2010-12-28 11:35:08 இச்செய்தியை படித்தோர் - (1008)
யாழ்ப்பாணத்து பள்ளி மாணவி ஒருவருக்கு 76 பேருடன் பாலியல்ரீதியாத தொடர்பு இருந்ததாக அவரே தெரிவித்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். 17 வயதாகும் இம் மாணவிக்கு எயிட்ஸ் நோய் இருப்பதாகவும் சந்தேகிக்கப்படுகிறது. சமீபத்தில் கொழும்பு வைத்தியசாலை ஒன்றில் இராணுவச் சிப்பாய் ஒருவருக்கு எயிட்ஸ் நோய் இருப்பது உறுதிசெய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அச் சிப்பாய் யார் யாருடன் உடலுறவை வைத்திருந்தார் என மருத்துவர்கள் கண்டறிய முற்பட்டவேளை இச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக அறியப்படுகிறது. இச் சிப்பாய் குறித்த 17 வயது மாணவியோடு உறவுவைத்திருந்ததை ஒத்துக்கொண்டுள்ளார்.
கொழும்பில் இருந்து யாழ் மருத்துவர்களுக்கு இப் பெண் தொடர்பாக அவசர செய்திகள் அனுப்பப்பட்டது. இதனையடுத்து நடாத்தப்பட்ட விசாரணையின்போது, தன்னுடன் 76 ஆண்கள் தொடர்புகளை வைத்திருந்ததாக அவர் முதல் கட்டமாகத் தெரிவித்துள்ளார். 14 வயதில் இருந்தே தன்னுடன் ஆண்கள் உடலுறவுரீதியான தொடர்புகளை பேணிவந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதனிடையே இந்த 76 பேர் தொடர்பாக வைத்திய பரிசோதனைகளை மெற்கொள்ள வைத்திய வட்டாரங்கள் தயாராகி வருகின்றன. இவர்களில் கணிசமானவர்கள் படையினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
யாழ் குடாநாட்டில் வேகமாகப் பரவிவரும் எயிட்ஸ் நோய் காரணமாக மக்கள் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர். குறிப்பாக யாழ் போதனா வைத்தியசாலையில் 20 வயதுக்கும் குறைவான பெண்களே தினமும் கருக்கலைப்புக்கு வந்துபோவதாக மேலும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்பாணத்தில் உள்ள சில முன்னணிப் பாடசாலைகளில் படிக்கும் மாணவ மாணவியரிடையே ஆபாசப் படங்கள் சி.டியாகவும், மற்றும் மொபைல் போன்களிலும் சரளமாகப் பிளங்குவதாகவும், மைதானங்கள் மற்றும் மலசலகூடங்களிலும் இவைகளை மாணவர்கள் மறைத்து வைத்துப் பார்ப்பதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவை எவ்வாறு இவர்கள் கைகளில் கிடைக்கிறது என்பதே என்பதே பெரும் மர்மமாக உள்ளதாக அறியப்படுகிறது
source: http://www.kingtamil.com/more.php?id=586
0 comments:
Post a Comment