2010-12-27 16:04:00 இச்செய்தியை படித்தோர் - (599)
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் ஒக்லாண்ட் நகரத்தைச் சேர்ந்த 33 வயது இளைஞன் ஒருவர் மனைவியின் மின்னஞ்சலை கள்ளத்தனமாக பார்வையிட்டமைக்காக நீதிமன்றத்தில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டு உள்ளார்.
இவரின் பெயர் Leon Walker. வீட்டில் இவரும், மனைவியும் ஒரு மடிக் கணனியைத்தான் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். மனைவிக்கு ஜீ-மெய்ல் கணக்கு ஒன்று உண்டு. இக்கணக்குரிய இரகசிய கடவுக் குறியீட்டை பயன்படுத்தி மனைவியின் மின்னஞ்சலை திறந்து பார்வையிட்டு இருக்கின்றார்.
மனைவிக்கு இன்னொருவருடன் கள்ளத் தொடர்பு உண்டு என்பதை மின்னஞ்சல் தகவல்கள் மூலம் தெரிந்து கொண்டார். இந்நிலையில் இவருக்கு எதிராக மனைவி சட்ட நடவடிக்கை எடுத்து உள்ளார். குற்றவாளியாக காணப்பட்டால் குறைந்தது ஐந்து வருட கடூழிய தண்டனையை இளைஞன் எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.
இது ஒரு விசித்திரமான வழக்கு என்று சட்டவல்லுனர்கள் கூறுகின்றார். இவரிடம் இருந்து மனைவி இம்மாத ஆரம்பத்தில் விவாகரத்துப் பெற்றுக் கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment