இந்திய தவ்ஹீத் ஜமாத்
பெயரை பயன்படுத்த தடை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தொடர்ந்த வழக்கில் இந்திய தவ்ஹீத் ஜமாத் பெயரை எந்த அமைப்பும் பயன்படுத்த கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முஸ்லீம் அமைப்புகளில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், தமுமுக, மனித நேய மக்கள் கட்சி, மனித நேய மக்கள் முன்னேற்ற கழகம், இந்திய தவ்ஹீத் ஜமாத், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்று பல்வேறு பிரிவுகள் உள்ளன.
இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்திற்கும், இந்திய தவ்ஹீத் ஜமாத்திற்கும் ஒரே மாதிரி அமைப்பின் பெயர் உள்ளதால் நிர்வாகிகளிடையே மட்டுமில்லாமல் பொதுமக்களிடமும் குழப்பம் நிலவுகிறது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்புதான் முதலில் துவங்கியது. எனவே இந்திய தவ்ஹீத் ஜமாத் அமைப்பினை தங்கள் பெயரில் பதிவு செய்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து இந்திய தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் இனி அந்த பெயரை பயன்படுத்த கூடாது என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.
மனுவை விசாரித்த நீதிபதி ராஜேஷ்வரன் இந்திய தவ்ஹீத் ஜமாத் என்ற பெயரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் மட்டுமே பயன்படுத்த வேண்டும். வேறு எந்த அமைப்பினரும் அந்த பெயரை பயன்படுத்த கூடாது என்று உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நெல்லை மாவட்ட தலைவர் யூசுப்அலி, செயலாளர் சாதிக் மற்றும் நிர்வாகிகள் மாநகர போலீஸ் கமிஷனரை சந்தித்து மனு கொடுத்தனர். ‘அதில் நீதிமன்ற உத்தரவிற்கு பிறகும் இந்திய தவ்ஹீத் ஜமாத் பெயரை சிலர் பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளனர்.
தவ்ஹீத் ஜமாஅத்
துபை.
0 comments:
Post a Comment