We have been working in UAE for low salary and struggle. There are more brothers away from their family due to financial problems. To overcome this issues there a business in UAE by which we can get some additional income to manage to keep our family with us in very less investment, which is not cost of you mobile and will not affect our current job. To know about the business please spare half hour in your valuable time. No entrance fee for training and presentation. For further please call me or mail me 0559570963 and kindrahman@yahoo.com

நீங்கள் எங்கிருந்தபோதிலும்

مُّشَيَّدَةٍ 4.78 “நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே! 4.78 15:99 وَاعْبُدْ رَبَّكَ حَتَّىٰ يَأْتِيَكَ الْيَقِينُ 15:99. உமக்கு மரணம் வரும்வரை உமது இறைவனை வணங்குவீராக! 6 22.6 وَهُوَ الَّذِي أَحْيَاكُمْ ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ يُحْيِيكُمْ ۗ إِنَّ الْإِنسَانَ لَكَفُورٌ 22:66. இன்னும்: அவன்தான் உங்களை வாழச் செய்கிறான்; பிறகு அவனே மரணம் அடையச் செய்கிறான். அதன் பின்னர் அவனே உங்களை உயிர்ப்பிப்பவன் (எனினும்) நிச்சயமாக மனிதன் நன்றிகெட்டவனாக இருக்கிறான். 23:99 حَتَّىٰ إِذَا جَاءَ أَحَدَهُمُ الْمَوْتُ قَالَ رَبِّ ارْجِعُونِ 23:99. அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது, அவன்: “என் இறைவனே! என்னைத் திரும்ப (உலகுக்குத்) திருப்பி அனுப்புவாயாக!” என்று கூறுவான். 45:26 قُلِ اللَّهُ يُحْيِيكُمْ ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ يَجْمَعُكُمْ إِلَىٰ يَوْمِ الْقِيَامَةِ لَا رَيْبَ فِيهِ وَلَٰكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ 45:26. “அல்லாஹ் உங்களுக்கு உயிர் கொடுக்கிறான்; பின்னர் அவனே உங்களை மரணம் அடையச் செய்கிறான்; பின்னர் கியாம நாளன்று அவன் உங்களை ஒன்று சேர்ப்பான் - இதில் சந்தேகமேயில்லை” எனினும் மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள் என்று (நபியே!) நீர் கூறும். ! by Mujibur's family

அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகதுஹு... யா அல்லாஹ்! உன்னை அதிகம் ஞாபகம் செய்யக்கூடியவராகவும், உனக்கு மிகவும் நன்றி செலுத்தக்கூடியவராகவும், உனக்கு அதிகம் வழிபடுபவராகவும், கட்டுப்படுபவராகவும், அடிபணிபவராகவும் என்னை ஆக்கியருள்வாயக! என் தவ்பாவை ஏற்றுக் கொள்வாயாக! என் பாவத்தைப் போக்கி விடுவாயாக! என் பிரார்த்தனையை ஏற்றுக் கொள்வாயாக! எனக்குரிய ஆதாரத்தை உறுதிப்படுத்துவாயாக! என் உள்ளத்திற்கு நேர்வழி காட்டுவாயாக! என் நாவை பலப்படுத்துவாயாக! என் உள்ளத்தின் கசடுகளை அகற்றிவிடுவாயாக!. !

family

Wednesday, 23 March 2011

தம்பி அமைத்த அரங்கத்தில் அண்ணன் நடத்தும் ஓரங்க நாடகம்

(டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி, பிஎச்.டி, ஐ.பீ.எஸ்(ஓ)
 
20.3.2011 அன்று காலையில் சர்வதேச செய்தியில் கொட்டை எழுத்தில் காட்டப்பட்ட செய்தி அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலியின் கூட்டுப்படையினர் ஐக்கிய நாடுகளின் சபையின் 1973ஆம் தீர்மானத்தின் படி 19.3.2011 இரவு(ஒடிசி டாண்) என்ற பெயரிட்ட 110 ஏவுகணைகள் லிபியா தலைநகர் திரிப்போலியில் தாக்குதல் நடத்தின, அதன் விளைவாக அந்த நகரில் அப்பாவி மக்கள் 40 பலியானதாகவும், நூற்றுக்கு மேற்பட்டோர் காயம் பட்டதாகவும் நடுநிலையாளர்களுக்கு அதிர்ச்சியைத் தந்தது. அந்தத் தாக்குதல் நடத்த நொண்டிக்காரணம் லிபியாவின் தென் பகுதியான பெங்காசி போன்ற பகுதியிலுள்ள சியா இன மக்கள் உரிமை ஆர்ப்பாட்டத்தினை ஆயுதங்கள் கொண்டு ஒடுக்குவதாக குற்றச்சாட்டு. இந்தத் தீர்மானத்திற்கு சீனா, ரஷ்யாபோன்ற நிரந்தர உறுப்பினர் எதிர்ப்பு தெரிவித்தாலும் கூட்டுப்படையினர் விடாமல் போர்தொடுத்துள்ளனர். அதற்கு ரஷ்யாவின் வெளிவிவகார செய்தியாளர் அலெக்ஸாண்டர், ‘கூட்டுப்படையின் தாக்குதல் வருத்தமளிக்கிறது. லிபியாவின் உள் விவகாரத்தினை அந்த மக்களே தான் தீர்த்துக் கொள்ள வேண்டும். அதனை விட்டு அயல் நாடுகள் தலையிட்டு கண்டபடி ஏவுகணைகளை ஏவுவது கண்டனத்திற்குரியதுஎன்று சொல்லியுள்ளார். இந்தியாவும் தன் பங்கிற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
அதே போன்றுதான் 2003ஆம் ஆண்டு இராக் அதிபர் சதாம் ஹ{சைன் ஆட்கொல்லி ஆயுதம் வைத்திருந்தார் என்ற பொய்யான காரணம் காட்டி படையெடுத்து அந்த நாட்டை சின்னா பின்னமாக்கியதோடு மட்டுமல்லாமல் முதலாவது அரேபிய ஷியா தேசமாக்கியது. அதன் பின்பு இப்போது அங்கு ஆட்கொல்லி ஆயுதம் எதுவமில்லை என்று கூறி வருந்துவதாக சொல்கிறது அமெரிக்காவும், பிரிட்டனும். அதற்கு முன்பாக 2001ஆம் ஆண்டு அமெரிக்காவின் இரட்டைக்கோபுர தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தானின் தாலிபான்கள் தான் காரணம் என்று அந்த நாட்டிலும் படையெடுத்து அமெரிக்கா வாழ் ஒருவரை அதிபராக்கியது. அவரும் ஈரான் சென்றபோது ஏராளமான பணத்தினை நன்றிக்கடனாக பெற்று தன்னுடனே விமானத்தில் கொண்டு வந்த கதை சந்தி சிரித்தது. இரட்டைக்கோபுர தாக்குதலுக்கு தாலிபான்கள் தான் காரணம் என்றது இன்று வரை நிரூபிக்கப்படவில்லை என்று அமெரிக்கா வாழ் நடுநிலையாளர் கோமுஸ்கி இந்தியா வந்த போது கூறுகினார் என்று அனைத்து பத்திரிக்கைகளிலும் வந்தது தெரிந்ததே!.
அது சரி, அரேபியா, ஆப்கானிஸ்தான் நாடுகளில் முஸ்லிம்கள் அதிகமாக இருந்தும் அமெரிக்காவின் கூட்டுப் படைக்கு அந்த தைரியம் எங்கிருந்து வந்தது என்ற சந்தேகம் உங்களிடையே எழலாம்.
அது தான் கோட்டைக்குள்ளே குத்து குழி பறிக்கும் வேலையில் சிலர் ஈடுபட்டதால் சுலபமாக இருந்துது. ரஸ_லல்லா உயிருடன் இருந்தபோது தனக்குப் பிறகு ஜனநாயகம் தலைத்தோங்க வேண்டுமென்பதிற்காக யாரையும் வாரிசாக நியமிக்க வில்லை. ரஸ_லல்லா இறந்ததும் ஆரம்பித்தது பதவிப்போட்டி. ரஸ_லல்லா குடும்பத்தினர் கலிபா பதவி அல(pரலி)அவரகள்களுக்குத் தான் வந்திருக்க வேண்டுமென்றனர். ஆனால் பொதுக் கருத்திற்கிணங்க ரஸ_லல்லாவின் ஆருயிர் தோழர் அபுபக்கர்(ரலி) அவர்கள் கலிபாக தேர்ந்தெடுக்கப் பட்டார்.  அதன் பின்பு வாளின் வலிமையினை இஸ்லாத்திற்கு வருவதிற்கு முன்பு மக்காவில்  உணர்த்திய உமர(ரலி); அவர்கள் இஸ்லாத்திற்கு வந்த பின்பு சாந்தமானவராய் ஆனால் நிர்வாக வல்லமை படைத்தவராய் இருநததால் கலிபாவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மகாத்மா காந்தி கூட ஒரு சமயத்தில் கலிபா உமர் போன்ற ஜனநாயக ஆட்சி இந்தியாவில் கொண்டு வர வேண்டுமென்றார். அப்படிப்பட்ட உமர் ஈரானில் கைதியாக கொண்டு வரப்பட்ட ஒருவரால் கொலை செய்யப்பட்டார். அதன் பின்பு வந்த உதுமான்(ரலி) அவர்களும் குர்ஆன் ஓதிக் கொணடிருக்கும் போது கொலை செய்யப்பட்டார். அந்தக் கொலை செய்தது அலி(ரலி) அவர்களின் ஆட்களே தான் என்று கருதி உதுமானின் உறவினரும் சிரியா கவர்னருமான மாவியா படைகளால் அலி(ரலி) அவர்களும் கலிபாவாக இருந்த போது கொல்லப்பட்டார்  என்பது வரலாறு தெரிந்த அனைவருக்கும் தெரிந்ததே!
                மாவியாவின் சந்ததியினர் கி.பி.661-750 காலங்களில் சிரியாவின் தலை நகர் டெமாஸ்கஸை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்து வந்தனர். இந்தக் காலக்ட்டத்தில் தான் அலி(ரலி) அவர்களின் அன்பு மகன்களான இமாம்கள் ஹ_சைன், ஹசன் ஆகியோர் கொல்லப்பட்டனர். அவர்கள் கொல்லப்பட்ட பின்பு அலி(ரலி) அவர்களின் உறவினர்கள் அலி அவர்களுக்கு வரவேண்டிய முதல் கலிபா பதவி அநியாயமாக மறுக்கப்பட்டதோடல்லாமல், அவரும் அவர் மகன்களும் கொல்லப்பட்டதால் அவர்கள் இஸ்லாத்திற்காக தியாகம் செய்ததால் அவர்களுக்குத் தான் முன்னுரிமை கொடுத்து ஷியாஎன்ற இயக்கம் ஆரம்பித்ததுஅதாவது அலி அவர்களின் குழுமம் என்று பெயராகும்.
                இன்றை இளைஞர்களுக்கு சுன்னி-ஷியா என்றால் என்ன வேறுபாடு தெரியாமல் இருக்க வாய்ப்புண்டு. ஆகவே முக்கிய வேறுபாடுகளைக் கூறலாம் என நினைக்கின்றேன்:
1)            சுன்னி முஸ்லிம்கள் ஹனபி, சாபி, மாலிக்கி, ஹன்பிளி என்று இருந்தாலும், ஓரிறைக் கொள்கையில் உறுதியாக இருந்து, ரஸ_லல்லாவினை இருதி நபியாக ஏற்றுக் கொண்டனர். ஆனால் ஷியாக்கள் உருவவங்கள் மூலம் இறை பக்தியினை கொண்டவர்களாக தங்கள் வீடுகளில் அலி(ரலி) அவர்களின் படங்களையம் தங்கள் இனத்தலைவர்கள் படங்களையும் வைத்து வழிபடுவதினை அனைவரும் அறிந்திருப்பீர்கள். சென்னையில் யா அலி என்று வாசமிட்ட வாகனங்களும் ஓடுவதினையும், கோசங்கள் எழுப்பப்படுவதினையும் பார்த்திருப்பீர்கள்.
2)            சுன்னி முஸ்லிம்கள் தங்கள் வழிபாடுகளில் எந்த ஆர்ப்பாட்டங்களையும் செய்வதில்லை. ஆனால் ஷியா இனத்தவர் அசுரா பன்ற பஞ்சா தூக்கி அதனை திருவிழாவாக கொண்டாடுவதினைப் பார்த்திருப்பீர்கள். பஞ்சா எதனைக் குறிக்கிறது என்றால் ரஸ_லல்லா, அவர்கள் மகளார் பாத்திமா, அலி(ரலி), இமாம்கள் ஹ_சைன், ஹசன் ஆகியோரைக் குறிக்கும் அடையாளச் சின்னமாகும். அது போன்ற ஊர்வலங்கள் பிற்காலத்தில் கிருத்துவ மதத்திலுள்ள குட் ஃபிரைடே’(புனித வெள்ளி) மற்றும் ஹிந்து மதத்திலுள்ள துர்கா பூஜையின் மறு உருவம் என்றால் மிகையாகாது. ஷியாக்கள் அது போன்ற ஊர்வலங்கள் நடத்தி இமாம் ஹ_சைன் இறந்ததிற்காக ஒரு சொட்டுக் கண்ணீர் சிந்தினால் நூறு பாவங்கள் மன்னிக்கப் படும் என்று நினைக்கின்றனர்.
3)            சுன்னி முஸ்லிம்கள் அல்லாஹ் சுபுஹானத்தாலா முகம்மது(ஸல்) அவர்களுக்கு வகி அறிவித்தது மூலம் அவர்கள் நபியாக கருதப்பட்டார் என்று நினைக்கின்றனர். ஆனால் ஷியா இனத்தவர் முகம்மது(ஸல்) அவர்கள் புனிதமானவராக இருந்ததால் குர்ஆனுக்குச் சிறப்பு ஏற்பட்டது என்று கருதுகின்றனர்.
4)            ஷியாக்கள் தர்காக்களில் இறைவன் இருப்பதாக நம்புவதால் நஜபில் உள்ள அலி(ரலி), இமாம்; _சைன் அவர்களின் அடக்கத்தலமான கர்பலா, போன்றவைகளுக்கு வருகை தந்து வழிபடுகின்றனர்.
ஆகவே தான் இராக்கின் அதிபர் சதாம் ஹ_சைன் இமாம் ஹ_சைன் இறந்த 40 நாட்கள் துக்கம் அனுசரிப்பதினை தடை செய்தார். இரான்-இராக் எட்டு வருட போருக்குக் காரணம் பல சொல்லப்பட்டாலும் சுன்னி-ஷியா தேசத்தில் யார் தலைவர் என்ற போட்டியால் ஏற்பட்டது தான் என்றால் மிகையாகாது. 1979 ஆம் ஆண்டு ஈரான் புரட்சிக்குப் பின்பு கோமேனி ஆதிக்கம் ஏற்பட்டதும் எப்படியாவது சுன்னி இஸ்லாமிய தலைமை பீடமான சௌதி அரேபியாவின் புனித தலங்களான மக்கா, மதினாவினைக் கைப்பற்ற வேண்டும் என்பதுதான்.
அதன் பின்னணி. ஒரு முறை ஹஜ் பயணத்தின் போது ஈரானின் ஷியாக்கள் மக்கா, மதினாவில் ஆர்ப்பாட்டம் செய்தது. ஆனால் சௌதி அரசாங்கம் அதனை வெற்றிகரமாக முறியடித்தது.
ஈராக்கில் அமெரிக்காவின் படை தனது முழு ஆயுத பலத்துடன் புகுந்ததும் தலை மறைவாக இருந்த சதாம் ஹ_சைன் 2003 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ந்தேதி தன் தலைமறைவு இடத்திலிருந்து ஈராக் மக்களுக்கு ஒரு செய்தியினை அனுப்பினார். ஆதில் ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்காவின் படைகள் புகுந்ததிற்கு அமெரிக்காவிற்கு வேவு பார்த்த ஐந்தாம் படையினர்தான் என்று சொல்லியுள்ளார். அதனை நிரூபிக்கும் விதமாக அமெரிக்காவின் படைகள் பாக்தாத்தில் நுழைந்ததுமே ஷியாக்கள் மலர் கொத்துக் கொடுத்து வரவேற்றனர். அது மட்டுமா தனது முதல் நடவடிக்கையாக ஈராக்கின் புதிய ஷியா அரசு ஈரானுடன் முதல் தூதரக தொடர்பினை ஏற்படுத்தியது. இதே போன்றுதான் 1982ஆம் ஆண்டு லெபனானில் இஸ்ரேயில் படை புகுந்து சுன்னி பாலஸ்தீன மக்கனை விரட்டியபோது ஷியாக்கள் இஸ்ரேயில் படை வீரர்களுக்கு பூங்கொத்துக் கொடுத்து வரவேற்றனர். இதே போன்று தான் லெபனானின் முன்னாள் பிரதமர் ரபீப் ஹரீரியை சுன்னி முஸ்லிம்கள் கொன்று விட்டனர் எனக் கூறி சிரியாவின் படைகளை அங்கிருந்து அந்திய தேசத்தின் உதவியுடன் வெளியேற்றினர் என்பது அனைவருக்கும் நினைவிருக்கும்!
இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும் ஏன் அமெரிக்கா, 2003ஆமு; ஆண்டு ஈராக் படையெடுப்பிற்குப் பின்பு மத்திய கிழக்குப் பகுதியினை ஜனநாயத்திற்கு மாற்றப்போவதாக அறிவித்தது. அதன் எதிரொலிதான் சுன்னி முஸ்லிம்கள் நாடுகளான சௌதி அரேபியா, பஹ்ரைன். ஏமன், லிபியா போன்ற நாடுகளில் மக்கள் ஆர்ப்பாட்டம் என்ற போர்வையில் நடக்கும் ஆதிக்க நாடகங்கள்.
                ஒரு நாட்டில் ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கள் கோரிக்கைக்காக அமைதியாக காந்தீய வழியில் போராட்டம் நடத்தினால் பாது காப்புத்துறையினரும் சாத்வீக முறையில் சட்டத்திற்குட்பட்டு ஒழுங்கு படுத்துபர். ஆனால் லிபியாவின் பெங்காசியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் நவீன துப்பாக்கிகள், ராணுவ டாங்கிகள், ஏவுகணைகள் போன்றவைகள் வைத்து ஆர்ப்பாட்டத்த்pல் ஈடுபடுவதினை தொலைக்காட்சி படம் பிடித்துக் காட்டுகின்றன. அந்த ஆயுதங்கள் எங்கிருந்து வந்தன?
அந்த பெங்காசியில் இங்கிலாந்தின் சிறப்புப் பாதுகாப்புப்படையினர்(எஸ்.ஏ.எஸ்) ஆறு பேர்கள்  ஒரு அயல் நாட்டுத் தூதுவரை அங்கிருந்து வெளியேற்றும் போது கைது செய்யப்பட்டுள்ளதாக ஊடகத் தகவல்கள் வெளியாயின. புpடிபட்டவர்களிடம் விசாரணை நடத்தியபோது அவர்கள் ஆர்ப்பாட்டக்காரர்களுக்குத் தேவையான ஆயுதங்கள் சப்ளை செய்ய வந்ததாக கூறியிருக்கின்றனர். அப்படி யென்றால் ஆர்ப்பாட்டக்காரர்கள் பின்னணியில் இயங்கும் சக்திகளை நீங்களே யூகித்துக் கொள்ளலாம்!
மேற்கத்திய நாடுகள் மக்கள் ஆர்ப்பாட்டம் செய்யும் ஒவ்வொரு நாடுக்கும் தங்கள் படைகளை அனுப்பியதா என்றால் இல்லையே! சில உதாரணங்களை இங்கே சொல்லுவது பொருத்தமாக இருக்கும் என நம்புகிறேன்:
1)            ஆப்பிரிக்கா நாடான ஜிம்பாவேயில் அதன் அதிபர் ராபர்ட் முகாபே வெள்ளை இன ஜமீன்தார்களிடமிருந்து நிலங்களைப் பிடுங்கி கறுப்பின மக்கறுக்குக் கொடுத்தபோது இங்கிலாந்து அரசு கூக்கிரல் போட்டதே. அப்போது ஏன் படையினை அனுப்பவில்லை?
2)            இந்திய தேசத்தில் 1984ஆம் ஆண்டு பாரதப் பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட்ட பின்பு புது டில்லியில் சீக்கியர் 2000பேர் கொல்லப்பட்டனரே அப்போது ஏன் அனுப்பவில்லை? அதன் பின்பு 2002ஆம் ஆண்டு குஜராத்தில் முஸ்லிம்கள் மோடி அரசால் கொல்லப்பட்டனரே அப்போது ஏன் அனுப்பவில்லை? ஏனென்றால் மோடி அது உள் நாட்டு விவகாரம் அதில் வெளிநாடுகள் தலையிட உரிமையில்லை என்று சொல்லிவிட்டதாக விக்கிலீக் தகவல் செய்தியாக வெளியிட்;டுள்ளதே!
3)            ரஷ்யாவில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் செசன்யாவில் மக்கள் உரிமை கேட்டு போராடிய போது ராணுவத்தால் நசுக்கப்பட்டார்களே, அப்போது ஏன் அனுப்பவில்லை?
4)            ரஷ்யாவின் முன்னாள் அதிபர் போரிஸ் எல்ட்ஸனைக் கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினார்களளே அப்பபோது போரிஸ் எல்ட்ஸன் ராணுவ டாங்கிகளை அனுப்பி பாராளுமன்றத்தினையே தகர்த்தாரே அப்போது மேற்கு நாடுகள் ஏன் அங்கு படைகளை அனுப்பி ஜனநாயக உரிமையினைக் காக்கவில்லை?
5)            சீனாவில் பிரபலமான மாசே துங் சதுக்கத்தில(;டினா மென் ஸ்கொயர்) ஜனநாயகத்திற்காக குரல் கொடுத்து பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் போராட்டம் நடத்திபோது ராணுவ டாங்கிகளைக் கொண்டு அவரிகளை நசுக்கியதே அப்போது ஏன் கூட்டுப்டைகளை அனுப்பவில்லை? அதே போன்று திபேத்தில் புத்த பிக்குகள் தனி நாடு கேட்டுப் போராடிய போது சீனா அவர்களை ராணுவம் கொண்டு புத்த பிக்குகள் என்றும் பாராது ஒருக்கியதே அப்போது எங்கே போனது கூட்டு நாடுகளின் வீரம்?
6)            அமெரிக்காவின் நட்பு நாடான தென்கொரியாவின் போர்கப்பலை வடகொரியாவின் நீர் மூழ்கி கப்பலிருந்த ஏவப்பட்ட ஏவுகணை மூழ்கடித்து நாற்பதுக்கு மேற்பட்ட நேவி அதிகாரிகள் செத்தார்களே அப்போது ஏன் வடகொரியா மீது படையெடுக்க வில்லை;.
ஏனென்றால் அந்த நாடுகளிளெல்லாம் கூட்டுப்படையினர் தலையிட்டால் வியட்நாமில் நடந்தது போல பின்னடைவு ஏற்படுமென்று பயந்ததால் அங்கெல்லாம் தலையிடவில்லை. ஆனால் இஸ்லாமிய ஆப்பிரிக்கா கண்டத்திலுள்ள லிபியாவில் மட்டும் ஏன், எப்படி கூட்டுப்படையினர் தலையிடுகின்றனர் என்றால் அந்த நாட்டிலேயே ஐந்தாம் படை கூலிப்படைகள் இருப்பதாலும், அந்த நாடு ஒரு சுன்னி முஸ்லிம் நாடாக இருப்பதாலும், அங்கே இன்னும் கண்டு பிடிக்க முடியாத எண்ணெய் வளங்கள் ஏராளமாக இருப்பதாலும் மேற்கத்திய நாடுகள் ஒன்றுடன் ஒன்று போட்டிப் போட்டுக் கொண்டு போரில் இறங்கியுள்ளன. அதற்கு மேற்கத்திய நாடுகளின் கைக்கூலிகள் தூபம் போடுகின்றன. ஏனென்றால் லிபியாவின் கடாபி நீக்கப்பட்டு இன்னொரு ஆப்பிரிக்கா ஷியா நாடு வழி வகுக்கலாம் என எண்ணுகின்றனர். ஆகவே தான் கூட்டுப்படையின் லிபியாவில் ஜனநாயக பாதுகாப்பு நடவடிக்கை என்ற நொண்டிச்சாக்கினை திரும்பத் திரும்ப சொல்கிறது.
சென்ற 11.3.2011 அன்று ஜப்பானில் ஏற்பட்ட பூகம்பத்தாலும், சுனாமியாலும் 200 பில்லியன் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும், ஆனால் அந்த இழப்பினை சரிகட்ட வல்லரசுகளின் தாராள மனப்பான்மை மிகவும் குறைவாக இருப்பதாக உலக வங்கியின் முக்கிய நிர்வாகி சொன்னதாக ஊடகங்கள் கூறியிருக்கின்றன. எப்படி அவர்களுக்கு பாதிக்கப்பட்டவர்களுக்க உதவ மனசு வரும் அவர்களுக்கு முன்னால் இருக்கும் ஒரே கொள்கை என்ன வென்றால் எப்படியாவது லிபியாவின் இரும்பு மனிதரை இன்னொரு ஈராக்கின் சதாம் ஹ_சைன் போல சிறைப்பிடித்து தூக்கிலடப்பட வேண்டும் அதன் மூலம் பொம்மை ஷியா அரசினை ஆப்பிரிக்கா கண்டத்தில் நிலை நிறுத்தி, எண்ணெய் வளத்தினை சுரண்ட வேண்டும் என்பதுதான் அவர்கள் குறிக்கோள்.
புனித குர்ஆனில் 105ஆவது அத்தியாயத்தில் யானை யுத்தம் என்ற பகுதியில் வல்ல நாயன், ‘எவ்வாறு  இறை மறுப்பாளர்கள் யானைப்படையினைக் கொண்டு யுத்தம் செய்தபோது அவர்களை சிட்டுக்குருவி வாயில் எரியும் கல் துண்டுகளை விட்டு எறியச் செய்து யானைப்படையினை பொசுக்கி வறுத்த சோளப்பயிர் போல ஆக்கினேன் என்பதினை நீங்கள் அறியவில்லையா? என்றான். அதே போன்று அநியாயமாக போர் தொடுக்கும் மேற்கத்திய நாடுகளின் படைகளை பொசுக்கி இஸ்லாமிய நாடான லிபியாவினைக் காப்பாற்ற வேண்டி இரு கையேந்தி துவா செய்ய வேண்டும் என்றால் சரிதானே என் சொந்தங்களே!
Download As PDF

Facebook Comments

0 comments:

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out