறு. இது ராசா கட்ட உத்தேசித்த கனவு வீடு.... கனவை இப்படிப் பொய்யாக்கி விட்டீர்களே..... பாவிகளே....... எப்படிப் பட்ட கனவு கொண்டு கண்டிருந்தார் அந்த்த் தகத்தாய கதிரவன்.... ? இப்படி ஆக்கி விட்டீர்களே..... அய்யகோ... |
0 comments:
Post a Comment