கேள்வி:-
அஸ்ஸலாமு அலைக்கும்,
சிறு குழந்தைகளுக்கு பயம் வராமல் இருப்பதற்கு ஆயத்துல் குர்சியை பெரியவர்கள் ஓதி ஓதுகிறார்கள். இப்படி ஓதுவது இஸ்லாத்தில் கூடுமா? சில வேளைகளில் ஓத தெரியாத சிறு குழந்தைகளுக்கு உணவு ஊட்டும போது இயற்கையாகவே "பிஸ்மில்லாஹ்" என்று பெரியவர்களின் வாயில் வரும். இதற்கு நன்மை கிடைக்குமா?

- Mohammed Mafaz
பதில்:-
வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்,
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டால் பாதுகாப்புக் கோரும் வசனங்களை(க் கொண்ட குர்ஆனின் கடைசி மூன்று அத்தியாயங்களை) ஓதித் தம் மீது ஊதி, தம் கையை (தம் உடல் மீது) தடவிக் கொள்வார்கள். நபி(ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின்போது, அவர்கள் (ஓதி) ஊதிக் கொள்ளும் பாதுகாப்பு வசனங்களை நான் அவர்களின் மீது (ஓதி) ஊதலானேன். அதை நபி(ஸல்) அவர்களின் (கையில் ஊதி அந்தக்) கையாலேயே அவர்களின் (உடல்) மீது தடவலானேன். அறிவிப்பவர் ஆயிஷா (ரலி) (நூல்கள் - புகாரி 4439, முஸ்லிம், அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத், முவத்தா மாலிக்)
பாகம் 5, அத்தியாயம் 66, எண் 5016
ஆயிஷா(ரலி) அறிவித்தார்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டால், 'அல்முஅவ்விஃதாத்' (பாதுகாப்புக் கோரும் கடைசி மூன்று) அத்தியாயங்களை ஓதித் தம் மீது ஊதிக் கொள்வார்கள். அவர்களின் (இறப்பிற்கு முன்) நோய் கடுமையானபோது, நான் அவற்றை ஓதி அவர்களின் (கையில் ஊதி அந்தக்) கையாலேயே (அவர்களின் உடல் மீது) தடவிக் கொண்டிருந்தேன். நபியவர்களின் கரத்திற்குள் சுபிட்சத்தை (பரக்கத்தை) நாடியே அவ்வாறு செய்தேன்.
பாகம் 5, அத்தியாயம் 66, எண் 5017
ஆயிஷா(ரலி) அறிவித்தார்
நபி(ஸல்) அவர்கள் தங்களின் படுக்கைக்கு (உறங்கச்) சென்றால் ஒவ்வோர் இரவிலும் தம் உள்ளங்கைகளை இணைத்து, அதில் 'குல் ஹுவல்லாஹு அஹத்', 'குல் அஊது பிரப்பில் ஃபலக்', ' குல் அஊது பிரப்பின்னாஸ்' ஆகிய (112, 113, 114) அத்தியாயங்களை ஓதி ஊதிக்கொள்வார்கள். பிறகு தம் இரண்டு கைகளால் (அவை எட்டும் அளவிற்கு) தம் உடலில் இயன்ற வரையில் தடவிக் கொள்வார்கள். முதலில் தலையில் ஆரம்பித்து, பிறகு முகம், பிறகு தம் உடலின் முற்பகுதியில் கைகளால் தடவிக் கொள்வார்கள். இவ்வாறு மூன்று முறை செய்வார்கள்.

குர்ஆன் வசனங்களை ஓதி கைகளில் ஊதி உடம்பில் தடவிக்கொள்ளவும், ஓத இயலாதோருக்கு மற்றவர் ஓதி உதவலாம் என்பதற்கும் மேல்கண்ட புகாரி நூலின் அறிவிப்புகளில் வழிகாட்டல் உள்ளது. குழந்தைகளுக்காக பெரியவர் ஓதி ஊதலாம். மேலும், ஆயத்துல் குர்ஸியை ஓதினால் அல்லாஹ்வின் தரப்பிலிருந்து வானவரின் பாதுகாப்புக் கிடைக்கும் எனவு புகாரி நூலின் அறிவிப்பு:
நபி(ஸல்) அவர்கள் ரமளானுடைய (ஃபித்ரா) ஜகாத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை என்னிடம் கொடுத்தார்கள். அப்போது ஒருவர் வந்து உணவுப் பொருட்களை அள்ளலானார். அவரை நான் பிடித்து, 'உன்னை நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப் போகிறேன்!' என்று கூறினேன். அதற்கவர், 'நான் ஓர் ஏழை!' எனக்குக் குடும்பம் இருக்கிறது. கடும் தேவையும் இருக்கிறது! என்று கூறினார். அவரை நான்விட்டு விட்டேன். விடிந்ததும் நபி(ஸல்) அவர்கள், 'அபூ ஹுரைராவே! நேற்றிரவு உம்மால் பிடிக்கப்பட்டவர் நான், 'இறைத்தூதர் அவர்களே! தாம் கடுமையான வறுமையில் இருப்பதாகவும் தமக்குக் குடும்பம் இருப்பதாகவும் அவர் முறையிட்டார். எனவே, இரக்கப்பட்டு அவரைவிட்டு விட்டேன்! என்றேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நிச்சயமாக அவன் பொண் சொல்லியிருக்கிறான்! மீண்டும் அவன் வருவான்! என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதால் அவன் மீண்டும் வருவான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதால் அவன் மீண்டும் வருவான் என்று நம்பி அவனுக்காக(அவனைப் பிடிப்பதற்காக) காத்திருந்தேன். அவன் வந்து உணவுப் பொருட்களை அள்ளத் தொடங்கியபோது அவனைப் பிடித்தேன். 'உன்னை நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப் போகிறேன்! என்று கூறினேன். அதற்கவன், 'என்னைவிட்டுவிடு! நான் ஓர் ஏழை! எனக்குக் குடும்பமிருக்கிறது! இனிநான் வரமாட்டேன்! என்றான். அவன் மேல் இரக்கப்பட்டு அவனைவிட்டு விட்டேன். விடிந்ததும் நபி(ஸல்) அவர்கள் அபூ ஹுரைராவே! உம்மால் பிடிக்கப்பட்டவன் என்ன செய்தான்! என்று கேட்டார்கள். நான் 'இறைத்தூதர் அவர்களே! அவன் (தனக்குக்) கடும் தேவையும் குடும்பமும் இருப்பதாக முறையிட்டான்; எனவே, அவன் மேல் இரக்கப்பட்டு அவனைவிட்டுவிட்டேன்! என்றேன். 'நிச்சயமாக அவன் உம்மிடம் பொய் சொல்லியிருக்கிறான். திரும்பவும் உம்மிடம் வருவான்! என்றார்கள். மூன்றாம் முறை அவனுக்காகக் காத்திருந்தபோது,அவன் வந்து உணவு பொருட்களை அள்ளத் தொடங்கினான். அவனைப் பிடித்து, 'உன்னை நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப்போகிறேன்! (ஒவ்வொரு முறையும்) 'இனிமேல் வரமாட்டேன்! என்று செல்லிவிட்டு, மூன்றாம் முறையாக நீ மீண்டும் வந்திருக்கிறாய்! என்று கூறினேன். அதற்கவன் 'என்னைவிட்டுவிடும்! அல்லாஹ் உமக்குப் பயனளிக்கக் கூடிய சில வார்த்தைகளைக் கற்றுத் தருகிறேன்!' என்றான். அதற்கு நான் 'அந்த வார்த்தைகள் என்ன? என்று கேட்டேன். 'நீர் படுக்கைக்குச் செல்லும்போது ஆயத்துல் குர்ஸியை ஆரம்பத்திலிருந்து கடைசிவரை ஓதும்! அவ்வாறு செய்தால், விடியும் வரை அல்லாஹ்வின் தரப்பிலிருந்து உம்மைப் பாதுகாக்கிற (வானவர்) ஒருவர் இருந்து கொண்டேயிருப்பார். ஷைத்தானும் உம்மை நெருங்கமாட்டான்!' என்றான். விடிந்ததும் நபி(ஸல்) அவர்கள் 'நேற்றிரவு உம்மால் பிடிக்கப்பட்டவன் என்ன செய்வான்? என்று கேட்டார்கள். 'இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ் எனக்குப் பயனளிக்கக் கூடிய சில வார்த்தைகளைக் கற்றுத் தருவதாக அவன் கூறினான்; அதனால் அவனைவிட்டு விட்டேன்!' என்றேன். 'அந்த வார்த்தைகள் என்ன? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். 'நீர் படுக்கைக்குச் செல்லும்போது ஆயத்துல் குர்சியை ஆரம்பம் முதல் கடைசிவரை ஓதும்! அவ்வாறு ஓதினால், விஷயும் வரை அல்லாஹ்வின் தரப்பிலிருந்து உம்மைப் பாதுகாக்கிற (வானவர்) ஒருவர் இருந்துகொண்டேயிருப்பார். ஷைத்தானும் உம்மை நெருங்கமாட்டான்! என்று என்னிடம் அவன் கூறினான்' எனத் தெரிவித்தேன். நபித்தோழர்கள் நன்மையான(தைக் கற்றுக் கொண்டு செயல் படுத்துவதில் அதிக ஆர்வமுடையவர்களாக இருந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'அவன் பெரும் பொய்யனாக இருந்தாலும் அவன் உம்மிடம் உண்மையைத்தான் சொல்லியிருக்கிறான்! மூன்று இரவுகளாக நீர் யாரிடம் பேசி வருகிறீர் என்று உமக்குத் தெரியுமா? என்று கேட்டனர். 'தெரியாது" என்றேன். 'அவன்தான் ஷைத்தான்!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) (நூல் -புகாரி 2311, 3275)

*************************
உண்ணும் போது இறை நாமம் கூற வேண்டும் என ஆர்வமூட்டி பல நபிமொழிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் கூற மறந்து விட்டால் சாப்பிட்டு முடித்தவுடன் கூறவேண்டும்.
உங்களில் ஒருவர் ஏதேனும் உணவைச் சாப்பிட்டால் ''பிஸ்மில்லாஹ்'' என்று கூறவும். ஆரம்பத்தில் கூற மறந்து விட்டால் ''பிஸ்மில்லாஹி ஃபீ அவ்வலிஹி வ ஆகிரிஹி'' எனக் கூறட்டும். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் ஆயிஷா (ரலி) (நூல்கள் - திர்மிதீ, நஸயீ, அபூதாவூத், இப்னுமாஜா)
குழந்தைக்கு உணவு ஊட்டும்போது அவர்களுக்காக ''பிஸ்மில்லாஹ்'' கூறினால் நன்மையுண்டா? என்பதற்கு நாமறிய நேரடியான ஹதீஸ் இல்லை என்றாலும் குழந்தைகளுக்காகச் செய்யும் அமல்களிலும், செலவுகளிலும் நன்மையுண்டு.
என்பதை பின் வரும் அறிவிப்புகளிலிருந்து விளங்கலாம். இதன் அடிப்படையில் குழந்தைக்கு ''பிஸ்மில்லாஹ்'' கூறி உணவு ஊட்டினால் அதற்கான நன்மையும் கிடைக்கும்.
ஒரு பெண்மணி தம் குழந்தையை உயர்த்திக்காட்டி, ''அல்லாஹ்வின் தூதரே! இவனுக்கும் ஹஜ் உண்டா? என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ''ஆம்'' (அதற்காக) உனக்கும் நற்பலன் உண்டு'' என விடையளித்தார்கள். அறிவிப்பவர் இப்னு அப்பாஸ் (ரலி) (நூல் - முஸ்லிம் 2597)
நபி (ஸல்) அவர்களிடம் நான், இறைத்தூதர் அவர்களே! (என் முதல் கணவரான) அபூ ஸலமாவின் குழந்தைகளுக்குச் செலவழிப்பதற்காக எனக்கு நன்மையுண்டா? அவர்களும் என்னுடைய குழந்தைகளே! எனக் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'நீ அவர்களுக்காகச் செலவு செய்! அவர்களுக்காக நீ செலவு செய்ததற்கான நன்மை உனக்குண்டு" எனக் கூறினார்கள். அறிவிப்பவர் உம்மு ஸலமா (ரலி) (நூல் - புகாரி 1467)

(அல்லாஹ் மிக அறிந்தவன்)
0 comments:
Post a Comment