We have been working in UAE for low salary and struggle. There are more brothers away from their family due to financial problems. To overcome this issues there a business in UAE by which we can get some additional income to manage to keep our family with us in very less investment, which is not cost of you mobile and will not affect our current job. To know about the business please spare half hour in your valuable time. No entrance fee for training and presentation. For further please call me or mail me 0559570963 and kindrahman@yahoo.com

நீங்கள் எங்கிருந்தபோதிலும்

مُّشَيَّدَةٍ 4.78 “நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே! 4.78 15:99 وَاعْبُدْ رَبَّكَ حَتَّىٰ يَأْتِيَكَ الْيَقِينُ 15:99. உமக்கு மரணம் வரும்வரை உமது இறைவனை வணங்குவீராக! 6 22.6 وَهُوَ الَّذِي أَحْيَاكُمْ ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ يُحْيِيكُمْ ۗ إِنَّ الْإِنسَانَ لَكَفُورٌ 22:66. இன்னும்: அவன்தான் உங்களை வாழச் செய்கிறான்; பிறகு அவனே மரணம் அடையச் செய்கிறான். அதன் பின்னர் அவனே உங்களை உயிர்ப்பிப்பவன் (எனினும்) நிச்சயமாக மனிதன் நன்றிகெட்டவனாக இருக்கிறான். 23:99 حَتَّىٰ إِذَا جَاءَ أَحَدَهُمُ الْمَوْتُ قَالَ رَبِّ ارْجِعُونِ 23:99. அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது, அவன்: “என் இறைவனே! என்னைத் திரும்ப (உலகுக்குத்) திருப்பி அனுப்புவாயாக!” என்று கூறுவான். 45:26 قُلِ اللَّهُ يُحْيِيكُمْ ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ يَجْمَعُكُمْ إِلَىٰ يَوْمِ الْقِيَامَةِ لَا رَيْبَ فِيهِ وَلَٰكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ 45:26. “அல்லாஹ் உங்களுக்கு உயிர் கொடுக்கிறான்; பின்னர் அவனே உங்களை மரணம் அடையச் செய்கிறான்; பின்னர் கியாம நாளன்று அவன் உங்களை ஒன்று சேர்ப்பான் - இதில் சந்தேகமேயில்லை” எனினும் மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள் என்று (நபியே!) நீர் கூறும். ! by Mujibur's family

அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகதுஹு... யா அல்லாஹ்! உன்னை அதிகம் ஞாபகம் செய்யக்கூடியவராகவும், உனக்கு மிகவும் நன்றி செலுத்தக்கூடியவராகவும், உனக்கு அதிகம் வழிபடுபவராகவும், கட்டுப்படுபவராகவும், அடிபணிபவராகவும் என்னை ஆக்கியருள்வாயக! என் தவ்பாவை ஏற்றுக் கொள்வாயாக! என் பாவத்தைப் போக்கி விடுவாயாக! என் பிரார்த்தனையை ஏற்றுக் கொள்வாயாக! எனக்குரிய ஆதாரத்தை உறுதிப்படுத்துவாயாக! என் உள்ளத்திற்கு நேர்வழி காட்டுவாயாக! என் நாவை பலப்படுத்துவாயாக! என் உள்ளத்தின் கசடுகளை அகற்றிவிடுவாயாக!. !

family

Wednesday 1 December 2010

ஓர் ஓசையற்ற பயணம்!


காலம்: அனைத்து கிழமை நாட்களிலும்
பயணி பற்றிய விபரம்:
தகுதியானோர் : ஆதமின் மகன்!
மூல உற்பத்தி : களிமண்!
விலாசம் : பூமியின் மேற்பகுதி!பயணச் சீட்டு பற்றிய விபரம்:
பயண வழி : ஒன்வே ஒன்லி (ஒற்றைப் பயணம் மட்டும், திரும்பும் சீட்டு கிடையாது)!
விலை : முற்றாக இலவசம்!
முற்பதிவு : ஏற்கனவே செய்யப்பட்டு விட்டது!
பொதி(சுமை) பற்றிய விபரம்:
ஒவ்வொரு விமானத்திலும் ஒரு பயணி மட்டுமே அனுமதி!
கூடுதலாக 5 மீட்டர் வெள்ளைத் துணியும் சிறிய அளவு காட்டனும் எடுத்துக் கொள்ளலாம்!பெறுமதி வாய்ந்த பொதி பற்றிய விபரம்:
மனத்தூய்மையுடன் நிறைவேற்றப்பட்ட தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ், தர்மங்கள்,
சத்தியத்திற்காக செய்த தியாகங்கள்,
குழந்தைகளை நல்லவர்களாக ஆக்க எடுத்துக் கொண்ட உண்மையான கரிசணைகள் மற்றும்
இது போன்ற நற்காரியங்கள் மட்டும்.பயணம் பற்றிய விபரம்:
பயணத்தளம் : பூமியின் எந்தப் பகுதியுமாக இருக்கலாம்.
பயணிக்கும் நேரம் : மரணத்தைத் தொடர்ந்து!
இறங்கும் இடம் : மறு உலகம்.
குறிப்பு: பயணச் சீட்டு, கடவுச் சீட்டு, பிரயாண ஆவணங்கள் போன்ற எதுவும் தேவையில்லை. தயாராக மட்டும் இருந்து கொண்டால் போதுமானது!தங்குமிட வசதி:
தற்காலிகமாக மட்டும் ஏற்பாடு செய்யப்படும்!!
அறையின் அளவு : கிட்டத்தட்ட 2 அடி அகளமும் 6 அடி நீளமுமாகும்!
அறையின் சிறப்பம்சம் : வெரும் புழுதி மணலினாலும் சிறிய கற்களினாலும் அமைக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது!
தங்குமிட வசதி பற்றிய விபரம் : பணக்காரனாக இருந்தாலும் ஏழையாக இருந்தாலும் ஒரே வகையான வசதி மட்டும்தான் ஏற்பாடு செய்யப்படும் என்பதை தயவு செய்து கவணத்திற் கொள்க!கீழ்காணும் செளகரியங்கள் காணப்படும் :
குளிரூட்டி (ஏ.சி) : 0 டொன் !!!
நீர் விநியோகம் : கிடையாது !!!
மின் விநியோகம் : கிடையாது !!!
தொலை பேசி : கிடையாது !!!
டீ.வி மற்றும் சேனல்கள் : சுவனம் அல்லது நரகம் !!!
பத்திரிக்கைகள் அல்லது புத்தகஙகள் : கிடையாது !!!
ரூம் சர்விஸ் : அல்லாஹ்வுக்கு எந்தளவு கட்டுப்பட்டு நடந்தோம் என்பதைப் பொருத்து அமையும்!முக்கிய கவணத்திற்கு :
அனைத்து பயணிகளும் மேற் கூறப்பட்ட விடயங்கள் அனைத்தையும் தயவு செய்து கவணத்திற் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்!
பயணச் சீட்டு ரத்துச் செய்யப்படடுவதோ அல்லது பிறருக்கு மாற்றுவதோ முற்று முழுதாக தடை செய்யப்பட்டுள்ளது!
எனவே, தயவு செய்து அனைவரும் (விதிவிலக்கு கிடையவே கிடையாது) பயணத்திற்கு தயாராக இருந்து கொள்ளும் படி கேட்டுக் கொள்கின்றோம்.
மலக்குல் மெளத் எனப்படும் உயிரைக் கைப்பற்றும் வனவர் வந்தவுடன் பயணம் ஆரம்பமாகும் என்பதையும் அறியத்தருகின்றோம்!மேலதிக தகவல்களுக்கு: உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அல்-குர்ஆன் மற்றும் ஸுன்னாவை படிக்கவும். 
Download As PDF

Facebook Comments

0 comments:

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out